MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • தலைவிதியே மாறப்போகுது.. மே மாதத்தில் சனி-புதன் அருளால் கோடீஸ்வரராகும் 5 ராசிகள்.. உங்க ராசி இருக்கா?

தலைவிதியே மாறப்போகுது.. மே மாதத்தில் சனி-புதன் அருளால் கோடீஸ்வரராகும் 5 ராசிகள்.. உங்க ராசி இருக்கா?

Saturn-Mercury Conjunction 2026: சனி-புதன் கைகோர்ப்பதால் மே மாதத்தில் லாப திருஷ்டி யோகம் உண்டாகிறது. இதனால் பெரும் யோகத்தை காணப்போகும் 5 ராசிகள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

3 Min read
Author : Rayar r
Published : Apr 30 2026, 02:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
சனி, புதன் கைகோர்ப்பதால் லாப திருஷ்டி யோகம்
Image Credit : AI

சனி, புதன் கைகோர்ப்பதால் லாப திருஷ்டி யோகம்

ஜோதிட சாஸ்திரங்களின்படி நவக்கிரங்கள் அமரும் இடத்தை பொறுத்தும், அவை ஒன்றையொன்று பார்க்கும் விதத்தை பொறுத்தும் மனித வாழ்க்கையில் சுப காரியங்கள் மற்றும் அசுப காரியங்கள் ஏற்படுகின்றன. அந்த வகையில் மே மாதத்தில் 'கிரகங்களின் இளவரசன்' என்று அழைக்கப்படும் புதனும், தர்மத்தின் காவலனாக விளங்கும் சனி பகவானும் ஒரு வலியமையான யோகத்தை உருவாக்க போகிறார்கள். அதாவது சனியும், புதனும் இணைவதால் 'லாப திருஷ்டி யோகம்' உருவாக உள்ளது. இந்த யோகத்தினால் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையை தலைகீழாக மாறி அதிர்ஷ்ட மழை பொழியப் போகிறது. அந்த 5 ராசிகள் என்னென்ன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

26
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

சனி, புதன் கூட்டணியால் மேஷ ராசிக்காரர்களுக்கு நற்பலன்கள் கிடைக்க போகிறது. உங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருந்த முட்டுக்கட்டைகள் அனைத்தும் விலகும். பணியிடங்களில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலும் உங்கள் உழைப்புக்கு உரிய அங்கீகாரமும், மேலதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். தொழில் புரிபவர்களுக்கு எடுக்கும் முடிவுகள் சாதகமாகவும், லாபமும் கிடைக்கும். கூட்டுத்தொழிலும் சாதகமாக அமையும். இந்த காலக்கட்டத்தில் உங்கள் பேச்சாற்றல் மேம்படும். தன்னம்பிக்கை வளரும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை மேலோங்கும். சனிக்கிழமைகளில் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் யோகத்தின் முழு பலன்களையும் அனுபவிக்க முடியும்.

Related Articles

Related image1
தடைகளைத் தகர்த்து முன்னேறும் கும்ப ராசி: மே மாதத்தில் காத்திருக்கும் அதிரடி மாற்றங்கள்..!
Related image2
ரிஷப ராசி மே மாத பலன்கள் 2026: ரிஷபத்திற்கு லாபமா? நஷ்டமா? - கிரக நிலைகள் சொல்லும் திடுக்கிடும் ரகசியங்கள்!
36
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

