சிம்மத்தில் கேது: 3 ராசிகளுக்கு இனி வசந்த காலம் தான்!
Ketu Transit in Leo Palan in Tamil : ஜோதிட சாஸ்திரத்தின் படி, ராகு, கேது ஆகியவை பாப கிரகங்கள். இவை சுப பலன்களை விட அதிகமாக கஷ்டங்களை ஏற்படுத்துவதாக கருதப்படுகின்றன. ஆனால் ஒவ்வொரு ஜாதகத்திலும் இது பாதகமான பலன்களை மட்டுமே தரும் என்று கூற முடியாது.

சிம்ம ராசியில் கேது பெயர்ச்சி
Ketu Transit in Leo Palan in Tamil : 2025 மே 18 அன்று கேது சிம்ம ராசியில் பிரவேசிக்க உள்ளார். இது மெதுவாக பயணிக்கும் கிரகம். சனி கிரகம் போல இதன் சஞ்சார பலன் நீண்ட காலம் இருக்கும். சிம்ம ராசியில் கேதுவின் பயணம் ரிஷபம், துலாம், கடக ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களைத் தரும்.
கடக ராசி:
கடக ராசிக்காரர்கள் இந்த காலத்தில் மேற்கொள்ளும் எந்தப் பணியும் வெற்றி பெறும். குறிப்பாக நிதி நிலையில் சுப பலன்கள் கிடைக்கும். வியாபாரம், முதலீடுகளில் லாபம் கிடைக்கும். வேலை பார்க்கும் நபர்களுக்கு முன்னேற்றம் உண்டு. அடுத்த ஒன்றரை ஆண்டுகள் சிறப்பானதாக இருக்கும்.
ரிஷப ராசி:
ரிஷப ராசிக்காரர்களுக்கு கேது ராசி மாற்றம் நிதி ரீதியாக மிகவும் லாபகரமாக இருக்கும். எதிர்பாராத வருமான வழிகள் திறக்கும். புதிய பொருட்கள், வாகனங்கள், சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வேலை பார்க்கும் நபர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். தொழில் முன்னேற்றத்தில் இது ஒரு முக்கியமான கட்டமாக அமையும்.
துலாம் ராசி:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த கேது பெயர்ச்சி அதிர்ஷ்டத்தைத் தரும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் இப்போது நிறைவேறும். முதலீடுகளிலிருந்து லாபம் கிடைக்கும். வேலைகளில் முன்னேற்ற வாய்ப்புகள் தென்படும். சமூகத்தில் மரியாதை, புகழ் அதிகரிக்கும். இந்த காலம் வெற்றிகளின் காலமாக இருக்கும்.