- Home
- Astrology
- Nov 07 Today Rasi Palan: கும்ப ராசி நேயர்களே, இன்று பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கும்.! கவனமா இருங்க.!
Nov 07 Today Rasi Palan: கும்ப ராசி நேயர்களே, இன்று பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கும்.! கவனமா இருங்க.!
Today Rasi Palan : நவம்பர் 07, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் 07, 2025 கும்ப ராசிக்கான பலன்கள்:
கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாள் நீங்கள் அடைய வேண்டிய இலக்குகளுக்காக சிலவற்றை தியாகம் செய்ய நேரிடலாம். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். அவசரம் காட்டுதல் கூடாது. பணிகளை குறித்த நேரத்தில் முடிப்பது சவாலானதாக இருக்கலாம். எனவே முறையான திட்டமிடல் அவசியம். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
நிதி நிலைமை:
இன்றைய தினம் நிதி நிலைமை சீராக இருக்கும். அதிக அளவில் பண வரவை எதிர்பார்க்க முடியாது. பண பரிவர்த்தனைகள் அல்லது பணப்புழக்கம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. பணத்தை இழப்பதற்கான வாய்ப்புகள் அல்லது நிதி சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப உறவுகளுடன் இன்று சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே நிதானம் தேவை. வீண் வாக்குவாதங்களால் பகை வளரும் என்பதால் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் மற்றும் அவர்கள் சார்ந்த மகிழ்ச்சியான செய்திகளை கேட்க நேரிடலாம். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
பரிகாரங்கள்:
இன்று ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து விடுபடுவதற்கு சிவபெருமானை மனதார வழிபடுங்கள். சிவாலயங்களுக்குச் சென்று தியானத்தில் ஈடுபடுவது நல்லது. சிவாலயங்களில் இருக்கும் மரங்களுக்கு நீர் ஊற்றுவது நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.