- Home
- Astrology
- Nov 15 Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கும்.! கவனமா இருங்க.!
Nov 15 Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கும்.! கவனமா இருங்க.!
Nov 15 Magara Rasi Palan : நவம்பர் 15, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் 15, 2025 மகர ராசிக்கான பலன்கள்:
மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் மனதளவில் சிறிது சஞ்சலம், குழப்பம், அவசர நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. நிதானம் தேவை. பெரும்பாலான கிரகங்கள் சாதகமாக இருப்பினும் சந்திராஷ்டம் காரணமாக எச்சரிக்கை அவசியம். சிறிய விஷயங்களில் கூட தாமதம் ஏற்படலாம். எனவே பொறுமையாக இருங்கள். ஆரோக்கியத் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.
நிதி நிலைமை:
குடும்ப செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு தேவையான பண வரத்து இருக்கும். வரவுக்கு ஏற்ற செலவுகளும் இருக்கும். பெரிய நிதி அபாயங்களை தவிர்க்கவும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது. முதலீடுகள் செய்வதற்கு முன்னர் கவனத்துடன் இருக்க வேண்டும். பங்குச் சந்தைகளில் முதலீடு செய்பவர்கள் சந்தை அபாயங்களை கருத்தில் கொண்டு செயல்படுங்கள்.
தனிப்பட்ட வாழ்க்கை:
இன்று வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். குடும்ப உறுப்பினரும் பேசும் பொழுது பேச்சிலும், செயலிலும் கூடுதல் கவனம் தேவை. பிள்ளைகள் தொடர்பான கவலைகள் ஏற்படலாம். ஆனால் அவற்றை அனைத்தையும் சமாளிப்பீர்கள்.
பரிகாரங்கள்:
குழந்தைகள் வாழ்வில் ஏற்படும் இன்னல்கள் தீர வராஹி தேவியை வழிபடுவது நல்லது. இது சஞ்சலங்களை குறைத்து வெற்றிக்கு வழிவகுக்கும். மற்றவர்கள் பிரச்சனையில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. கோயிலின் வெளியில் அமர்ந்திருக்கும் யாசகர்களுக்கு அன்னதானம் வழங்குவது நேர்மறை பலன்களை கூட்டும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.