- Home
- Astrology
- Kumba Rasi Palan Nov 21: கும்ப ராசி நேயர்களே, இன்று வாயில் தான் கண்டம்.! வாயை மட்டும் திறந்துடாதீங்க.!
Kumba Rasi Palan Nov 21: கும்ப ராசி நேயர்களே, இன்று வாயில் தான் கண்டம்.! வாயை மட்டும் திறந்துடாதீங்க.!
Nov 21 Kumba Rasi Palan: நவம்பர் 21, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் 21, 2025 கும்ப ராசிக்கான பலன்கள்:
கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாள் சந்திர பகவானின் நிலை சாதகமாக இல்லை. எனவே முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. ஒருவித அலைச்சல் அல்லது தேவையற்ற மனக்குழப்பம் ஏற்படலாம்.
ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிறிய உடல் உபாதைகளை அலட்சியப்படுத்தக் கூடாது. தேவையற்ற பயணங்களை தவிர்த்து விட வேண்டும். வார்த்தைகளில் நிதானமும், செயல்களில் பொறுமையும் அவசியம்.
நிதி நிலைமை:
எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணத்தை திட்டமிட்டு செலவு செய்வது அவசியம். புதிய முதலீடுகள் அல்லது பெரிய பண பரிவர்த்தனைகளை இன்றைய தினம் செய்ய வேண்டாம். அதேபோல் கடன் வாங்குதல் அல்லது கடன் கொடுத்தல் ஆகியவற்றை தவிர்க்கவும். நிலுவைத் தொகையை வசூலிப்பதில் சிரமங்கள் ஏற்படலாம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப உறுப்பினர்களுடன் பேசுவதற்கு முன்னர் வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுக்கவும். சிறு சண்டைகள் வந்து போகலாம். உங்களின் தனிப்பட்ட ரகசியங்களை பிறருடன் பகிர்வதை தவிர்த்து விடுங்கள். அன்பானவர்களிடம் பேசும் பொழுது நிதானமாக பேச வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். துணையுடன் நல்லிணக்கத்தை பேண கூடுதல் முயற்சி தேவைப்படும்.
பரிகாரங்கள்:
இன்று வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமி தாயாரை வழிபடலாம். ஆஞ்சநேயரை வழிபடுவது மன தைரியத்தை அதிகரிக்க உதவும். சந்திரன் தரும் அலைச்சலை குறைக்க சிவ வழிபாடு உகந்தது. காகங்களுக்கு உணவு வைப்பது அல்லது ஏழைகளுக்கு உணவளிப்பது நல்லது.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

