- Home
- Astrology
- Gold Rate Today (October 23): தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து சரிவு.! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி.!
Gold Rate Today (October 23): தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து சரிவு.! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி.!
கடந்த இரண்டு வாரங்களாக அதிகரித்து வந்த தங்கம் விலை, தற்போது தொடர்ந்து இரண்டாவது நாளாக குறைந்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் சில சர்வதேச நகர்வுகளே இந்த விலை சரிவுக்கு முக்கிய காரணம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மேலும் மேலும் குறைந்த தங்கம் விலை
கடந்த 2 வார காலமாக அதிகரித்து வந்த தங்கம் விலை இரண்டாவது நாளாக குறைந்துள்ளதால் திருமண ஏற்பாட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறிப்பாக நேற்றைய தினம் ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை குறைந்தது. சர்வதேச மார்கெட்டில் தங்கம் விலை சற்று குறைந்துள்ள நிலையில், இந்தியாவில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.320 குறைந்து, ரூ.92,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.40 குறைந்து, ரூ.11,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.. அதேபோல சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து, ரூ.174க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை குறைய காரணம் இதுதான்
தங்கம் விலை அதிகரிக்க அமெரிக்க அதிபர் டிரம்பே காரணம் என கூறப்பட்ட நிலையில், விலை குறையவும் அமெரிக்காவே காரணமாக கூறப்படுகிறது.
தங்கம் விலை எக்குத்தப்பாக உயர்ந்ததால் இதில் முதலீடு செய்தவர்கள் லாபத்தை எடுக்கத் தங்கள் கையிருப்பை விற்கிறார்கள். அதேபோல் வர்த்தக விவகாரத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை நேரில் சந்தித்துப் பேசவுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். மேலும் உக்ரைன் போர் விவகாரத்திலும் ரஷ்ய அதிபர் புதினை சந்திக்கவுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். இந்த சர்வதேச காரங்களே தங்கம் விலை குறையப் பிரதானக் காரணம் என சர்வதேச சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.