- Home
- Astrology
- Astrology: 500 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் மகா புருஷ ராஜயோகங்கள்.! இழந்த அனைத்தையும் மீண்டும் பெறப்போகும் ராசிகள்.!
Astrology: 500 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் மகா புருஷ ராஜயோகங்கள்.! இழந்த அனைத்தையும் மீண்டும் பெறப்போகும் ராசிகள்.!
Hans Rajyog 2026: 2026 ஆம் ஆண்டில் ஹன்ஸ் மற்றும் மாளவ்ய ராஜயோகங்கள் உருவாக இருக்கின்றன. இந்த சக்தி வாய்ந்த ராஜயோகங்களால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ஹன்ஸ் மற்றும் மாளவ்ய ராஜயோகம்
வேத ஜோதிடத்தில் கிரகங்கள் உருவாக்கும் ராஜயோகங்கள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் குரு பகவான் ஹன்ஸ் ராஜயோகத்தையும், சுக்கிர பகவான் மாளவ்ய ராஜயோகத்தையும் உருவாக்குகின்றனர். குரு பகவான் தனது உச்ச ராசியான கடகத்தில் நுழையும் பொழுது ஹன்ஸ் ராஜயோகமும், சுக்கிர பகவான் தனது உச்ச ராசியான மீனத்தில் நுழையும் பொழுது மாளவ்ய ராஜயோகமும் உருவாகும் என்று ஜோதிட ரீதியாக கணிக்கப்பட்டுள்ளது.
மேஷம்
ஹன்ஸ் மற்றும் மாளவ்ய ராஜயோகம் உருவாவது மேஷ ராசிக்காரர்களுக்கு பல வழிகளில் நன்மை தரும். சுக ஸ்தானமான நான்காவது வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகிறது. எனவே இந்த நேரத்தில் நீங்கள் பொன், பொருள், வசதிகளை அனுபவிப்பீர்கள். புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவீர்கள். வேலை செய்பவர்கள் சக ஊழியர்களால் பாராட்டப்படுவீர்கள். வேலையிடத்தில் உங்கள் அதிகாரம் அதிகரிக்கும். உங்கள் நற்பெயர் உயரும். வாழ்க்கையில் இனிமையான தருணங்களை அனுபவிப்பீர்கள். மூதாதையர் வழியில் இருந்து செல்வம் மற்றும் சொத்துக்களையும் பெறுவீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த இரண்டு ராஜயோகங்களும் மிகவும் சாதகமாக இருக்கும். சுக்கிரன் உங்கள் ஏழாவது வீட்டின் வழியாக பெயர்ச்சி அடைவார். எனவே இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலைமை கணிசமாக உயரும். புதிய வணிக ஒப்பந்தங்கள் கிடைக்கும். கூட்டாக தொழில் செய்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். குரு உங்கள் ராசியில் இருந்து லாப ஸ்தானமான 11வது வீட்டின் வழியாக பெயர்ச்சி அடைவார். இதன் காரணமாக வருமானம் அதிகரிக்கும். புதிய வழிகளில் பணம் கிடைக்கும். நிதி ஆதாயம் பெருகும். வங்கி இருப்பு அதிகரிக்கும். ஏற்கனவே செய்த பழைய முதலீடுகள் மூலம் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு ஹன்ஸ் மற்றும் மாளவ்ய ராஜயோகம் உருவாகுது நன்மை பயக்கும். ஹன்ஸ் ராஜயோகம் உங்கள் ஜாதகத்தின் ஏழாவது வீட்டிலும், மாளவ்ய ராஜயோகம் மூன்றாவது வீட்டிலும் உருவாகும். எனவே இந்த காலகட்டத்தில் உங்கள் வருமானத்தில் கணிசமான அதிகரிப்பை காண முடியும். முதலீடுகளில் இருந்து பயனடைவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன்கள் தேடி வரும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். சமூகத்தில் உங்கள் மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வீடு, மனை, நிலம் போன்ற நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