புதன், சனி சேர்க்கையால் கன்னி ராசியினருக்கு பொருளாதர வளர்ச்சி மட்டுமின்றி மன அமைதியும் ஏற்பட போகிறது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த கடன்கள் கைக்கு வைத்து ஆச்சரியப்பட வைக்கும். வங்கி இருப்பு உயரும். செலவுகள் குறைந்து சேமிப்பு உயரும். பணியிடங்களில் புதிய பொறுப்புகள் தேடி வரும். நிலம் தொடர்பான சிக்கல்கள் சுமூகமாக முடிவுக்கு வரும். மிக முக்கியமாக இந்த காலக்கட்டத்தில் உங்களை வாட்டி வதைத்த குழப்பங்கள் விலகி மனதில் புதிய தெளிவு பிறக்கும். மாணவர்களுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். நீண்ட நாள் உடல் உபாதைகளும் முடிவுக்கு வரும். புதன்கிழமைகளில் பசுவிற்கு பச்சை புல் அல்லது அகத்திக்கீரை வழங்குவது உங்கள் யோகத்தை இரட்டிப்பாக்கும்.

46
துலாம்
Image Credit : Asianet News

துலாம்

புதனும், சனியும் சங்கமிப்பதால் துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கைத் தரம் உயரப் போகிறது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமண பேச்சுகள் கைகூடி வரும். நீங்கள் கலைஞராகவோ அல்லது எழுத்தாளராகவோ இருந்தால் புதிய யோசனைகள் உங்களுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுக்கும். புதிய வாகனங்கள், ஆடை அல்லது ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். தொழில் புரிபவர்களுக்கு பெரிய அளவிலான ஒப்பந்தங்கல் கையெழுத்தாகும். சனிக்கிழமைகளில் பறவைகளுக்குத் தானியங்கள் வைப்பது உங்கள் யோகத்தை வலுப்படுத்தும்.

56
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

சனி பகவான் புதனுடன் இணைவது மகர ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித்தரப் போகிறது. எந்த ஒரு காரியத்திலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தேடித் தரும். சமூகத்தில் அதிகாரமிக்கவர்களின் தொடர்பு கிடைக்கும். நிதிப்பிரச்சனைகள் தீர்ந்து பணம் பல வழிகளிலும் வந்து பையை நிரப்பும். உங்களின் ஆளுமைத் திறன் வெளிப்படும். கடினமான வேலைகளை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். பங்குச்சந்தை முதலீடுகள் லாபத்தை அள்ளிக் கொடுக்கும். தந்தை அல்லது தாய் வழி உறவுகளிடம் இருந்து பூர்விக சொத்துகள் கிடைக்கும். உடல் ஊனமுற்றோர்க்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் சனி பகவானின் முழுமையான அருளை பெற முடியும்.

66
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

சனி, புதன் கைகோர்ப்பதால் கும்ப ராசிக்காரர்களுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப் போகிறார்கள். எதிர்பாராத இடங்களில் இருந்தும் பணம் வந்து உங்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தும். எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேலோங்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் தங்கள் முயற்சிக்கான பலன்களை பெறலாம். வெளிநாடு செல்ல முயற்சி எடுப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. வாக்கு வன்மை வலுப்படும். ஏழை மாணவர்களின் கல்வி செலவிற்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்தால் சனி - புதன் யோகத்தின் பலனை நீண்ட காலத்திற்குத் தக்கவைக்கும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mercury Transit : சித்ரா பௌர்ணமி நாளில் புதன் அஸ்தமனம்.! இந்த 3 ராசிகளுக்கு ஜாக்பாட், பண மழை கொட்டப் போகுது.!
Recommended image2
மேஷத்தில் புதன் பெயர்ச்சி 2026: இந்த 12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது யாருக்கு? பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
Recommended image3
Pillow Vastu: காதல் பிரச்சனையா? பணக்கஷ்டமா? தலையணைக்கு அடியில் இதை வையுங்க போதும்!
Related Stories
Recommended image1
தடைகளைத் தகர்த்து முன்னேறும் கும்ப ராசி: மே மாதத்தில் காத்திருக்கும் அதிரடி மாற்றங்கள்..!
Recommended image2
ரிஷப ராசி மே மாத பலன்கள் 2026: ரிஷபத்திற்கு லாபமா? நஷ்டமா? - கிரக நிலைகள் சொல்லும் திடுக்கிடும் ரகசியங்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved