- Home
- Astrology
- Astrology: இந்த 5 ராசிக்காரர்கள் எளிதில் காதலை முறித்துக் கொள்வார்களாம்.! இவங்க கிட்ட உஷாரா இருக்கணும்.!
Astrology: இந்த 5 ராசிக்காரர்கள் எளிதில் காதலை முறித்துக் கொள்வார்களாம்.! இவங்க கிட்ட உஷாரா இருக்கணும்.!
குறிப்பிட்ட ராசிகளில் பிறந்தவர்கள் காதலை எளிதில் விட்டுக் கொடுத்து செல்வார்கள் என்று கூறப்படுகிறது. அதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

எளிதில் காதலை முறிக்கும் 5 ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனிப்பட்ட பண்புகள் இருக்கிறது. இந்த ராசிக்காரர்கள் சில கிரகங்களின் நிலைக்கு ஆட்படுவதால் அவர்களுக்கு என்று தனித்துவமான குணங்கள் ஏற்படுகின்றன. ஒவ்வொருவரின் குணங்களும் அவர்களின் ராசி மற்றும் அவர்களை ஆட்கொள்ளும் கிரகங்களை அடிப்படையாக வைத்து அமைகிறது. அந்த வகையில் குறிப்பிட்ட ராசியில் பிறந்தவர்கள் எளிதில் காதலை விட்டுக் கொடுத்து சென்று விடுவதாக கூறப்படுகிறது. அந்த ராசிகள் யார்? அதற்கான காரணங்கள் என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்.
கடகம்
கடக ராசியினர் பொதுவாகவே உணர்ச்சிவசப்பட்டவர்களாக இருக்கின்றனர். அவர்கள் சந்திரனால் ஆளப்படுவதால் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பலரையும் தங்கள் நட்பு வட்டத்தில் இணைத்துக் கொண்டு, சுமூகமாக செல்ல விரும்புகின்றனர். இருப்பினும் அவர்கள் காயங்களை தாங்குவதில்லை. உணர்ச்சி ரீதியாக பாதிக்கப்பட்டாலோ அல்லது தங்களுக்கு முக்கியத்துவம் இல்லை என்று கருதினாலோ தாங்களாகவே விலகிக் கொள்ளும் மனப்பான்மை உடையவர்கள். காதல் உறவுகள் தரும் தோல்விகளை தொடர்ந்து சந்திக்க முடியாத பட்சத்தில் நண்டுகள் ஓடுகளுக்குள் பதுங்கிக் கொள்வது போல ஒதுங்கிக் கொள்வார்கள். அவர்கள் பாதுகாப்பான, நம்பிக்கையான உறவுகளையே தேடுகிறார்கள். ஒரு முறை அந்த நம்பிக்கை உடைந்து விட்டால், முற்றிலும் அந்த உறவை விட்டு விலகிச் சென்று விடுவர்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இயற்கையிலேயே அறிவார்ந்த மற்றும் துடிப்பான குணம் கொண்டவர்கள். இவர்கள் பல விஷயங்களில் ஆர்வம் காட்டுவார்கள். ஒரு உறவு சலிப்பானதாக அல்லது நம்பிக்கையை இழந்ததாக மாறினால் எந்த யோசனையுமின்றி அதிலிருந்து விலகி விடுவர். இவர்களுக்கு புதிய அனுபவங்கள், புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது பிடிக்கும். ஒரு உறவில் ஒருமுறை மனக்கசப்பு ஏற்பட்டு விட்டால், அதை விட்டு முற்றிலும் விலக நினைப்பார்கள். எப்போதும் மாற்றத்தை விரும்புவார்கள். காதல் போன்ற விஷயங்களில் தங்களை முழுமையாக பிணைத்துக் கொள்வதற்கு தயங்குவார்கள். ஒரு உறவு மிகவும் தீவிரமாகவோ அல்லது தங்களை மிகவும் கட்டுப்படுத்துவதாகவோ உணரத் தொடங்கினால், அந்த