MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • This Week Rasi Palan: முக்கிய வீட்டில் சந்திக்கும் 4 கிரகங்கள்.! மகர ராசியின் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரப்போகுது.!

This Week Rasi Palan: முக்கிய வீட்டில் சந்திக்கும் 4 கிரகங்கள்.! மகர ராசியின் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரப்போகுது.!

This Week Rasi Palan Makaram: பிப்ரவரி 09 முதல் பிப்ரவரி 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மகர ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 10 2026, 04:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
கிரக நிலைகள்:
Image Credit : Asianet News

கிரக நிலைகள்:

மகர ராசி நேயர்களே, இத்தனை நாட்களாக ராசியில் நிலவிய கிரகச் சேர்க்கையில் மாற்றம் ஏற்படுகிறது. இந்த வார இறுதியில் செவ்வாய் மட்டும் ராசியில் சஞ்சரிக்கிறார். பிற கிரகங்கள் தனம், வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செய்து சஞ்சரிக்கிறார்கள். இதன் காரணமாக சுப பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

பொதுவான பலன்கள்:

எடுத்த காரியங்களில் தடைகள் வந்தாலும் வார இறுதியில் வெற்றி கிடைக்கும். இதுவரை நிலவி வந்த பிரச்சனைகள் விலகத் தொடங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிடிவாத குணத்தை குறைத்துக் கொள்வது அவசியம். நீண்ட தூர பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படலாம். எனவே திட்டமிட்டு செயல்படுவது நல்லது.

நிதி நிலைமை:

தன ஸ்தானத்தில் சுப கிரகங்கள் இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். கொடுத்த கடன்கள் மீண்டும் வசூல் ஆவதற்கான வாய்ப்புகள் உண்டு. வரவுக்கு ஏற்ற செலவுகள் இருந்தாலும் சாதுரியமாவ கையாளுவீர்கள். யாருக்கும் கடன் கொடுக்கவோ அல்லது ஜாமீன் கையெழுத்து போடவோ இந்த வாரம் உகந்ததல்ல.

வேலை மற்றும் தொழில்:

தொழிலில் கடினமான பணிகளையும் கூட சுலபமாக முடித்து வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் நிலவிய பிரச்சனைகள் விலகும். சிலருக்கு தொழில் கடன் கிடைக்கும். வேலையில் உங்களுக்கு எதிராக சதி செய்து வந்தவர்கள், தாமாக விலகுவார்கள். புதிய முதலீடுகளை தள்ளிப் போடவும். கூட்டாளிகளுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும்.

குடும்ப உறவுகள்:

பிள்ளைகளின் உதவியால் அடமானம் வைத்த நகைகளை மீட்டு எடுப்பீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களில் உண்மையாக இருப்பவர்கள் யார்? உங்களை பகடைக்காயாக பயன்படுத்துபவர்கள் யார்? என்கிற உண்மை புரியும். பூர்வீகச் சொத்துக்களில் சிறு முயற்சிகள் மூலம் சாதகமான நிலை உருவாகும்.

ஆரோக்கியம்:

இந்த வாரம் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். பழைய நோய்கள் தலை தூக்கலாம். இருப்பினும் மருத்துவ உதவி கொண்டு அனைத்தும் கட்டுக்குள் இருக்கும். கண்கள் அல்லது பற்கள் சார்ந்த உபாதைகள் வரக்கூடும். மன அழுத்தத்தை குறைக்க யோகா செய்வது நலம்.

கல்வி:

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். தொழில்நுட்பக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு சிறப்பான வாரமாக இருக்கும். மறதி ஏற்பட வாய்ப்பு உள்ளதால் எழுதிப் பழகும் முறையை கையாளுவது நல்லது. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கூடுதல் முயற்சி தேவைப்படும்.

சந்திராஷ்டம நாட்கள்:

இந்த வாரம் மகர ராசிக்கு சந்திராஷ்டம நாட்கள் எதுவும் இல்லை. இருப்பினும் கிரகங்களின் நிலை காரணமாக பேசும் பொழுது வார்த்தைகளில் கவனமும், நிதி விஷயங்களில் எச்சரிக்கையுடனும் இருப்பது நல்லது.

பரிகாரங்கள்:

ராஜ அலங்கார முருகனை வழிபடுவது நன்மை தரும். சனிக்கிழமைகளில் அனுமனுக்கு வெண்ணெய் காப்பிட்டு துளசி மாலை சாற்றி நெய் தீபமேற்றி வழிபடவும். இயலாதவர்களுக்கு அன்னதானம் செய்வது சங்கடங்களை தீர்க்க உதவும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Today Rasi Palan: இன்று மேஷ ராசியில் திரிகிரக யோகம்.! 6 ராசிக்காரர்களுக்கு பேங்க் பேலன்ஸ் எகிறும்.! 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ.!
Recommended image2
Numerology: இந்த தேதிகள்ல பிறந்தா நீங்க ரொம்ப லக்கி.! சீக்கிரமே கோடீஸ்வரர் ஆகிடுவீங்க.!
Recommended image3
Vaikasi Amavasai 2026: வரப்போகும் அமாவாசை! மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?
Related Stories
Recommended image1
விரைவில் குரு பெயர்ச்சி.! புதிய பாதையில் நகரப்போகும் குரு பகவான்.! குரு பெயர்ச்சி பலன்கள் இதோ.!
Recommended image2
திருவோண நட்சத்திரத்தில் அமரும் யமன்.! 4 ராசிகளின் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved