- Home
- Astrology
- Birth Date: இந்த தேதில பிறந்தவங்க மருமகளா கிடைச்சா வரம்!! மாமியாரை தங்க தட்டுல தாங்குவாங்க
Birth Date: இந்த தேதில பிறந்தவங்க மருமகளா கிடைச்சா வரம்!! மாமியாரை தங்க தட்டுல தாங்குவாங்க
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்த பெண்கள் தங்களது மாமியாரை அம்மா போல பார்த்துக்கொள்வார்கள்.

Best Daughter-in-law as per Numerology
பொதுவாக மாமியார்-மருமகளுக்கு எப்பவுமே ஒத்துப்போகாது என்று பலர் சொல்லுவதை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள். அவர்கள் ஒன்றாக இருந்தால் சண்டே தான் வரும் என்று சொல்லுவார்கள். ஆனால் சில வீடுகளில் மாமியார்- மருமகள் அம்மா மகள் போல சகஜமாக பழகுவார்கள். அந்த வகையில் எண் கணிதத்தின்படி, சில தேதிகளில் பிறந்த பெண்கள் தங்களது மாமியாரை அம்மாவைப் போல நேசிப்பார்கள். அவர்கள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் அவர்களை நன்றாக பார்த்துக் கொள்வார்கள். சரி இப்போது எந்தெந்த தேதிகளில் பிறந்த பெண்களுக்கு இந்த குணம் இருக்கும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
3, 12, 21 மற்றும் 30 தேதிகள்..
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த நான்கு தேதிகளில் பிறந்த பெண்கள் ரொம்பவே நல்ல குணம் கொண்டவர்கள் இவர்கள் தங்களது மாமியாரை ரொம்பவே மதிப்பார்கள். அம்மா போல பார்த்துக் கொள்வார்கள். முக்கியமாக இந்த தேதிகளில் பிறந்தவர்கள் குருவின் செல்வாக்கின் காரணமாக தங்களது புகுந்த வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வருவார்கள்.
பெண்களின் இயல்பு:
எண் கணிதத்தின் படி, இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் ரொம்பவே அமைதியானவர்கள். இவர்கள் தங்களது குடும்ப பொறுப்புகளை நன்றாக கவனித்துக் கொள்வார்கள். இவர்கள் தங்களது நன் நடத்தையால் மாமியாரின் இதயத்தை எளிதில் வெல்வார்கள். குடும்பத்தில் உள்ள அனைவரும் இவர்களை நேசிப்பார்கள். இந்த தேதியில் பிறந்த பெண்கள் தங்களது புகுந்து வீட்டிற்கு செல்வம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டு வருவார்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்
எண் கணிதத்தின் படி, இந்த நான்கு தேதிகளில் பிறந்த பெண்கள் மிகவும் நேர்மையானவர்கள் மற்றும் இவர்கள் திருமண வாழ்க்கை இவர்களின் அமைதியான குணம் காரணமாக இவர்கள் தங்கள் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் சண்டை போட மாட்டார்கள். ஒருவேளை சிறிய சண்டைகள் வந்தாலும் கூட அதை சமாளித்து விடுவார்கள். இவர்கள் குடும்ப மகிழ்ச்சியாக இருப்பதை எப்போதுமே உறுதி செய்வார்கள்.