- Home
- Astrology
- Astrology: தொடங்கப் போகும் சுக்கிர திசை.! பொன், பொருள், சொத்துக்களை குவிக்கப் போகும் ராசிகள்.!
Astrology: தொடங்கப் போகும் சுக்கிர திசை.! பொன், பொருள், சொத்துக்களை குவிக்கப் போகும் ராசிகள்.!
Neech Bhang Rajyog: 12 மாதங்களுக்குப் பிறகு அசுரர்களின் குருவான சுக்கிர பகவான் கன்னி ராசியில் நுழைந்து நீச் பங்க் ராஜயோகத்தை உருவாக்குகிறார். இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் சிறப்பு நன்மைகளை பெற உள்ளனர். அது குறித்து பதிவில் பார்க்கலாம்.

கன்னி ராசிக்குள் நுழையும் சுக்கிரன்
நவகிரகங்களில் சுக்கிர பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம், திருமணம், காதல், இன்பம் ஆகியவற்றின் காரகராக கருதப்படுகிறார். இவர் ஒரு ராசியில் சுமார் 26 நாட்கள் வரை தங்குகிறார். எனவே 12 ராசியின் சுழற்சியை முடித்து மீண்டும் அதே ராசிக்கு திரும்புவதற்கு தோராயமாக ஒரு வருடம் ஆகிறது. அந்த வகையில் தற்போது அவர் அக்டோபர் 9 ஆம் தேதி புதன் பகவான் ஆளும் கன்னி ராசிக்குள் நுழைய இருக்கிறார்.
சுக்கிரன் சூரியன் சேர்க்கை
ஜோதிடத்தின்படி சுக்கிர பகவான் அக்டோபர் 9 ஆம் தேதி காலை 10:55 மணிக்கு கன்னி ராசியில் நுழைகிறார். புதன் ஆளும் கன்னி ராசி சுக்கிர பகவானின் பலவீனமான ராசியாக கருதப்படுகிறது. இருப்பினும் கன்னி ராசியில் சூரிய பகவான் பயணித்து வரும் நிலையில், சுக்கிரன் பலவீனமான ராசியில் நுழைந்தாலும் நல்ல கிரகத்துடன் இணையும் பொழுது நீச் பங்க் ராஜயோகத்தை உருவாகிறது. இந்த ராஜயோகம் மூன்று ராசிகளுக்கு சிறப்பான பலன்களை தரவுள்ளது.
கன்னி
கன்னி ராசியின் லக்ன வீட்டில் நீச் பங்க் ராஜயோகம் உருவாகிறது இதன் காரணமாக கன்னி ராசிக்காரர்கள் பல துறைகளில் மகத்தான வெற்றியை பெறுவீர்கள். ஆடம்பரத்தின் காரகரான சுக்கிர பகவான் கன்னி ராசிக்காரர்களுக்கு பொன், பொருள், ஆடம்பரத்தை அள்ளி வழங்க இருக்கிறார். இந்த காலத்தில் பணம் சம்பாதிப்பதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சொத்து, நிலம் அல்லது ரியல் எஸ்டேட் தொடர்பான துறைகளில் வெற்றி பெறுவீர்கள்.
இந்த காலகட்டத்தில் எதிர்பாராத பண வரவு கிடைக்கலாம். இந்த பணத்தை கொண்டு தங்கம், நிலம், கட்டிடம் போன்றவற்றில் முதலீடு செய்வீர்கள். உங்கள் வாரிசுகளுக்காக பணத்தை சேர்ப்பீர்கள். மூதாதையர் சொத்துக்களில் இருந்தும் பணம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு நீச் பங்க் ராஜயோகம் பல வழிகளில் நன்மை தரும். இந்த ராசியின் இரண்டாவது வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகிறது. ஜாதகத்தில் இரண்டாவது வீடு பொருள், உடமைகள், தனிப்பட்ட மதிப்புகள், குடும்ப வாழ்க்கை, செல்வம், மரியாதை ஆகியவற்றை குறிக்கிறது. இதன் காரணமாக சிம்ம ராசிக்காரர்கள் நல்ல லாபம் ஈட்டுவீர்கள். அலுவலகத்தில் பணிபுரிபவர்கள் சவாலான பணியையும் முடித்து வெற்றி பெறுவீர்கள். இதன் காரணமாக உங்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம்.
குடும்ப வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியம் மேம்படும். வீட்டிற்கு தேவையான பொருட்கள், புதிய வாகனம், நிலம் ஆகியவற்றை வாங்கும் யோகமும் கைகூடும்.
விருச்சிகம்
நீச் பங்க் ராஜயோகமானது விருச்சிக ராசியின் 11 வது வீட்டில் உருவாகிறது. ஜாதகத்தில் 11வது வீடு என்பது ‘லாப ஸ்தானம்’ என்று அழைக்கப்படுகிறது. இது ஒருவரின் லாபம், செழிப்பு, லட்சியங்கள் ஆகியவற்றை குறிக்கிறது. இதன் காரணமாக விருச்சிக ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி நன்மைகளை பெறுவீர்கள். உங்கள் இலக்குகளை அடைவதிலும் வெற்றி பெறுவீர்கள்.
வேலை மற்றும் வணிகத்தில் புதிய வாய்ப்புகளை காண்பீர்கள். சுயமாக தொழில் செய்து வருபவர்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். இதன் காரணமாக உங்களின் வங்கி இருப்பு கணிசமாக அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)