- Home
- Astrology
- இந்த 5 ராசிக்காரர்களிடம் பொய் சொல்லி தப்பிக்கவே முடியாது.! இவங்ககிட்ட பொய் சொன்னா டக்குனு மாட்டிப்பீங்க.!
இந்த 5 ராசிக்காரர்களிடம் பொய் சொல்லி தப்பிக்கவே முடியாது.! இவங்ககிட்ட பொய் சொன்னா டக்குனு மாட்டிப்பீங்க.!
Zodiac Signs that can detect lies : ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்துவமான ஆளுமைப் பண்புகள், திறமைகள் இருக்கும். பொய் சொல்பவர்களை எளிதில் கண்டறியும் திறன் கொண்ட ஐந்து ராசிக்காரர்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Zodiac Signs that can detect lies
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் தனித்துவமான ஆளுமைப் பண்புகளும், திறமைகளும் இருக்கும். சில ராசிகளில் பிறந்தவர்கள் நாம் பொய் சொல்லும் முன்பே, நம் கண்களையும் உடல் மொழியையும் வைத்து நாம் எதையோ மறைக்கிறோம் என்பதை கண்டுபிடித்து விடுவார்கள். இது ஏதோ மாயம், மந்திரம் கிடையாது. இது அவர்களின் அபாரமான கணிப்புத் திறன் மற்றும் உள்ளுணர்வு மட்டுமே. ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்களுக்கு இந்த ‘பொய் கண்டறியும் கருவி’ பிறப்பிலேயே அமைந்துவிடுகிறது. அந்த அசாத்திய புத்திசாலிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களை ஏமாற்றுவது என்பது, எரியும் நெருப்பில் கையை விடுவதற்கு சமம். இவர்களுக்கு இயல்பாகவே ஒரு விதமான எக்ஸ் ரே பார்வை உண்டு. நீங்கள் பேசும் வார்த்தைகளை விட உங்கள் கண்கள் எங்கே பார்க்கிறது? உங்கள் கைகள் எப்படி அசைகிறது? என்பதை உன்னிப்பாக கவனிப்பார்கள். ஒரு சிறிய சந்தேகம் வந்துவிட்டால் போதும் அதன் வேர் வரை சென்று உண்மையை தோண்டி எடுப்பதில் கில்லாடிகளாக விளங்குகிறார்கள். இவர்கள் பெரும்பாலும் அமைதியாக இருப்பார்கள். ஆனால் அந்த அமைதிக்கு பின்னால் ஒரு பொய்யை குறித்து அவர்கள் பெரிய வரைபடமே வரைந்து கொண்டிருப்பார்கள். இவர்களிடம் பொய் சொல்லி தப்பிப்பது என்பது இயலாத காரியம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களை புதன் பகவான் ஆட்சி செய்கிறார். அறிவுக்கு காரகரான புதன் பகவான் கன்னி ராசிக்காரர்களுக்கு மூளையை அதிவேகமாக செயல்படுத்தும் திறமையை கொடுத்துள்ளார். இவர்கள் தகவல்களை சேமிப்பதிலும், அதை ஒப்பிட்டுப் பார்ப்பதிலும் வல்லவர்களாக விளங்குகின்றனர். நேற்று சொன்ன கதைக்கும், இன்று சொன்ன கதைக்கும் சிறு வித்தியாசம் இருந்தாலும் இவர்களது மூளை கணினி போல உடனே கண்டுபிடித்து விடும். இவர்கள் துப்பறியும் நிபுணர் போல நுணுக்கமான கேள்விகளை கேட்டு நம்மை திணறடிப்பார்கள். அந்த கேள்விகளாலேயே உங்கள் பொய் அம்பலமாகிவிடும். மிகச் சிறிய விவரங்களை கூட கூர்மையாகக் கேட்டு பொய்யை இவர்களால் எளிதில் உறுதிப்படுத்த முடியும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் கலகலப்பாக பழகுவார்கள் என்பதால், இவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நினைத்து விடாதீர்கள். புதன் பகவானை அதிபதியாகக் கொண்ட இவர்கள், மிகச் சிறந்த தகவல் தொடர்பாளர்கள். நீங்கள் ஒரு பொய் சொன்னால் அது அப்படியே திருப்பி உங்களிடம் வேறு மாதிரி கேட்பார்கள். அதில் நீங்கள் தடுமாறினால், நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்பதை உறுதி செய்து கொள்வார்கள். ஒரு சூழலை மிக விரைவாக மதிப்பீடு செய்யும் திறமையும் மிதுன ராசிக்காரர்களுக்கு உண்டு. இவர்கள் பலதரப்பட்ட மக்களுடன் எளிதாக பழகுவதால் மனிதர்களின் இயல்பு இவர்களுக்கு அத்துபடி. அதனால் தான் ஒருவர் சொல்லும் பொய்யை எளிதில் மோப்பம் பிடித்து விடுவார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் மிகவும் முதிர்ச்சியானவர்கள். இவர்களை உணர்ச்சிவசப்படுத்தி ஏமாற்றுவது என்பது மிகவும் கடினமான காரியமாகும். நீங்கள் பதட்டப்படுவதை அல்லது உங்கள் குரலில் ஏற்படும் நடுக்கத்தை இவர்கள் நிதானமாக கவனிப்பார்கள். இது இப்படி நடப்பதற்கு சாத்தியமே இல்லையே என்று லாஜிக்காக பேசி உங்கள் பொய்யை உடைப்பார்கள். ஒரு முறை நீங்கள் பொய் சொல்லி மாட்டிக் கொண்டால் இவர்கள் நம்பிக்கையை மீண்டும் பெறுவது என்பது குதிரை கொம்பாக இருக்கும். ஒரு விஷயத்தை தர்க்க ரீதியாக ஆராய்ந்து பார்ப்பதில் கில்லாடிகள். நீங்கள் அவர்களை ஏமாற்ற முயல்கிறீர்கள் என்பது என்றால் உங்கள் நடவடிக்கையை வைத்தே அதை அவர்கள் எளிதில் அறிந்து கொள்வார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் மற்றவர்களை விட ஒரு படி மேலே சிந்திப்பவர்கள். இவர்களுக்கு தெரியாத மனித உணர்ச்சிகளே இல்லை என்று கூறலாம். இவர்கள் மனிதர்களை பொதுவாக பார்க்காமல், அவர்களின் ஆன்மாவை ஊடுருவி பார்ப்பார்கள். இவர்களுக்கு ஒரு விஷயம் சரியில்லை தோன்றினால் அது பெரும்பாலும் சரியாகவே இருக்கும். இவர்கள் உணர்வுகளுக்கு அடிமையாகாமல் உண்மையை மட்டும் பார்ப்பதால் பொய்களை இவர்களிடம் இருந்து மறைக்க முடியாது. நீங்கள் பொய் சொன்னால் உங்கள் குரலில் வெளிபடும் பதற்றம் அல்லது கலக்கத்தை சரியாக கவனித்து நீங்கள் பொய் சொல்வதை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்.
பொய் சொல்வது எளிது. ஆனால் ஒரு புத்திசாலியிடம் பொய் சொல்லி தப்பிப்பது கடினம். மேலே சொன்ன ஐந்து ராசிக்காரர்களும் வெறும் அறிவால் மட்டுமல்ல, அனுபவத்தாலும், கூர்மையான கவனிப்பு திறனாலும் பொய்பை சுலபமாக அறிந்து கொள்கிறார்கள். எனவே இந்த ராசிக்காரர்களிடம் பேசும் பொழுது உண்மையை மட்டும் பேசுவது உங்களுக்கு நலம் பயக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

