- Home
- Astrology
- Astrology: அதிசார குரு பெயர்ச்சி 2025 - 5 ராசிகள் மீது விழும் குருவின் பார்வை.! செல்வம் குவியப் போகுது.!
Astrology: அதிசார குரு பெயர்ச்சி 2025 - 5 ராசிகள் மீது விழும் குருவின் பார்வை.! செல்வம் குவியப் போகுது.!
Athisara guru peyarchi 2025: அக்டோபர் 18, 2025 அன்று குரு பகவான் கடக ராசிக்குள் நுழைய இருக்கிறார். தீபாவளிக்கு இரு நாள் முன்பு நடக்கும் இந்த பெயர்ச்சியால் ஐந்து ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மாற்றங்கள் நிகழவுள்ளது.

அதிசார குரு பெயர்ச்சி 2025
ஜோதிட சாஸ்திரங்களின்படி குரு பகவான் மங்களகரமான கிரகமாக அறியப்படுகிறார். இவர் அறிவு, ஞானம், மகிழ்ச்சி, அதிர்ஷ்டத்தை அளிக்கும் கிரகமாக அறியப்படுகிறார். அக்டோபர் 18, 2025 தீபாவளிக்கு இரு நாள் முன்னதாக குரு பகவான் கடக ராசிக்குள் நுழைய இருக்கிறார். இதன் காரணமாக 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் நிகழவுள்ளது. இருப்பினும் ஐந்து ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி மிகவும் நன்மைகளை வழங்க உள்ளது. அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1.மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் குருவின் அதிசார பெயர்ச்சியால் மிகுந்த நன்மைகளை அடைய உள்ளனர். இந்த யோகம் உங்களுக்கு நிதி ஆதாயத்திற்கான பல வழிகளை திறக்க உள்ளது. புதிய வணிகம் அல்லது வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உங்கள் நிதி நிலைமை வலுப்படும். சிலர் பழைய கால கசப்புகளை மறந்து புதிய பயணத்தை தொடங்குவீர்கள். அமைதியும், மகிழ்ச்சியும் பெருகும். இந்த மாற்றம் உங்கள் சிந்தனையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரும். புதிய நம்பிக்கை மற்றும் உற்சாகத்துடன் உங்களுடைய பயணத்தை தொடங்குவீர்கள்.
2.கன்னி
குருவின் கடக ராசி பெயர்ச்சியானது கன்னி ராசிக்கு மிகுந்த பலன்களை தரும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்கள் பக்கம் இருக்கும். உங்கள் செல்வம் அபரிமிதமாக அதிகரிக்கும். பல வழிகளில் சிக்கி இருந்த பணத்தை மீட்டெடுப்பீர்கள். பல நாட்களாக எதிர்பார்த்து இருந்த கடன் உதவி அல்லது பணம் கைக்கு வந்து சேரலாம். வீடு கார் வாங்குவதற்கான வாய்ப்புகளும், தொழில் முன்னேற்றம் அடையும். வாழ்க்கையில் அடுத்தடுத்த படிகளை அடைவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கும். வேலை மற்றும் வணிகம் செய்து வருபவர்கள் புதிய வழிகளை காண்பீர்கள்.
3.விருச்சிகம்
குருவின் பெயர்ச்சியானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மைகளை அள்ளிக் கொடுக்கும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். நீங்கள் எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி உங்களுக்கு கிடைக்கலாம். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியால் நிறைந்திருக்கும். பெரிய முயற்சிகளை எடுத்து அதில் வெற்றி பெறுவீர்கள். லாபகரமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும் காலம் நெருங்கி உள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மகிழ்ச்சியான செய்திகளை கேட்பீர்கள். தாய் மற்றும் தந்தை வழி உறவுகள் மூலம் சுப செய்திகள் கிடைக்கும்.
4.மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு குரு பகவான் புதிய நிதி ஆதாயத்திற்கான வழிகளை திறக்க இருக்கிறார். தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்களை பெறுவீர்கள். வணிகம் செய்து வருபவர்கள் அரசாங்க ஒப்பந்தங்களின் மூலம் நல்ல லாபத்தை பெறுவீர்கள். நிதி நிலைமை கணிசமாக மேம்படும். வேலையில்லாமல் தவித்து வருபவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் கிடைக்கும். வருமானத்தை பெருக்கும் பாதைகள் தெளிவாக தெரியும். இதன் காரணமாக நிதி கவலைகள் குறைந்து மனதில் அமைதி நிலவும்.
5.மீனம்
குருவின் இந்த பெயர்ச்சியானது மீன ராசிக்காரர்களுக்கு நிம்மதியை தரவுள்ளது. கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான காலத்தை அனுபவிப்பீர்கள். நிலுவையில் கடந்த பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள். ஏதாவது ஒரு வேலையை தொடங்கி பாதியிலேயே விடுபட்டிருந்தால் அது வெற்றிகரமாக நிறைவடையும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தேர்வுகள் அல்லது நேர்காணல்களில் வெற்றி பெறும் வாய்ப்புகளும் அதிகரிக்கும். இந்த காலம் உங்களுக்கு புதிய நம்பிக்கையும், உற்சாகத்தையும் நேர்மறையான மாற்றங்களையும் கொண்டு வரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)