MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Tamil Puthandu 2026 : தமிழ் புத்தாண்டில் மேஷத்தில் உருவாகும் குபேர யோகம்.! இந்த 4 ராசிகளுக்கு லட்சாதிபதியாகும் யோகம் கிடைக்கும்.!

Tamil Puthandu 2026 : தமிழ் புத்தாண்டில் மேஷத்தில் உருவாகும் குபேர யோகம்.! இந்த 4 ராசிகளுக்கு லட்சாதிபதியாகும் யோகம் கிடைக்கும்.!

Kubera Yog 2026 Lucky Zodiac Signs : ஜோதிடத்தின் படி ஏப்ரல் 14ஆம் தேதி குபேர யோகம் உருவாக இருக்கிறது. இந்த யோகம் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 02 2026, 11:10 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Kubera Yog 2026 Lucky Zodiac Signs
Image Credit : Asianet News

Kubera Yog 2026 Lucky Zodiac Signs

வேத ஜோதிடத்தில் கிரகங்களின் ராஜாவாக சூரிய பகவான் அறியப்படுகிறார். இவர் 30 நாட்களுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். இவர் ராசியை மாற்றும் போதெல்லாம் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. தற்போது மீன ராசியில் பயணித்து வரும் சூரிய பகவான், ஏப்ரல் 14ஆம் தேதி மேஷ ராசிக்குள் நுழைகிறார். சூரியன் மேஷ ராசியில் நுழையும் பொழுது தமிழ் புத்தாண்டான பராபவ வருடமும், சித்திரை மாதமும் பிறக்கிறது. இந்த நேரத்தில் மங்களகரமான குபேர யோகமும் உருவாகிறது.

26
குபேர யோகம் என்றால் என்ன?
Image Credit : Asianet News

குபேர யோகம் என்றால் என்ன?

மேஷ ராசியின் அதிபதியான செவ்வாய் பகவானும், சூரிய பகவானும் நட்பு கிரகங்களாகும். எனவே சூரியன் மேஷ ராசியில் அமர்வதால் இந்த சுப யோகம் உருவாக உள்ளது. குபேரன் லட்சுமி தேவியின் அம்சம் என்பதால் சில ராசிக்காரர்களுக்கு இந்த யோகம் செல்வ வளத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளித் தர இருக்கிறது. தமிழ் புத்தாண்டு அன்று உருவாகும் குபேர யோகத்தால் பலன் பெற உள்ள ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Related Articles

Related image1
ஏப்ரல் 11 முதல் இந்த 6 ராசிகளுக்கு ஜாக்பாட்! குரு, புதன் பெயர்ச்சியால் கொட்டப்போகும் பணம்!
Related image2
பரணி நட்சத்திரத்தில் அமரும் புதன்.! இந்த 5 ராசிகளுக்கு தொழிலில் அசுர வளர்ச்சி.! லாபம் கொட்டும்.! கோடீஸ்வர யோகம் கிட்டும்.!
36
மேஷம்
Image Credit : AI Generated

மேஷம்

மேஷ ராசியின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் குபேர யோகம் உருவாக இருக்கிறது. இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் பல வழிகளில் நன்மைகளைப் பெறுவீர்கள். ஏப்ரல் மாதம் முழுவதும் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் உயரும். கடினமான பணிகளையும் முடித்துக் காட்டுவீர்கள். நிதி ஆதாயங்கள் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்கப்படும். தொழில் செய்து வருபவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். வணிகர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கான புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள்.

46
சிம்மம்
Image Credit : AI Generated

சிம்மம்

சிம்ம ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் குபேர யோகம் உருவாக இருக்கிறது. இது அதிர்ஷ்ட வீடு என்றும் அழைக்கப்படுகிறது. எனவே சிம்ம ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். எதிர்மறை எண்ணங்கள் விலகி, நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். எத்தனை கடினமான சூழ்நிலை இருந்தாலும், சவால்கள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் திறன் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குபேரன் அருளுடன் லட்சுமி தேவியின் அருளும் கிடைப்பதால் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.

56
துலாம்
Image Credit : AI Generated

துலாம்

துலாம் ராசியின் 7ஆம் வீட்டில் குபேர யோகம் உருவாக உள்ளது. இந்த வீடு களத்திர ஸ்தானம் என்றும் திருமண மற்றும் கூட்டாண்மைகளை குறிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. எனவே இந்த காலகட்டத்தில் திருமணத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண வாழ்க்கை சுமூகமாக மாறும். கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலையில் இருந்து வந்த தடைகள் அகலும். பணியிடத்தில் உங்களை வாட்டி வதைத்து வந்த அதிகாரிகள் மாற்றப்படுவார்கள். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். பண வரவு உயரும். நிதி நிலைமை இருமடங்காகும். வாழ்க்கை செழிப்பாக மாறும். நீங்கள் அனுபவித்து வந்த அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு கிடைக்கும்.

66
தனுசு
Image Credit : AI Generated

தனுசு

தனுசு ராசியின் ஐந்தாவது வீட்டில் குபேர யோகம் உருவாக உள்ளது. ஐந்தாம் வீடு பஞ்சம ஸ்தானம் என்றும், பூர்வ புண்ணிய ஸ்தானம் என்றும் அழைக்கப்படுகிறது. குழந்தைகள் மூலம் நல்ல செய்திகளை கேட்பீர்கள். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும். தொழிலில் இருந்து வந்த மந்த நிலை நீங்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குபேரனின் அருளால் பணவரவு சிறப்பாக இருக்கும். குழந்தைகளுக்கு வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் தேடி வரும். வேலையில்லாமல் தவித்து வரும் பட்டதாரி இளைஞர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
உங்கள் தலையெழுத்தை மாற்றும் அனுமன் வழிபாடு! 12 ராசிகளும் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள்!
Recommended image2
ஏப்ரல் 11 முதல் இந்த 6 ராசிகளுக்கு ஜாக்பாட்! குரு, புதன் பெயர்ச்சியால் கொட்டப்போகும் பணம்!
Recommended image3
ஜோதிட ரகசியம்: இந்த கிரகம் இருந்தால் ஏழ்மை நீங்கும்.. செல்வம் கொட்டும்.!
Related Stories
Recommended image1
ஏப்ரல் 11 முதல் இந்த 6 ராசிகளுக்கு ஜாக்பாட்! குரு, புதன் பெயர்ச்சியால் கொட்டப்போகும் பணம்!
Recommended image2
பரணி நட்சத்திரத்தில் அமரும் புதன்.! இந்த 5 ராசிகளுக்கு தொழிலில் அசுர வளர்ச்சி.! லாபம் கொட்டும்.! கோடீஸ்வர யோகம் கிட்டும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved