குரு வக்ர நிவர்த்தி: குருவின் அருளால் உங்களுக்கு குபேர யோகம், இனி கடனே இருக்காது!
Guru Vakra Nivarthi 2025 Palan in Tamil : குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைந்த நிலையில் இந்த 3 ராசியினருக்கு இனி வாழ்க்கையில் வசந்தம் வீசம் நேரம் வந்துவிட்டது. அந்த ராசியினர் யார் என்று பார்க்கலாம்.

குரு வக்ர நிவர்த்தி: குருவின் அருளால் உங்களுக்கு குபேர யோகம், இனி கடனே இருக்காது!
Guru Vakra Nivarthi 2025 Palan in Tamil : ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமான கிரகம் குரு பகவான். சுப கிரகம் என்பார்கள். குரு பார்த்தால் கோடி நன்மை. குரு பகவான் உங்களது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் உங்களுக்கு பொன், பொருள் சேர்வதோடு திருமணமான தம்பதியாக இருந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறும். தனுசு மற்றும் மீனம் ஆகிய 2 ராசிகளுக்கு அதிபதியே குரு பகவான். அவர்கள் சொல்வதை கேட்டு நடந்தால் வாழ்க்கை வசமாகும்.
ஏனென்றால் அவர்கள் தான் குரு பகவானின் அதிபதி ராசிகள். வருடத்திற்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் குரு பகவான் சில மாதங்கள் பின்னோக்கு வந்து அதன் பிறகு மீண்டும் முன்னோக்கி செல்வார். அதாவது, பின்னோக்கி நகரும் காலம் குரு வக்ர பெயர்ச்சி காலம் எனப்படும். இதே போன்று தான் குரு முன்னோக்கி நகரும் காலத்தை குரு வக்ர நிவர்த்தி காலம் என்பார்கள்.
கடந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 9ஆம் தேதி ரிஷப ராசியில் குரு பகவான் வக்ர பெயர்ச்சி அடைந்தார். இதையடுத்து கிட்டத்தட்ட 5 மாதங்களுகு பிறகு பிப்ரவரி 4 ஆம் தேதி குரு வக்ர நிவர்த்தி அடைந்தார். இந்த வக்ர நிவர்த்தி ஒரு குறிப்பிட்ட ராசிகளுக்கு பிப்ரவரி முதல் பொற்காலமான மாதமாக இருக்க போகிறது. அந்த ராசியினர் யார் யார் என்று இந்த தொகுப்பில் காணலாம்.
மாளவ்ய ராஜயோகம்: 5 ராசிகளுக்கு ஜாக்பாட்; இனி நீங்கள் லச்சாதிபதி; கட்டு கட்டா பணம் வரும்!
கன்னி ராசிக்கு குரு வக்ர நிவர்த்தி பலன் 2025
கன்னி ராசியினரை பொறுத்த வரையில் குரு வக்ர நிவர்த்தியில் குருவின் அருளும், ஆசியும் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் உருவாகும். புதிய வீடு மாறுவதற்கான சூழல் வரும். அது சொந்த வீடாக கூட இருக்கலாம். அலுவலகத்தில் பதவி உயர்வு தேடி வரும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் வரும். மகன் அல்லது மகளுக்கு நல்ல வரன் தேடி வரும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். கணவன் மனைவிக்கிடையில் உறவில் புரிதல் இருக்கும். காதல் கை கூடும்.
சிம்ம ராசிக்கான குரு வக்ர நிவர்த்தி பலன் 2025
சிம்ம ராசியினரை பொறுத்த வரையில் குரு வக்ர நிவர்த்தி வாழ்க்கையில் முன்னேற்றத்தை கொண்டு வந்து தரும். வண்டி, வாகனம் வாங்கும் யோகத்தை உருவாக்கும். அரசியல் பிரபலங்களுக்கு பதவி தேடி வரும். வேலை தேடும் இளைஞர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண யோகம் தேடி வரும். புதிய நபர்களின் அறிமுகம் உங்களது குடும்பத்தில் நிலவும். மகிழ்ச்சி நிலவும்.
சூரியன் - குரு கேந்திர யோகம்: வாழ்க்கையில் கோடீஸ்வரனாக போகும் 3 ராசிகள் நீங்க தான்!
ரிஷப ராசிக்கான குரு வக்ர நிவர்த்தி பெயர்ச்சி பலன் 2025
குருவின் இந்த வக்ர நிவர்த்தி ரிஷப ராசியினருக்கு ஏராளமான பலனை கொண்டு வந்துள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதி முதல் நேர்கதியில் பயணிக்கும் குரு பகவான் அருளால் நீங்கள் நிலுவையில் வைத்த எல்லா வேலைகளும் ஒவ்வொன்றாக நடக்கும். புதிய புதிய வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். கோர்ட் வழக்கு பிரச்சனைகள் முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்கிடையில் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். இதன் மூலம் வருமானம் இரட்டிப்பாகும். பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.