- Home
- Astrology
- Astrology: உருவாகும் கால யோகம்.! 5 ராசிகள் வீட்டில் சுப காரியங்கள் நடக்கப் போகுதாம்.! உங்க ராசி இருக்கா?
Astrology: உருவாகும் கால யோகம்.! 5 ராசிகள் வீட்டில் சுப காரியங்கள் நடக்கப் போகுதாம்.! உங்க ராசி இருக்கா?
Kala Yog 2025: அக்டோபர் இரண்டாவது வாரம் உருவாக இருக்கும் கால யோகத்தால் சில ராசிக்காரர்கள் வீட்டில் சுப காரியங்கள் நடக்க இருக்கிறதாம். அந்த ராசிகள் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கால யோகம் 2025
அக்டோபர் 6 முதல் 12 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பல கிரகங்களின் மாற்றங்கள் அல்லது சேர்க்கைகள் நடைபெற இருக்கிறது. இந்த வாரத்தில் சுக்கிரன் சிம்மத்திலும், சந்திரன் கும்ப ராசியிலும் இருக்கின்றனர். இதன் காரணமாக கால யோகம் உருவாகிறது. இதன் காரணமாக சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பிரகாசிக்க உள்ளது.
மேஷம், சிம்மம் உள்ளிட்ட ஐந்து ராசிக்காரர்கள் கால யோகத்தால் எதிர்பாராத வெற்றி, பதவி உயர்வு, கௌரவம் ஆகியவற்றையும் பெற உள்ளனர். அந்த ஐந்து அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
அக்டோபர் இரண்டாவது வாரத்தில் உருவாகும் கால யோகத்தால் மேஷ ராசிக்காரர்கள் நன்மைகளை அனுபவிப்பீர்கள். இந்த வாரம் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை, தொழில் வாழ்க்கை இரண்டிலும் முன்னேற்றம் கிடைக்கும். இந்த வாரத்தில் தொழில் ரீதியாக நீங்கள் பயணம் செல்ல நேரிடலாம். இது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
பதவி உயர்வுக்காக காத்திருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கலாம். புதிய வேலையை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கலாம். வணிக ஒப்பந்தங்கள் மூலம் நல்ல லாபத்தை காண்பீர்கள். நிலம், கட்டிடம், சொத்துக்கள் ஆகியவற்றில் முதலீடுகளை தொடங்குவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு அக்டோபர் இரண்டாவது வாரம் மிகவும் சாதகமாக இருக்கும். நீதிமன்றத்தில் வழக்காடிக் கொண்டிருப்பவர்களுக்கு தீர்ப்புகள் சாதகமாக கிடைக்கும். இதன் காரணமாக உங்கள் கவலைகள் தீரும். வெளிநாட்டிற்காக வேலை அல்லது படிப்புக்காக தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வேலைப்பளு குறைந்து மன அமைதி கிடைக்கும்.
தொழில் அல்லது பணியிடத்தில் இருந்த எதிரிகளை இந்த வாரம் தோற்கடிப்பீர்கள். குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை அனைத்தும் மகிழ்ச்சிகரமானதாக மாறும். எந்த ஒரு ஒப்பந்தத்திலும் கையொப்பமிடுவதற்கு முன்னர் கவனமாக படித்து அதன் பின்னர் செய்யவும்.
துலாம்
அக்டோபர் இரண்டாவது வாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் வாரமாக இருக்கும். இந்த வாரத்தின் தொடக்கத்திலேயே உங்களுக்கு மிகப்பெரிய பதவிகள் அல்லது பொறுப்புகள் கிடைக்கக்கூடும். வணிகம் தொடர்பாக நீங்கள் வெளிநாடு வரை பயணங்களை மேற்கொள்வீர்கள். வணிக ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.
பல வழிகளில் சிக்கி இருந்த பணம் உங்கள் கைக்கு வந்து சேரும். பூர்வீக சொத்துக்கள், பரம்பரை சொத்துக்கள் மூலம் பணம் கிடைக்கலாம். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரங்களை அனுபவிப்பீர்கள். இதுவரை உங்கள் மனதை வாட்டி வதைத்து வந்த சிக்கல்களுக்கு முடிவு காண்பீர்கள்.
விருச்சிகம்
கால யோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி வழங்க இருக்கிறது. விருச்சிக ராசியைச் சேர்ந்த பெண்கள் பணியிடத்தில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைவீர்கள். வேலையில் மட்டுமல்லாமல் குடும்பத்திலும் உங்களின் மரியாதை அதிகரிக்கும். வணிகம் செய்து வருபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். மன அமைதி கிடைக்கும்.
சிறு சிறு கடன்களை அடைத்து மன நிம்மதி அடைவீர்கள். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கலாம். தங்கள் பிள்ளைகளுக்கு வரம் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் முடியும். துணையுடனான உறவு இந்த வாரம் வலுப்படும்.
தனுசு
அக்டோபர் இரண்டாவது வாரம் தனுசு ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தரும். தொழில் போட்டியில் இருந்த உங்கள் எதிரிகளை தோற்கடிப்பீர்கள். உங்களுக்கு எதிராக நடக்கும் சதிகளை முறியடித்து வெற்றி காண்பீர்கள். உங்களுக்கும், உங்கள் வாழ்க்கை துணைக்கும் இடையே தவறான புரிதல்களை ஏற்படுத்த சிலர் முயற்சி செய்வார்கள். அனைத்தையும் முறியடித்து வெற்றியை நாட்டுவீர்கள்.
உங்கள் துணையிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவீர்கள். பணத்தை தேவையில்லாமல் செலவு செய்வதை விட்டுவிட்டு நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். நிதி ரீதியான சரியான திட்டமிடல்களை தொடங்குவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)