- Home
- Astrology
- Guru Peyarchi 2026: குரு பெயர்ச்சிக்குப் பிறகு 5 ராசிகளுக்கு குபேர யோகம்.! அள்ள அள்ள பணம்.! 12 வருட கஷ்டங்கள் முடிவுக்கு வருகிறது.!
Guru Peyarchi 2026: குரு பெயர்ச்சிக்குப் பிறகு 5 ராசிகளுக்கு குபேர யோகம்.! அள்ள அள்ள பணம்.! 12 வருட கஷ்டங்கள் முடிவுக்கு வருகிறது.!
Guru Peyarchi 2026: குரு பெயர்ச்சி நடந்து முடிந்துள்ள நிலையில் சில ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் கிடைக்கும் என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Guru Peyarchi 2026
வேத ஜோதிடத்தில் குரு பகவான் சுப கிரகமாக அறியப்படுகிறார். இவர் வருடம் ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். அந்த வகையில் மிதுனத்தில் இருந்து கடக ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகிருக்கிறார். கடக ராசி குரு பகவான் உச்சம் பெறும் ராசி என்பதால் இது சில ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச நன்மைகளை தர உள்ளது. குறிப்பாக குரு பெயர்ச்சிக்குப் பின்னர் 5 ராசிக்காரர்கள் கோடீஸ்வர யோகத்தை பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து இங்கு விரிவாகக் காணலாம்.
இதையும் படியுங்கள்:Rasi Palan: சூரிய சந்திர சேர்க்கை: இணையும் எதிர் எதிர் துருவங்கள்.! எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 4 ராசிகள்.!
மேஷம்
குரு பெயர்ச்சிக்குப் பின்னர் மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. நீங்கள் இத்தனை நாட்களாக அனுபவித்து வந்த கஷ்டங்கள் விலகி வாழ்க்கையே ஒட்டுமொத்தமாக மாற இருக்கிறது. அனுகூலமான சூழல்கள் உண்டாகும். உங்கள் திறமைகளுக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைக்கும். பணி சார்ந்து அயல்நாடு செல்லும் வாய்ப்புகள் வரலாம். குடும்பத்தில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிலவும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மாறும். சுப காரியங்கள் நடைபெறும். ஆடை, ஆபரணம், வீடு, பொன், பொருள், வாகனச் சேர்க்கை நடைபெறும். தொழில் செழிப்பாக நடைபெறும்.
பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவது நன்மைகளை மேலும் அதிகரிக்கும்.
இதையும் படியுங்கள்: Astrology by Date of Birth: இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சொந்த வீடு, சொந்த கார் வாங்கும் யோகம் கிடைக்கும்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் பல வழிகளில் நன்மையைத. தேடித் தரும். குறிப்பாக ஜூன் மாதம் முழுவதும் மகிழ்ச்சியான செய்திகளைக் கேட்பீர்கள். உங்கள் வாழ்வில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். சுப காரியங்களில் இருந்த முட்டுக்கட்டைகள் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வீடு கட்டுதல், புதுமனை புகுவிழா, வளைகாப்பு, காது குத்து போன்ற நிகழ்ச்சிகளை நடத்தி முடிப்பீர்கள். தொழிலில் சீரான வளர்ச்சி ஏற்படும். முயற்சி ஸ்தானத்தில் அமர்ந்த குரு பகவானால் நல்லது அனைத்தும் கிடைக்கத் தொடங்கும். நீண்ட நாள் கனவுகள், லட்சியங்கள் நிறைவேற ஆரம்பிக்கும்.
பரிகாரம்: விஷ்ணு பகவானை வழிபடுவது நன்மைகளை மேலும் அதிகரிக்கும்.
இதையும் படியுங்கள்:Mercury Transit 2026: திருவாதிரை நட்சத்திரத்தில் புதன்.! தொழிலில் அம்பானியாக மாறப்போகும் 5 ராசிகள்.! உங்க ராசி இருக்கா?
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்குப் பின்னர் வாக்கு வன்மை உயரும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். இல்லத்தில் இனிமை குடிபுகும். வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீட்டிற்கு குடியேறுவீர்கள். பழைய வாகனங்களை புதுப்பிக்க சந்தர்ப்பங்கள் உருவாகும். பொன், பொருள், நகை சேரும். தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு பொன்னான காலகட்டமாகும். உங்களின் வங்கி இருப்பு கணிசமாக உயரும். வேலை மாற்றம் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும். வாரிசுகளால் பெருமை சேரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை வரம் கிடைக்கும். லாப குருவால் எதிர்பாராத வழிகளில் இருந்து பணம் வந்து கொண்டே இருக்கும்.
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் ராகவேந்திரரை வணங்குங்கள்.
இதையும் படியுங்கள்: Guru Peyarchi 2026: பூசம் நட்சத்திரத்தில் குரு பகவான்.! ஜூன் 18 முதல் இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.! வாழ்க்கையே அடியோடு மாறப்போகுது.!
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சிக்குப் பின்னர் பெரிய முன்னேற்றத்தை அனுபவிக்க இருக்கிறீர்கள். தடைகளை தகர்த்து வெற்றிப் படிகளில் ஏறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். சுப காரியத்தில் இருந்த தடைகள் விலகும். பணவரவு சீராக இருக்கும். கர்ம ஸ்தான குருவால் தொழிலில் நன்மைகள் உண்டாகும். பிறரால் ஏற்பட்டிருந்த வீண்பழி மறையும். குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும். வாழ்க்கையில் ஏற்றமும், மாற்றமும் உண்டாகும். ரத்த பந்த உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். வேலையில் புதிய மாற்றங்கள் அல்லது பொறுப்புகள் கிடைக்கலாம். முதலீடுகள் மூலம் ஆதாயம் உண்டாகும்.
பரிகாரம்: குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி வழிபடுங்கள்.
இதையும் படியுங்கள்:Tripushkara Yoga: ஜூன் 16-க்கு பிறகு இந்த 4 ராசிகளுக்கு பண மழை.! அதிர்ஷ்டம் கதவைத் தட்டும்.!
மீனம்
ஏழரை சனியில் அவதிப்பட்டு வரும் மீன ராசிக்காரர்கள் குரு பெயர்ச்சிக்குப் பின்னர் மன நிம்மதி பெறுவீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தான குருவால் சனியின் பார்வை சற்று தணியும். உங்கள் வாரிசுகளால் பெருமை உண்டாகும் தொழிலில் சீரான பணவரவு உண்டாகும். வீட்டில் விசேஷங்கள் வரத் தொடங்கும். வாக்கில் இனிமையும், வன்மையும் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்குவீர்கள். புதிய பொறுப்புகளை ஏற்க வேண்டிய நேரம் கைகூடும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் அகன்று ஒற்றுமை உண்டாகும். நண்பர்கள் மூலம் புதிய வேலை வாய்ப்புகள் அல்லது தொழில் வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
பரிகாரம்: விநாயகப் பெருமானுக்கு தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது தடைகளை நீக்கும்.
இதையும் படியுங்கள்: Numerology: இந்த தேதிகள்ல பிறந்தவங்க பணம் சம்பாதிக்க ரொம்ப கஷ்டப்படணுமாம்.! அதிர்ஷ்டம் சுத்தமா இருக்காதாம்.!
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

