- Home
- Astrology
- Astrology: ஒரே ராசியில் சந்திக்கும் நண்பர்கள்.! திரிகிரஹி யோகத்தால் ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசிகள்.!
Astrology: ஒரே ராசியில் சந்திக்கும் நண்பர்கள்.! திரிகிரஹி யோகத்தால் ராஜ வாழ்க்கை வாழப்போகும் ராசிகள்.!
Trigrahi Yog 2025: நவம்பர் 16, 2025 விருச்சிக ராசியில் சூரியன், செவ்வாய், புதன் ஆகிய மூன்று கிரகங்கள் இணைகின்றன. இந்த அரிய கிரக சேர்க்கை ஜோதிட ரீதியாக ‘திரிகிரஹி யோகம்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக சில ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது.

திரிகிரஹி யோகம் 2025
நவம்பரில் பல கிரகங்கள் தங்கள் நிலைகளை மாற்றி ராஜயோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் விருச்சிக ராசியில் மூன்று கிரகங்கள் ஒன்றாக சந்திக்க இருக்கின்றனர். கிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான் தனது சொந்த ராசியான விருச்சிக ராசியில் பயணித்து வருகிறார். விருச்சிக ராசியில் கிரகங்களின் இளவரசனான புதனும் சஞ்சுரித்துள்ளார். இந்த இணைப்பு முக்கியமானதாக கருதப்பட்ட நிலையில் நவம்பர் 16ஆம் தேதி கிரகங்களின் ராஜாவான சூரியனும் விருச்சிக ராசிக்குள் நுழைய இருக்கிறார்.
இந்த மூன்று சுப கிரகங்களின் இணைப்பானது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும் சூரியனின் வருகை மங்களாதித்ய யோகத்தையும், புதாத்திய யோகத்தையும் உருவாக்குகிறது. மேலும் இந்த மூன்று கிரகங்கள் இணைப்பால் உருவாகும் திரிகிரஹி யோகம் சில ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மையை அளிக்க உள்ளது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் இந்த யோகம் உருவாவதன் காரணமாக விருச்சிக ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மையைப் பெறுவீர்கள். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமைத் திறன் மெருகேறும். தடைபட்டு நின்று போன காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
புதிய முயற்சிகளை தொடங்கவும் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் இது சாதகமான காலமாகும். செவ்வாய் பகவானின் ஆட்சி காரணமாக இந்த ராசியில் பிறந்தவர்கள் சொத்து அல்லது புதிய வாகனங்களை வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். வங்கிக்கடன் பெறுவதிலும் வெற்றி பெறுவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் ஐந்தாம் வீட்டில் உருவாகிறது. ஐந்தாம் வீடு பூர்வ புண்ணிய ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இது கல்வி, காதல், குழந்தைகள், முதலீடு ஆகியவற்றை குறிக்கும் வீடாகும். இந்த காலகட்டத்தில் மாணவர்களுக்கு படிப்பில் சிறப்பான கவனம் கிடைக்கும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. படைப்பாற்றல் மற்றும் அறிவார்ந்த திறன் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் அல்லது குழந்தைகள் மூலம் சுப செய்திகள் வந்து சேரலாம்.
மகரம்
இந்த யோகம் மகர ராசியின் 11-வது வீட்டில் நடைபெற இருக்கிறது. அது லாப ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இந்த வீடு வருமானம், மூத்த சகோதரர்கள், ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கிறது. எனவே மகர ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் எதிர்பாராத பண வரவு, பல வழிகளில் இருந்து வருமானம் கிடைத்தல் போன்ற நன்மைகளை அனுபவிப்பீர்கள். உங்களின் நீண்ட கால ஆசைகள் மற்றும் விருப்பங்கள் நிறைவேறும். தொழிலில் முன்னேற்றமும், அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.
கும்பம்
திரிகிரஹி யோகமானது கும்ப ராசியின் பத்தாவது வீடான தொழில் ஸ்தானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த வீடானது தொழில், கௌரவம், கர்ம பலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இடமாகும். எனவே கும்ப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் தொழில் மற்றும் உத்தியோகத்தில் பெரிய முன்னேற்றங்களை காண்பீர்கள். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். அரசாங்கம் சார்ந்த விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)