ஜூன் மாதத்தில் பிறந்தவரா நீங்கள்? அப்போ உங்கள் வாழ்க்கை ரகசியம் இதுதான்!
வருஷத்தோட நடுப்பகுதியில, அதுவும் கோடை வெயில் விடைபெறும் ஜூன் மாசத்துல பிறந்தவங்களுக்குள்ள ஒரு தனி மேஜிக் இருக்கும். இவங்களோட கேரக்டர், லவ் லைஃப், மைண்ட் செட் எல்லாமே மத்தவங்களை விட ரொம்ப டிஃபரண்டா இருக்கும். அப்படி என்ன ஸ்பெஷல்? வாங்க பார்ப்போம்!

காலையில் ஒரு மூட்... சாயந்திரம் ஒரு மூட் :
ஜூன் மாதத்தில் பிறந்தவங்ககிட்ட இருக்கும் ஆகப்பெரிய சுவாரஸ்யம் மற்றும் ஆபத்து, இவங்களோட 'மூட் ஸ்விங்ஸ்' தான். ஒரு நிமிஷத்துல ரொம்ப ஜாலியா சிரிச்சுப் பேசுவாங்க, அடுத்த நிமிஷமே 'என்னை யாரும் தொந்தரவு பண்ணாதீங்க'னு சைலண்ட் மோடுக்கு போயிடுவாங்க. இவங்கள புரிஞ்சுக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்!
மனசுக்குள் ஒரு சினிமா ஓடும் :
இவங்ககிட்ட இருக்குற இன்னொரு சூப்பர் பவர் இவங்களோட கற்பனைத்திறன். சாதாரண விஷயத்தை கூட ரொம்ப வித்தியாசமாக யோசிப்பாங்க. கிரியேட்டிவ் ஃபீல்ட், ரைட்டிங், ஆர்ட், அல்லது பிசினஸ் ஐடியாக்கள்ல இவங்களை அடிச்சுக்க முடியாது. பகல் கனவு காண்பதில் இவங்க தான் பிஹெச்டி (PhD)!
வெளிய கெத்து... உள்ள சாஃப்ட் :
வெளிய பார்க்க ரொம்ப ஸ்ட்ரிக்ட் மாதிரி சீன் போடுவாங்க. ஆனால், யாராவது கஷ்டப்படறதைப் பார்த்தால் இவங்க மனசு தாங்காது. தங்களுக்கு இல்லைனாலும் பரவாயில்லைனு மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ண ஓடுவாங்க. இதனாலயே இவங்களை சுத்தி எப்பவும் ஒரு ஃபிரண்ட்ஸ் கேங் இருக்கும்.
'நோ' சொல்லத் தெரியாத பலவீனம்:
ஜூன் மாதப் பிறவிகளின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்டே இதுதான். பிடிக்காத விஷயமாக இருந்தாலும், மத்தவங்க முகம் சுளிக்கக் கூடாதேனு 'நோ' சொல்லத் தயங்குவாங்க. அப்புறம் தனியாக உக்காந்து, 'ஏன்டா சம்மதிச்சோம்'னு தலையில் கை வச்சு ஃபீல் பண்ணுவாங்க.
காதலில் 'கண்ணியம்' :
இவங்க எல்லாரோடையும் ஜாலியாக பேசுவாங்க. அதனால் இவங்களை 'ப்ளே பாய்/ப்ளே கேர்ள்'னு தப்பா நினைச்சுடாதீங்க. உண்மையிலேயே ஒருத்தரை மனசார காதலிச்சுட்டா, அவங்களுக்காக எதையும் செய்யத் துணிவாங்க. இவங்களோட பார்ட்னர் ரொம்ப லக்கி!

