- Home
- Astrology
- திருமண யோகம் தரும் குரு-சுக்கிரன்.! 2026-ல் இந்த 5 ராசிகளுக்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும்.! உங்க ராசி இருக்கா?
திருமண யோகம் தரும் குரு-சுக்கிரன்.! 2026-ல் இந்த 5 ராசிகளுக்கு கண்டிப்பாக திருமணம் நடக்கும்.! உங்க ராசி இருக்கா?
Marriage Horoscope 2026: 2026 ஆம் ஆண்டில் குரு-சுக்கிரன் சாதகமான நிலையில் சஞ்சரிப்பதால் சில ராசியில் பிறந்தவர்களுக்கு திருமண யோகம் கைகூட இருக்கிறது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2026-ல் திருமண யோகம் பெறும் ராசிகள்
2026 ஆம் ஆண்டு கிரகங்களின் நிலையில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட உள்ளது. குறிப்பாக நவகிரகங்களில் சுப கிரகங்கள் என்று அழைக்கப்படும் குரு மற்றும் சுக்கிரன் ஆகியோரின் சஞ்சாரம் சில ராசிகளுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப் போய்க் கொண்டிருந்த திருமண வரனை கைகூடி வரச் செய்ய இருக்கிறது.
ஜூன் 2026 ஆம் ஆண்டு குரு பகவான் கடக ராசியில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் காலமும், சுக்கிர பகவான் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளில் சஞ்சரிக்கும் மாதங்களான ஏப்ரல்-மே மற்றும் அக்டோபர்-நவம்பர் மாதம் திருமண முயற்சிகளுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
2026 ஆம் ஆண்டு திருமண யோகம் பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
கடகம்
2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கு பின்னர் குரு பகவான் உங்கள் ராசியிலேயே அமர்கிறார். குரு தனது உச்ச வீடான கடகத்தில் அமர்வதால் நற்பலன்களைத் தர இருக்கிறார். குருவின் ஏழாம் பார்வை உங்கள் ராசிக்கு நேர் எதிரே விழுவதால் இந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஏற்ற வரன் அமையும். ஜூலை முதல் அக்டோபர் வரை நல்ல இடத்திலிருந்து திருமண வரன் தேடி வரும். மார்ச் மாதத்தில் சுக்கிரன் வலுப்பெறுவதால் காதல் திருமணம் கை கூடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மிகக் குறுகிய காலத்தில் ஆடம்பரமான திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
மகரம்
மகர ராசியின் ஏழாம் இடத்தில் குரு பகவான் அமர்ந்து உங்கள் ராசியை நேரடியாகப் பார்க்கிறார். ஏழாம் இடம் என்பது ‘களத்திர ஸ்தானம்’ என்று அழைக்கப்படுகிறது. இது திருமணம், கணவன் மனைவிக்கு இடையேயான உறவுகளை குறிக்கும் வீடாகும். குரு அங்கு அமர்ந்து உங்கள் ராசியை பார்ப்பது மங்கள யோகத்தைத் தரும். இதன் காரணமாக நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமண பேச்சுக்கள் சமூகமாக முடியும். மே மற்றும் ஜூலை மாதங்களில் நல்ல இடத்திலிருந்து சம்பந்தம் தேடி வரும். சுக்கிர பகவானின் சஞ்சாரம் காரணமாக மனதிற்கு பிடித்தமானவர்கள் வாழ்க்கைத் துணையாக அமைவதற்கான வாய்ப்புகள் உண்டு.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான் அமர்கிறார். குருவின் ஐந்தாம் பார்வை ராசியின் மீது விழுவதால் குரு பகவானின் பலம் முழுமையாக கிடைக்க இருக்கிறது. சுக்கிர பகவானின் நிலையும் சாதகமாக இருப்பதால் காதல் உறவிலிருந்து தடைகள் நீங்கி, பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் நடக்கும். குறிப்பாக மே மாதத்தில் பிரம்மாண்ட திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. புத்தாண்டின் தொடக்கத்திலிருந்து திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெறத் தொடங்கும். மே மாதத்தில் திருமணம் நடக்கவில்லை என்றால் ஜூலை மாதத்திற்கு பிறகு திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
மீனம்
மீன ராசிக்கு குரு பகவான் ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமர்கிறார். குருவின் ஒன்பதாம் பார்வை உங்கள் ராசியில் விழுவதால் இது தெய்வீக அருள் கிட்டும் காலமாக இருக்கும். உங்கள் ராசிநாதனான குரு பகவான் உச்சம் பெறுவதால் தகுதியான மற்றும் வசதியான வாழ்க்கைத் துணை அமையும் யோகம் உருவாகும். வெளிநாட்டில் வேலை பார்க்கும் வாழ்க்கை துணை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நவம்பர் மாதத்திற்குள் உங்களுக்கு பொருத்தமான, உங்கள் உணர்வை புரிந்து கொள்ளும் வாழ்க்கைத் துணை உங்களுக்கு கிடைப்பார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பகவான் 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர இருக்கிறார். லாப குரு திருமணத்தடையை நீக்குவார். குறிப்பாக மறுமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கும் நீண்ட கால தேடலில் இருப்பவர்களுக்கும் 2026 ஆம் ஆண்டு ஒரு வரப் பிரசாதமாக அமையும். குரு மற்றும் சுக்கிரனின் சாதகமான நிலை காரணமாக பிப்ரவரி மாதத்திற்கு பின்னர் ஓரிரு மாதங்களில் திருமணம் நடக்க வாய்ப்பு உள்ளது. ஒருவேளை இந்த வாய்ப்பு தள்ளிச் சென்றால் ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலமும் மிகவும் சாதகமாக இருக்கும். உறவினர்கள் மூலமாகவோ அல்லது நண்பர்கள் மூலமாகவும் நல்ல இடத்திலிருந்து வரன் தேடி வரும்.

