- Home
- Astrology
- குபேரன் ஆசி பெற்ற அந்த 4 ராசிகள் இவைதான்.! இவங்களுக்கு தங்க புதையல் கிடைக்குமாம்.! உங்க ராசி இருக்கா?
குபேரன் ஆசி பெற்ற அந்த 4 ராசிகள் இவைதான்.! இவங்களுக்கு தங்க புதையல் கிடைக்குமாம்.! உங்க ராசி இருக்கா?
lord kubera favourite zodiac signs: ஜோதிடத்தின்படி செல்வத்தின் அதிபதியான குபேரன் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்குவதாக நம்பப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

குபேரனுக்கு பிடித்த ராசிகள்
இந்து மத நம்பிக்கைகளின் படி குபேர பகவான் செல்வத்தின் அதிபதியாக விளங்குகிறார். அவரது அருள் இருப்பவர்களுக்கு வாழ்வில் வறுமை நீங்கி யோகமும் அதிர்ஷ்டமும் பெருகும் என்பது நம்பிக்கை. குபேரன் சில ராசிகளுக்கு அதிக முக்கியத்துவத்தையும், ஆசீர்வாதத்தையும் வழங்குவதாக நம்பப்படுகிறது. குபேரனுக்கு பிடித்தமான ராசிகள் குறித்தும், அதற்கான காரணங்கள் குறித்தும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
1.ரிஷபம்
ரிஷப ராசியை சுக்கிர பகவான் ஆள்கிறார். சுக்கிர பகவான் சுகபோகங்களுக்கும், ஆடம்பரங்களுக்கும், செல்வங்களுக்கும் காரகராவார். குபேரனுக்கும் சுக்கிரனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ரிஷப ராசியினர் கடின உழைப்பாளிகள், விடாமுயற்சிக் கொண்டவர்கள், ஆடம்பரத்தை விரும்புபவர்கள். இவர்களது பொறுமையும், நிதானமான அணுகுமுறையும் குபேரனுக்கு மிகவும் பிடிக்கும். இதனால் இவர்களுக்கு சொத்து சேர்க்கையும், திடீர் பணவரவும் உண்டாகும்.
2.கடகம்
கடக ராசியின் அதிபதியாக சந்திர பகவான் விளங்கி வருகிறார். ஜோதிடத்தில் சந்திரன் மனதின் காரகராவார். இவர்கள் இயற்கையிலேயே உதவும் குணம் கொண்டவர்களாக விளங்குகின்றன. குபேரன் தனது செல்வத்தை பிறருடன. பகிர்ந்து கொள்ளும் தாராளமனம் கொண்டவர்களுக்கு அள்ளிக் கொடுப்பார். இந்த ராசியினரின் நேர்மையான உழைப்பும், சேமிக்கும் பழக்கமும் இவர்களுக்கு குபேரனின் அருளை பெற்றுத் தருகிறது. இவர்களுக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
3.துலாம்
துலாம் ராசியின் அதிபதியாக சுக்கிர பகவான் விளங்கி வருகிறார். இவர்கள் தராசு போன்ற சமநிலையை கொண்டவர்கள். திட்டமிட்டு அனைத்து காரியங்களையும் செய்பவர்கள். பணத்தை எப்படி முதலீடு செய்வது? பணத்தை எப்படி பெருக்குவது என்பதில் அவர்களுக்கு இயற்கையிலேயே ஞானம் இருக்கும். ஆடம்பரம் மற்றும் நேர்த்தியை விரும்பும் இவர்களுக்கு குபேரன் செல்வத்தை வாரி வழங்குகிறார். இவர்களது சாதுரியமான பேச்சு, நிர்வாகத் திறன் இவர்களை தொழிலதிபர்களாக மாற்றுகிறது.
4. தனுசு
தனுசு ராசியின் அதிபதியாக குரு பகவான் விளங்குகிறார். குருவை ‘தனகாரகன்’ (செல்வத்தை கொடுப்பவர்) என்று அழைப்பதுண்டு. குபேரன் சிவபெருமானின் நண்பராகவும், குருவின் அருளைப் பெற்றவராகவும் கருதப்படுகிறார். தனுசு ராசியினர் ஆன்மீகத்திலும், தர்ம சிந்தனையிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். ‘கொடுக்க கொடுக்க தான் செல்வம் பெருகும்’ என்ற நம்பிக்கை இவர்களுக்கு உண்டு. எனவே குபேரனின் அருள் எப்போதும் இவர்கள் மீது இருந்து கொண்டே இருக்கும். இவர்களது நேர்மறை எண்ணங்கள் செல்வத்தை இவர்கள் பக்கம் ஈர்க்கும்.
குபேரனின் அருளைப் பெற பரிகாரங்கள்
குபேரன் வடக்கு திசையின் அதிபதியாக விளங்கி வருகிறார். எனவே வீட்டின் வடக்குப் பகுதியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். குபேரனுக்கு பச்சை நிறம் மிகவும் உகந்தது. எனவே பச்சை நிறப் பொருட்கள் அல்லது பச்சை நிறப. பணப்பையை பயன்படுத்துவது செல்வத்தை ஈர்க்கும். "ஓம் யக்ஷாய குபேராய வைஷ்ரவணாய தனதான்யாதிபதயே தனதான்ய ஸம்ருத்திம் மே தேஹி தாபய ஸ்வாஹா" என்ற மந்திரத்தை உச்சரிப்பது சிறப்பு.
குறிப்பு: நீங்கள் இந்த ராசிகளில் பிறந்திருக்காவிட்டாலும் கவலைப்படத் தேவையில்லை. நேர்மையான உழைப்பும், சிக்கனமும், பிறருக்கு உதவும் குணமும் இருந்தால் அவர்களிடம் குபேரன் நிரந்தரமாக தங்குவார்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

