- Home
- Astrology
- Astrology: உருவாகும் லட்சுமி நாராயண யோகம்.! செப்.12 க்குப் பிறகு இந்த 4 ராசிகள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.!
Astrology: உருவாகும் லட்சுமி நாராயண யோகம்.! செப்.12 க்குப் பிறகு இந்த 4 ராசிகள் தொட்டதெல்லாம் பொன்னாகும்.!
இன்னும் சில தினங்களில் லட்சுமி நாராயண யோகம் உருவாக உள்ளதால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

லட்சுமி நாராயண யோகம் 2025
ஜோதிட சாஸ்திரங்களின்படி கிரகங்கள் அவ்வப்போது தங்கள் நிலையை மாற்றிக் கொள்கின்றன. இதன் காரணமாக பிற கிரகங்களுடன் இணைந்தோ அல்லது பிற கிரகங்களை குறிப்பிட்ட கோணத்தில் சந்திக்கும் பொழுதோ ராஜயோகங்கள் உருவாகும். இந்த ராஜயோகங்கள் சில ராசிகளின் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை வழங்குகின்றன. அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் சுக்கிரன் சிம்ம ராசியில் நுழையும் பொழுது, புதன் பகவான் கன்னி ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக லட்சுமி நாராயண யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் நான்கு ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெற உள்ளனர் அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
லட்சுமி நாராயண யோகம் உருவாவதன் விளைவாக செப்டம்பர் 12 ஆம் தேதிக்குப் பின்னர் மேஷ ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அவர்களுக்கு பொருளாதார ரீதியான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் தொழில் மற்றும் நிதி துறைகளில் புதிய வாய்ப்புகள் உருவாக உள்ளது. புதிய தொழில் செய்ய விரும்புவர்கள் அதற்கான முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். முதலீடுகள் மற்றும் வணிக விரிவாக்கம் ஆகியவை வெற்றியைத் தரும். எதிர்பாராத பணவரவு மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட முன்னேற்றங்கள் ஏற்படலாம். செவ்வாய்க்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவது, தாமரை மலர்களால் அர்ச்சனை செய்வது லட்சுமி நாராயண பூஜை செய்வது நல்ல பலன்களை தரும்.
மிதுனம்
லட்சுமி நாராயண யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களை அளிக்க உள்ளது. இந்த யோகம் மிதுன ராசிக்காரர்களுக்கு ஆன்மீகம் மற்றும் நிதி வளர்ச்சியை வழங்கும். உங்கள் வருமானத்தை அதிகரிக்கவும், புதிய தொழில் வாய்ப்புகளை பெறவும் உதவும். வேலை மாற்றம் அல்லது பதவி உயர்வு ஆகியவற்றை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். குடும்பத்தில் செலவுகள் இருந்தாலும் உங்கள் நிதி நிலைமை மேம்படும். நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து தீர்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் பொருத்தமான துணையை கண்டறிய முடியும். கடின உழைப்பிற்கான பலன்கள் தேடி வரும். லட்சுமி நாராயண மந்திரத்தை ஜெபிப்பது நன்மை தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகம் நல்ல அனுகூலத்தை வழங்கும். இந்த யோகம் தொழில் மற்றும் நிதித்துறையில் பெரிய மாற்றங்களை உருவாக்கும். உங்கள் தொழில்முறை திறமைகளை வெளிப்படுத்த இந்த யோகம் உதவும். புதிய முதலீடுகள், சொத்து வாங்குதல் ஆகியவை வெற்றிகரமாக முடியும். எதிர்பாராத நிதி ஆதாயங்கள் உண்டாகும். தொழிலில் இதுவரை போட்டியாளர்களாக இருந்தவர்கள் தாமாக விலகிச் செல்வார்கள். எதிரிகள் கூட இந்த நேரத்தில் உங்களிடம் இருந்து விலகுவார்கள். இதனால் உங்கள் தொழிலில் போட்டி குறைந்து லாபம் அதிகரிக்கும். பணவரவு இரட்டிப்பாகும். அதிக வருமானத்தை ஈட்டுவதன் மூலம் நிதி நிலைமை மேம்படும். குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். விநாயகருக்கு அருகம்புல் சாற்றி நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நன்மைகளைத் தரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு லட்சுமி நாராயண யோகம் செல்வம் மற்றும் மகிழ்ச்சியை வழங்கும். இந்த யோகம் உங்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை உருவாக்கும். தொழில் வளர்ச்சி, வணிக விரிவாக்கம், புதிய திட்டங்கள் ஆகியவை வெற்றியைத் தரும். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் நடக்கும். உங்கள் மன ஆரோக்கியம் மேம்படும். கடந்த காலத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகி மன மகிழ்ச்சி மேம்படும். பணியிடத்தில் உங்களுக்கு ஆதரவான சூழல் நிலவும். வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் அல்லது தொழிலை உருவாக்கும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாழக்கிழமைகளில் விஷ்ணு பகவானுக்கு துளசி இலைகளால் அர்ச்சனை செய்து, நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள்.
பரிகாரங்கள்
லட்சுமி நாராயண யோகத்தின் பலன்களை முழுமையாகப் பெற மேலும் சில பரிகாரங்களை செய்யலாம். லட்சுமி தேவிக்கு பால், தேன் மற்றும் மலர்களால் அபிஷேகம் செய்து லட்சுமி நாராயண மந்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் ஆகியவற்றை பாராயணம் செய்வது செல்வத்தை ஈர்க்கும். ஏழைகளுக்கு உணவு, உடை மற்றும் உதவி செய்வது இந்த யோகத்தின் பலன்களை அதிகரிக்கும். “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்ரீம் மகாலட்சுமி நாராயணாய நமஹ” என்கிற மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். இந்த யோகம் மேற்குறிப்பிடப்பட்ட ராசிகளுக்கு நிதி செழிப்பு, தொழில் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை வழங்கும். இந்த யோகம் உங்களின் நிதி மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் புதிய உயரங்களை எட்டுவதற்கு உதவும்.
(குறிப்பு: இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் ஜோதிட கருத்துக்கள் அடிப்படையிலானது மட்டுமே. இதன் நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகமும் மாறுபடும் என்பதால் அனுபவமிக்க ஜோதிடரை அணுகி கலந்தாலோசிப்பது நல்லது)