உறவில் சிக்கிக் கொள்ளாமல் அதை விட்டு வேகமாக விலகிச் சென்று விடுவர்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரமான மனப்பான்மை கொண்டவர்கள். இவர்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதையும், பரந்த உலகை படிப்பதையும் விரும்புவார்கள். காதல் உறவு இவர்களின் சுதந்திரத்திற்கு தடையாக இருந்தால் அதை முறித்துக் கொள்வதற்கு தயங்க மாட்டார்கள். இவர்களுக்கு சுதந்திரம் தான் எல்லாவற்றையும் விட முக்கியம். தங்களை யாராவது கட்டுப்படுத்துவதை இவர்கள் விரும்புவதில்லை. ஓர் உறவானது தங்கள் தனிப்பட்ட வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக உணர்ந்தால் அதிலிருந்து விலகிச் செல்வதற்கு அவர்கள் தயங்குவதில்லை. நட்பு அல்லது காதல் உறவில் நாடகத்தனம் அல்லது நம்பிக்கையின்மையை உணர்ந்தால் அந்த நிலைமை மோசமாவதற்கு முன்பு தனுசு ராசிக்காரர்கள் அந்த உறவை முறித்துக் கொண்டு வெளியேறி விடுவார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அமைதியையும், சமநிலையையும் விரும்பும் மனப்பான்மை கொண்டவர்கள். ஒரு காதல் உறவில் அதிக சண்டைகள், சிக்கல்கள், மன அழுத்தம் இருந்தால் அந்த உறவை தூக்கி எறிந்து அமைதியுடன் நகர்ந்து சென்று விடுவார்கள். ஒரு உறவில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதை திறம்பட கையாளத் திணறுவார்கள். இதனால் பிரச்சனைகளை தீர்ப்பதை விட அது அந்த உறவை முறித்துக் கொள்வது எளிது என்று நினைப்பார்கள். இவர்களுக்கு மன அமைதி மிகவும் முக்கியம். உறவில் அமைதி இல்லாத போது அந்த உறவே வேண்டாம் என்று நினைக்கக் கூடிய மனப்பான்மை கொண்டவர்கள். உறவுகளில் நல்லிணக்கம் இருக்க வேண்டும் என்பதை விரும்புகின்றனர். மோதலை வெறுக்கிறார்கள். அமைதி காக்கவே முயற்சிக்கிறார்கள். ஆனால் உறவு மிகவும் குழப்பமாக, உணர்ச்சி ரீதியாக, சமநிலையற்றதாக மாறும்பொழுது போராடுவதற்கு பதிலாக பின்வாங்கிக் சென்று விடுவார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் உணர்ச்சிபூர்வமான உறவுகளை விட அறிவுப்பூர்வமான நட்புகளை ஏற்படுத்தவே விரும்புகிறார்கள். இவர்களுக்கு பகுத்தறிவும், தனிப்பட்ட இடமும் மிகவும் முக்கியம். ஓர் உறவில் அதற்கான இடம் இல்லை என்றால் அதிலிருந்து வெளியேற தயங்குவதில்லை. இவர்கள் தங்கள் உணர்வுகளை அவ்வளவு எளிதில் வெளிப்படுத்த மாட்டார்கள். இதனால் உறவில் உணர்ச்சிபூர்வமான பிணைப்பு இல்லாதது போல் தோன்றும். இதன் காரணமாக பிரச்சனை ஏற்பட்டால் அந்த உறவுகளை முறித்துக் கொள்ளவும் அவர்கள் தயங்குவதில்லை. இவர்களுக்கு தனிப்பட்ட சுதந்திரமும், தனிப்பட்ட இடமும் மிகவும் தேவை. ஓர் உறவு இதற்கு தடையாக இருக்கும் பட்சத்தில் அந்த உறவில் இருந்து விலகுவதற்கு இவர்கள் ஒருபோதும் தயக்கம் காட்ட மாட்டார்கள்.