- Home
- Astrology
- Past Life Numerology: கடந்த ஜென்மத்தில் நீங்கள் யாராக இருந்தீர்கள் தெரியுமா? பிறந்த தேதியில் மறைந்திருக்கும் ரகசியம்
Past Life Numerology: கடந்த ஜென்மத்தில் நீங்கள் யாராக இருந்தீர்கள் தெரியுமா? பிறந்த தேதியில் மறைந்திருக்கும் ரகசியம்
Past Life Numerology: ஒருவரின் பிறந்த தேதி மற்றும் மூல எண்ணை வைத்து அவர்களின் முற்பிறவி வாழ்க்கை குறித்த சுவாரஸ்ய தகவல்களை அறியலாம் என நியூமராலஜி நிபுணர்கள் கூறுகின்றனர்.

முற்பிறவி குறித்து நியூமராலஜி
மனித வாழ்க்கையில் கடந்த பிறவி குறித்து பலருக்கும் ஆர்வம் உள்ளது. அந்த ஆர்வத்திற்கு பதில் அளிக்கும் ஒரு கருவியாக நியூமராலஜி அல்லது எண் கணிதம் பார்க்கப்படுகிறது. பிறந்த தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும் மூல எண் மூலம், ஒருவரின் கடந்த பிறவியின் குணநலன், தொழில் மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை அறியலாம் என்று நியூமராலஜி நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இவை அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டவை அல்ல என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
மூல எண்கள் 1 முதல் 3 வரை சொல்லும் தகவல்கள்
மூல எண் 1 கொண்டவர்கள் கடந்த பிறவியில் அரசர், ராணி அல்லது தலைவராக இருந்திருக்கலாம் என்றும், தலைமைத்துவ குணம் அதிகமாக இருந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. மூல எண் 2 கொண்டவர்கள் கலை, ஆலோசனை அல்லது காதல் தொடர்பான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம். ஏமாற்றங்கள் மற்றும் மன வேதனைகளையும் சந்தித்திருக்கலாம். மூல எண் 3 கொண்டவர்கள் ஆசிரியர், எழுத்தாளர், தத்துவஞானி அல்லது தலைவராக இருந்து படைப்பாற்றலுடன் வாழ்ந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
மூல எண்கள் 4 முதல் 9 வரை கூறும் விளக்கம்
மூல எண் 4 கொண்டவர்கள் சமூக நலனுக்காக உழைத்தவர்களாகவும், எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர்களாகவும் கருதப்படுகின்றனர். மூல எண் 5 கொண்டவர்கள் வணிகர், கடலோடி அல்லது சாகச வாழ்க்கையை விரும்பியவர்களாக இருக்கலாம். மூல எண் 6 கொண்டவர்கள் மருத்துவர், செவிலியர் அல்லது பிறருக்கு சேவை செய்தவர்களாகவும், மூல எண் 7 கொண்டவர்கள் துறவி அல்லது ரகசியப் பணியில் ஈடுபட்டவர்களாகவும் கண்டறியப்பட்டுள்ளனர். மூல எண் 8 கொண்டவர்கள் செல்வந்தர் அல்லது நில உரிமையாளர்களாக இருந்திருக்கலாம். மூல எண் 9 கொண்டவர்கள் ஆன்மிக குரு அல்லது வீரராக வாழ்ந்திருக்கலாம் என நியூமராலஜி குறிப்பிடுகிறார்.
நம்பிக்கையா? உண்மையா?
நியூமராலஜி கூறும் இந்த தகவல்கள் பலருக்கு சுவாரஸ்யமாக இருந்தாலும், அவை பொதுவான நம்பிக்கைகள் மற்றும் பாரம்பரிய விளக்கங்களின் அடிப்படையில் மட்டுமே அமைந்தவை. இத்தனை வாழ்க்கை முடிவுகளுக்கான ஆதாரமாக கருதாமல், பொழுதுபோக்கு மற்றும் ஆன்மிகக் கண்ணோட்டத்தை அணுகுவது நல்லது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் நியூமராலஜி மற்றும் பொதுவான நம்பிக்கைகளின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன.

