- Home
- Astrology
- This Week Rasi Palan: கொடி கட்டி பறக்கப்போகும் விருச்சிக ராசி.! சொத்து, நகை, பணம் குவியப் போகுதாம்.!
This Week Rasi Palan: கொடி கட்டி பறக்கப்போகும் விருச்சிக ராசி.! சொத்து, நகை, பணம் குவியப் போகுதாம்.!
This Week Rasi Palan Viruchigam: ஜனவரி 12 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

This week rasi palan Viruchigam
விருச்சிக ராசி நேயர்களே, ராசிநாதன் செவ்வாய் மூன்றாம் இடமான தைரிய ஸ்தானத்தில் உச்சம் பெறுகிறார். இதன் காரணமாக தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். எடுக்கும் முயற்சிகள் எளிதில் வெற்றிபெறும்.
வாரத்தின் ஆரம்பத்தில் மந்த நிலை ஏற்பட்டாலும் நிலையான முன்னேற்றம் ஏற்படும். பெயர், புகழ், அந்தஸ்து, கௌரவம் உயரும். நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் அதற்கு நீங்களே காரணமாக இருப்பீர்கள்.
நிதி நிலைமை:
இந்த வாரம் நிதி நிலைமை ஓரளவுக்கு திருப்திகரமாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளுக்காக பணம் செலவு செய்ய நேரிடலாம். வாரத்தின் பிற்பகுதியில் எதிர்பாராத தன வரவு ஏற்படும். சில சமயங்களில் கடன் தொல்லைகள் அதிகரிக்கலாம். தேவையற்ற விஷயங்களுக்கு செலவு செய்வதை தவிர்க்கவும். சிலருக்கு விபரீத ராஜயோகத்தால் சொத்து, நகை, பணம், பாலிசி முதிர்வு தொகை ஆகியவை கிடைக்கும்.
ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தில் இந்த வாரம் எந்த பிரச்சனையும் ஏற்படாது. இருப்பினும் சிறு அசதி அல்லது கால் வலி ஏற்படலாம். முறையான உணவுப் பழக்கம் மற்றும் தூக்கம் அவசியம். வாகனம் ஓட்டும் பொழுது அதிக கவனம் தேவை. மன அழுத்தத்தை குறைக்க யோகா அல்லது தியானம் செய்வது சிறந்தது.
கல்வி:
மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய வாரமாகும். ஞாபக மறதி ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எழுதிப் பார்ப்பது நல்லது. உயர்கல்வி பயில விரும்புபவர்களின் கனவு நனவாகும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு அவரவர்களின் கடின உழைப்புக்கு ஏற்ற வகையில் பலன்கள் கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
வாரத்தின் ஆரம்பத்தில் தொழிலில் சிறிது மந்த நிலை ஏற்படலாம். இருப்பினும் வாரத்தின் இறுதியில் நிலையான முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளை செய்வதற்கு முன்னர் சந்தை அபாயத்தை அறிந்து கொள்வது அவசியம்.
கூட்டாளிகளுடன் இருந்த சிறு கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுயதொழில் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கலாம். பதவி உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும்.
குடும்ப உறவுகள்:
குடும்ப உறவுகளில் நிலவி வந்த தகராறுகள் தீர்க்கப்படும். பெண்களுக்கு புகுந்த வீட்டின் அன்பும், பாராட்டும் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.
உறவினர்களின் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழல் நிலவும். மனதில் நிலவிய தேவையில்லாத கற்பனை பயம் உணர்வு குறையும். பாகப்பிரிவினைகள் சமூகமாகும். உடன் பிறந்தவர்களின் அன்பும், ஆறுதலும் கிடைக்கும்
சந்திராஷ்டம நாட்கள்:
ஜனவரி 12 தொடங்கி ஜனவரி 13 பிற்பகல் வரை சந்திராஷ்டமம் தொடர்கிறது. எனவே இந்த தினங்களில் புதிய முயற்சிகளை தவிர்க்கவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். அமைதியாகவும், நிதானமாகவும் செயல்படுவது விபத்துக்களை தவிர்க்கும்.
பரிகாரங்கள்:
ஏற்படும் தடைகள் அகல விநாயகப் பெருமானை வழிபடுவது நல்லது. முருகப் பெருமானுக்கு செவ்வரளி மலர் சாற்றி வழிபாடு செய்யவும். சனி பகவானுக்கு எள் தீபமேற்றி வழிபட அர்த்தாஷ்டம சனியின் தாக்கம் குறையும். ‘ஓம் சரவணபவ’ மந்திரத்தை தினமும் 21 முறை உச்சரிப்பது நல்லது. ஏழை எளியவர்கள் இயலாதவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

