- Home
- Astrology
- This Week Rasi Palan: தனுசு ராசிக்கு குரு பகவானால் ராஜயோகம்.! கூரையை பிச்சிட்டு கொட்டப்போகும் பணம்.!
This Week Rasi Palan: தனுசு ராசிக்கு குரு பகவானால் ராஜயோகம்.! கூரையை பிச்சிட்டு கொட்டப்போகும் பணம்.!
This Week Rasi Palan Dhanusu: ஜனவரி 12 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் தனுசுராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

This Week Rasi Palan Dhanusu
தனுசு ராசி நேயர்களே, இந்த வாரம் ராசியின் அதிபதியான குரு பகவான் புதன் பகவானுடன் இணைந்து சஞ்சாரம் செய்கிறார். எனவே இந்த வாரம் தடைகள் அகலும் வாரமாக இருக்கும். காரியங்கள் அனைத்தையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள். தள்ளிப்போன காரியங்களும் முடிவடையும். இந்த வாரம் தன்னிறைவாக உணர்வீர்கள். எதிர்பாராத தன வரவும், உத்தியோக பணிகளில் உயர்வும் கிடைக்கும் வாரமாக இருக்கும்.
நிதி நிலைமை:
குருவின் பார்வையால் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் கடன் சுமைகள் படிப்படியாக குறையும். தன ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் பண வரவு திருப்திகரமாக இருக்கும். வரவுக்கேற்ற செலவுகளும் ஏற்படலாம். அடமானம் வைத்த சொத்துக்கள் நகைகளை திருப்பி மீட்பீர்கள். முன்பு வாங்கி வைத்த பங்குகளின் மதிப்பு உயரும். ஜனவரி 15ஆம் தேதிக்கு பின்னர் திடீர் பண வரவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை. இருப்பினும் கண், பற்கள் தொடர்பான சிறிய உபாதைகள் எழக்கூடும். நேரத்திற்கு உட்கொள்ள வேண்டியது அவசியம். இருசக்கர வாகனங்களில் செல்லும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். தலைக்கவசம் அணிவது முக்கியம். மன அழுத்தத்தை குறைக்க யோகா அல்லது தியானம் செய்யலாம்.
கல்வி:
மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம். உயர் கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உருவாகும். ஆசிரியர்களின் பாராட்டுக்கள் உங்களை உற்சாகப்படுத்தும். குழுவாக படிப்பதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
அர்த்தாஷ்டம சனி நடந்து வரும் நிலையிலும் ராசியை குரு பார்ப்பதால் வேலையிடத்தில் அனுகூலமான சூழல் காணப்படும். சக ஊழியர்கள் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் பணி உயர்வு ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். இடமாற்றம் தொடர்பான செய்திகள் வரலாம். தொழில் செய்து வருபவர்களுக்கு புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்கள் லாபகரமானதாக அமையும்.
குடும்ப உறவுகள்:
குடும்ப உறவுகளில் அனுகூலமான சூழல் காணப்படும். தம்பதிகளிடம் புரிதல் உண்டாகும். திருமணத்திலிருந்து தடைகள் அகலும். மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உறவினர்களிடையே நிலவி வந்த கசப்புணர்வுகள் நீங்கி, இணக்கம் ஏற்படும். பிள்ளைகளின் முன்னேற்றம் உங்களுக்கு பெருமை சேர்க்கும். வாக்குவாதங்களை தவிர்ப்பது குடும்ப அமைதிக்கு வழிவகுக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
இந்த வாரத்தில் உங்களுக்கு சந்திராஷ்டமம் இல்லை. எனவே நீங்கள் புதிய திட்டங்களை தொடங்குவது அல்லது முக்கிய முடிவுகளை எடுப்பது குறித்து யோசிக்கலாம். ஆனால் எந்த விஷயமானாலும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது.
பரிகாரங்கள்:
குரு பகவானை மஞ்சள் நிற மலர்களால் அர்ச்சனை செய்து வழிபடலாம். தட்சணாமூர்த்திக்கு கொண்டை கடலை மாலை சாற்றி வழிபடலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எலுமிச்சை சாதம் அல்லது இனிப்புகளை தானமாக வழங்குவது நன்மை தரும். ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபடுவது தடைகளை நீக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

