- Home
- Astrology
- Astrology: இந்த மாதம் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்.! இந்த 4 ராசிக்காரர்கள் பணக்காரர்களா மாறப்போறீங்க.!
Astrology: இந்த மாதம் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்.! இந்த 4 ராசிக்காரர்கள் பணக்காரர்களா மாறப்போறீங்க.!
ஜோதிடத்தில் கிரகங்கள் உருவாக்கும் ராஜ யோகங்கள் ராசிகளுக்கு நல்ல பலன்களைத் தருகின்றன. அந்த வகையில் ஒரு வருடத்திற்கு பின்னர் லட்சுமி நாராயண யோகம் உருவாகி சில ராசிகளுக்கு சுப பலன்களை தரவுள்ளது.

லட்சுமி நாராயண யோகம் 2025
ஜோதிட சாஸ்திரத்தின் படி கிரகங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. அப்படி மாறும் பொழுது பிற கிரகங்களுடன் சேர்ந்து சில ராஜ யோகங்களை உருவாக்குகின்றன. அந்த வகையில் 12 மாதங்களுக்குப் பிறகு சுக்கிரன், புதனுடன் இணைந்து கடக ராசியில் லட்சுமி நாராயண ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதன் விளைவாக அடுத்த 30 நாட்களுக்கு அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் நல்ல மாற்றங்கள் நிகழவுள்ளது. ஆகஸ்ட் 21 ஆம் தேதி கடக ராசியில் சுக்கிரன் சஞ்சரிக்கும் பொழுது இந்த யோகம் உருவாகிறது. இதனால் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி, செழிப்பு, செல்வம் ஆகிய நேர்மறையான மாற்றங்கள் கிடைக்க உள்ளது. அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
லட்சுமி நாராயண யோகத்தால் கிடைக்கும் பலன்கள்
ஜோதிடத்தை பொருத்தவரை புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய இரு கிரகங்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. புதன் புத்திசாலித்தனம், பேச்சு, பகுத்தறிவு, வியாபாரம் ஆகியவற்றை குறிக்கும் கிரகமாகும். சுக்கிரன் செல்வம், காதல், ஆடம்பரம், கலைகள் மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை குறிக்கிறது. புதன் விஷ்ணுவையும், சுக்கிரன் லட்சுமி தேவியையும் குறிப்பதால் இந்த கிரகங்களின் சேர்க்கை லட்சுமி நாராயண யோகம் என்று அழைக்கப்படுகிறது. இந்த யோகம் ஒருவரின் ஜாதகத்தில் அமையும் பொழுது அது செல்வத்தையும், அதிர்ஷ்டத்தையும் அள்ளித் தரும் என நம்பப்படுகிறது. லட்சுமி நாராயண ராஜ யோகத்தால் நிதி நிலையில் பெரும் மாற்றம் ஏற்படும். எதிர்பாராத பண வரவு, முதலீடுகளில் லாபம், வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, புதிய வேலைகள், புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் ஆகியவை கிடைக்கும்.
கடக ராசி
கடக ராசியில் லட்சுமி நாராயண ராஜ யோகம் உருவாவதால் கடக ராசிக்காரர்களுக்கு அடுத்த 30 நாட்கள் சிறப்பானதாக அமையும். உங்கள் தொழிலில் நீங்கள் எதிர்பாராத பலன்களைப் பெறலாம். பண வரவு அதிகரிக்கும். நிதிநிலை மேம்படும். வருமானம் உயரும். மன அமைதி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும் தன்னம்பிக்கை அதிகரிக்கும். திருமணமானவர்களுக்கு அற்புதமான வாழ்க்கை கிடைக்கும். சமூகத்தில் மரியாதையும், கௌரவம் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு புதிய பதவி உயர்வு, பொறுப்புகள் கிடைக்கலாம். அதிர்ஷ்டம் முழுமையாக உங்கள் பக்கம் இருக்கும்.
ரிஷபம் மற்றும் துலாம்
லட்சுமி நாராயண ராஜ யோகம் ரிஷப ராசிக்கும் பல பலன்களை தர உள்ளது. புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலையில் சம்பள உயர்வுடன் பதவி உயர்வும் கிடைக்கலாம். தொழில் முனைவோருக்கு நல்ல நேரம், எதிர்பார்த்த வெற்றிக்கு வழி பிறக்கலாம். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமானதாக அமையும். அதேபோல் துலாம் ராசி காரர்களுக்கும் இந்த ராஜயோகம் பல பலன்களை தரவுள்ளது் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வேகம் எடுக்கலாம். எழுத்து, ஊடகம் அல்லது மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பு பலன்கள் கிடைக்கும். தந்தையுடன் உறவு வலுப்படும். வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். வேலைக்குச் செல்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். தொழில் முனைவோருக்கு இந்த காலம் சாதகமாக அமையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
விருச்சிக ராசி
லட்சுமி நாராயண ராஜ யோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்களை கொடுக்க உள்ளது. இவர்கள் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். சிக்கிய பணம் மீண்டும் கைக்கு கிடைக்கலாம். இதன் காரணமாக நிதிநிலை மேம்படும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளைப் பெறலாம். சொந்தமாக தொழில் செய்து வருபவர்களுக்கு வியாபாரம் பெருகும் வருமானம் அதிகரிக்கும். லாபம் பெருகும். சுக்கிரனின் தாக்கம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிகமாக இருப்பதால் அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். எடுத்த வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடையும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வந்து மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
(பொறுப்பு துறப்பு: மேற்குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிடர்கள் வெளியிட்டுள்ள கருத்துக்களின் அடிப்படையிலானவை மட்டுமே. இதன் நம்பகத்தன்மைக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. ஒவ்வொருவரின் ஜாதகமும் தனித்துவமானது மற்றும் அவர்களின் கிரக நிலைகள், தசா புத்திகளை பொறுத்து பலன்கள் வேறுபடலாம். எனவே உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அனுபவமிக்க ஜோதிடரை அணுகுவது நல்லது)