- Home
- Astrology
- Astrology: குரு-புதன் நடத்தும் அற்புதம்.! அடுத்த சில நாட்களில் 3 ராசிக்காரர்களின் தலைவிதியே மாறும்.!
Astrology: குரு-புதன் நடத்தும் அற்புதம்.! அடுத்த சில நாட்களில் 3 ராசிக்காரர்களின் தலைவிதியே மாறும்.!
ஜோதிட சாஸ்திரங்களின்படி செப்டம்பர் 4 ஆம் தேதி குரு மற்றும் புதன் ஒருவருக்கொருவர் 45 டிகிரியில் சந்திப்பதால் அர்த்தகேந்திர யோகம் உருவாகிறது.

அர்த்தகேந்திர யோகம்
ஜோதிட சாஸ்திரங்களின்படி கிரகங்களின் இணைப்பு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட இடைவெளியில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைகின்றன. தேவர்களின் குருவான குரு பகவான் தற்போது மிதுன ராசியில் அமர்ந்துள்ளார். இவர் ஒரு ராசியில் 13 மாதங்கள் தங்கி, பின்னர் மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இந்த நேரத்தில் குரு ஒரு கிரகத்துடன் இணைவது அல்லது பிற கிரகங்களை பார்வையிடுவது மூலம் யோகங்களை உருவாக்குகிறார்.
அந்த வகையில் செப்டம்பர் 4 ஆம் தேதி பிற்பகல் 2:07 மணிக்கு குரு சிம்ம ராசியில் இருக்கும் புதனை 45 டிகிரியில் சந்திக்கிறார். இதன் காரணமாக அர்த்தகேந்திர யோகம் உருவாகிறது. இந்த யோகத்தால் அடுத்த சில நாட்களுக்கு சில ராசிக்காரர்கள் நல்ல பலனடைய உள்ளனர். அவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்
புதன் மற்றும் குரு இணைந்த உருவாக்கும் அர்த்தகேந்திர யோகம் ரிஷப ராசிக்காரர்களுக்கு நல்ல நன்மை பயக்கும். குரு லக்னத்திலும், புதன் நான்காவது வீட்டிலும் இருப்பதால் இந்த யோகம் உருவாகிறது இதனால் ரிஷப ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நேர்மையான மாற்றங்கள் ஏற்படும். சொத்து வாங்குதல், புதிய வீடு, மனை வாங்குதல் தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவார்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம். வேலையில்லாமல் புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல இடத்தில் கிடைக்கும். நிலுவையில் இருந்த பணிகள் முடிந்து சாதகமான பலன்கள் கிடைக்கும்.
சிம்மம்
குரு மற்றும் புதன் இணைந்து உருவாக்கும் அர்த்தகேந்திர யோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். வாழ்க்கையில் அனைத்து வகையான வெற்றிகளையும் பெற வாய்ப்பு உள்ளது. புதிய வருமானம் மற்றும் லாபம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. உங்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிப்பதை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள். பணம் சம்பாதிக்கவும், பணத்தை பெருக்கவும் நல்ல வாய்ப்பு கிடைக்கும். புதிய வேலையை தொடங்க இருப்பவர்களுக்கு வரவிருக்கும் காலம் மங்களகரமானதாகவும், நல்லதாகவும் இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு குரு மற்றும் புதன் இணைந்து உருவாக்கிய அர்த்த கேந்திர யோகம் சுப பலன்களை தரும். நீங்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவை பெறுவீர்கள். நீண்ட நாட்களாக திட்டமிட்டு முடிக்காமல் இருந்த பணிகள் முடிவடையும். உங்கள் செயல் திறன் அதிகரிக்கும். பொருளாதார ரீதியாக இந்த பெயர்ச்சி உங்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். வெளிநாடு செல்ல ஆர்வம் உள்ளவர்களின் விருப்பம் நிறைவேறும். படிப்பு, தொழில், தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம் என அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள்.
(குறிப்பு: இந்த தகவல்கள் ஜோதிட ரீதியாக பெறப்பட்டவை மட்டுமே. ஒவ்வொருவரின் ஜாதகமும் வேறுபடும் என்பதால் கூடுதல் தகவல்களுக்கு அனுபவமிக்க ஜோதிடரை கலந்தாலோசிப்பது நல்லது)