MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • This Week Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, இந்த வாரம் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் நடக்கப்போகுது.!

This Week Rasi Palan: துலாம் ராசி நேயர்களே, இந்த வாரம் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவங்கள் நடக்கப்போகுது.!

Thulam Rasi This Week Rasi Palan: ஜனவரி 12 முதல் ஜனவரி 18 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் துலாம் ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Jan 12 2026, 04:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
This Week Rasi Palan Thulam
Image Credit : Asianet News

This Week Rasi Palan Thulam

துலாம் ராசி நேயர்களே, இந்த வாரம் உங்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் வாரமாக இருக்கும். ராசியின் அதிபதி சுக்கிர பகவான் சூரியனுடன் இணைந்து சுக ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக சுப பலன்களை அடைவீர்கள். 

வாழ்க்கையில் மறக்க முடியாத இனிய சம்பவங்கள் நடைபெறும். கடந்த காலத்தில் இருந்த நெருக்கடிகள் குறைந்து, மகிழ்ச்சியும் செழிப்பும் உண்டாகும். வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகளும் உதவிகளும் கிடைக்கும். நிலம், மனை, வீடு, தோட்டம் என அசையா சொத்துக்களின் சேர்க்கை நடைபெறும்.

நிதி நிலைமை:

இந்த வாரம் பண வரவு சீராக இருக்கும். நிதி நிலைமை மேம்படும். செலவுகளை கட்டுப்படுத்தாமல் விட்டால் பெரிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். பழைய கடன்களை அடைப்பதற்கு தேவையான வருமானமும், வாய்ப்புகளும் உருவாகும். ஆடம்பரப் பொருட்களுக்காக செலவு செய்ததை தவிர்க்கவும். பங்குச்சந்தை மற்றும் முதலீடுகளில் அதிக ரிஸ்க் எடுப்பதை தவிர்க்கவும்.

ஆரோக்கியம்:

அஜீரணக் கோளாறுகள் அல்லது வாயு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதால், உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டியது அவசியம். இரவு நேர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தேவையற்ற அலைச்சல்களை குறைத்துக் கொள்ள வேண்டும். தினமும் நடைப்பயிற்சி அல்லது யோகா செய்வது மன அழுத்தத்தை குறைக்கும்.

கல்வி:

மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்த வேண்டிய வாரமாகும். தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் ஞாபக மறதியை தவிர்க்க அதிகாலை எழுந்து படிக்கலாம். சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டு தெளிவு பெறுவது நல்லது. மேற்படிப்புக்கான முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகும்

தொழில் மற்றும் வியாபாரம்:

வியாபாரத்தில் செய்யும் முதலீடுகள் லாபத்தை தரும். புதிய லாபம் மறு முதலீட்டிற்கு உதவிகரமாக இருக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் நிலவி வந்த பிரச்சனைகள் குறையும். தொழிலில் எதிர்பார்த்துக் காத்திருந்த அரசு உதவிகள் கிடைக்கும். 

தொழில் ரீதியாகவோ அல்லது வியாபார காரணங்களுக்காகவோ வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உருவாகலாம். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். அடமானத்தில் இருக்கும் பொருட்களை மீட்பதற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும்.

குடும்ப உறவுகள்:

இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். பெரிய பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. சகோதர, சகோதரிகளின் வழியாக ஆதாயம் உண்டு. பெண்களுக்கு புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு மகிழ்ச்சி தரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் குறித்த பேச்சு வார்த்தைகள் தொடங்கும்.

சந்திராஷ்டம நாட்கள்:

ஜனவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் சந்திரன் ராசிக்கு எட்டாம் இடத்தில் சஞ்சரிக்க வாய்ப்பு உள்ளதால் கவனமாக இருக்கவும். புதிய முயற்சிகளை ஒத்திவைப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் பொழுது வேகம் வேண்டாம். முக்கியமான ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டாம்.

பரிகாரங்கள்:

வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயாருக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடவும். சனிக்கிழமை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வெண்ணெய் காப்பு சாற்றி வழிபட தடைகள் நீங்கும். இயலாதவர்களுக்கு தயிர்சாதம் தானமாக வழங்குவது சுக்கிரனின் அருளை பெற்றுத் தரும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today Rasi Palan: இன்று சந்திரனால் 5 ராசிகளுக்கு ஆபத்து.! 12 ராசிகளுக்குமான துல்லியமான பலன்கள்.!
Recommended image2
Venus Jupiter Conjuction: சுக்கிரன் - குருவின் கூட்டணி! மனைவியின் அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வர யோகம் பெறப்போகும் கணவர்கள்!
Recommended image3
Numerology: உங்க பிள்ளை இந்த தேதியில பிறந்தவங்களா? அப்போ பெற்றோருக்குக் குபேர யோகம் கன்பார்ம்.! தலையெழுத்தை மாற்றும் அதிர்ஷ்ட தேதிகள்!
Related Stories
Recommended image1
This Week Rasi Palan: கன்னி ராசி நேயர்களே, இந்த வாரம் அடிக்கும் யோகம்.! நீங்க நினைத்தது அனைத்தும் நடக்கப்போகுது.!
Recommended image2
This Week Rasi Palan: சிம்ம ராசி நேயர்களே, இந்த வாரம் அதிர்ஷ்டமும் வரும்.! கூடவே ஆபத்தும் வரும்.! ஜாக்கிரதையா இருங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved