இந்த '7' பொருட்கள் மத்தவங்க வீட்டுல இருந்து வாங்காதீங்க; உங்களுக்கு துரதிஷ்டம் வரும்!
Vastu Tips : வாஸ்து சாஸ்திரத்தின் படி, மற்றவர்களின் வீட்டிலிருந்து சில பொருட்களை உங்களது வீட்டிற்கு கொண்டு வருவது நல்லதல்ல என்று சொல்லப்பட்டுள்ளது. அதனால் உங்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.

இந்த '7' பொருட்கள் மத்தவங்க வீட்டுல இருந்து வாங்காதீங்க; உங்களுக்கு துரதிஷ்டம் வரும்!
இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரத்திற்கு என சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அந்தவகையில், வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் வைக்கப்படும் பொருட்கள் வீட்டில் உள்ளவர்களின் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். சொல்லப் போனால் அந்த பொருட்கள் வீட்டில் இருப்பவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, நீங்கள் மற்றவர்களின் வீட்டிலிருந்து உங்களது வீட்டிற்கு கொண்டுவரக் கூடாதா சில பொருட்கள் சொல்லப்பட்டுள்ளன. அவற்றின் மீது நீங்கள் கொண்டு வந்தால் அது உங்களது வீட்டிற்கு துரதிர்ஷ்டத்தையும், எதிர்மறையையும் கொண்டுவரும் என்று சொல்லப்படுகிறது. இதனுடன் சேர்த்து உங்களது வாழ்க்கையில் ஏராளமான பிரச்சனைகளையும் நீங்கள் சந்திக்க நேரிடும். எனவே, வாஸ்து சாஸ்திரத்தின் படி மற்றவர்களின் வீட்டில் இருந்து ஒருபோதும் கொண்டுவரக் கூடாதா அந்த பொருட்கள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
குடை:
நீங்கள் ஒருபோதும் மற்றொருவரின் வீட்டில் இருந்து குடையை ஒருபோதும் உங்களது வீட்டிற்கு கொண்டு வர வேண்டாம். ஒருவேளை தவறுதலாக கூட நீங்கள் வேறு ஒருவரின் குடையை உங்களது வீட்டிற்கு கொண்டு வந்தால் உங்களது கிரகங்களின் நிலை மோசமடையக்கூடும் என்று நம்பப்படுகிறது. இதனுடன் உங்களது வாழ்க்கையில் பல பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த காரணத்தினால் தான் ஒருவரின் குடையை பெற்றாலும், அதை உடனே திருப்பிக் கொடுத்து விடுங்கள்.
இரும்பு பொருட்கள்:
மற்றொருவரின் வீட்டில் இருந்து இரும்பு பொருட்களை உங்களது வீட்டிற்கு ஒருபோதும் கொண்டு வர வேண்டாம் என்று சாஸ்திரம் சொல்லுகின்றது. ஒருவேளை நீங்கள் வேறு ஒருவரின் வீட்டிலிருந்து இரும்பு பொருளை உங்களது வீட்டிற்கு கொண்டு வரும்போது நீங்கள் அவர்களின் வீட்டில் இருந்து சனியை உங்கள் வீட்டிற்கு கொண்டு வருகிறீர்கள் என்று அர்த்தம். இதன் காரணமாக உங்களது வீட்டில் பண இழப்பு, எதிர்மறை, மோதல் போன்ற பல பிரச்சினைகள் அதிகரிக்கும்.
செருப்புகள்:
உங்களது அண்டை வீடு அல்லது உறவினர் வீட்டில் இருந்து செருப்புகள் அல்லது காலணிகளை ஒருபோதும் உங்கள் வீட்டிற்கு கொண்டு வர வேண்டாம். வாஸ்து சாஸ்திரத்தின் படி இப்படி செய்வதன் மூலம் சனியின் கோபம் உங்கள் மீது அதிகரிக்கும்.
தளபாடங்கள்:
வாஸ்து சாஸ்திரத்தின் படி, மற்றொருவரின் வீட்டில் இருந்து பழைய தளபாடங்களை உங்களது வீட்டிற்கு கொண்டு வர கூடாது. ஏனெனில் அவற்றில் எதிர்மறை ஆற்றல் இருப்பதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில் நீங்கள் வேறு ஒருவரின் வீட்டில் இருந்து தளபாடங்களை உங்களது வீட்டிற்கு கொண்டு வந்தால், அந்த வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றலும் அந்த பொருளுடன் சேர்ந்து உங்களது வீட்டிற்கு வந்துவிடும்.
காலியான பாத்திரங்கள்:
மற்றொருவரின் வீட்டில் இருந்து காலியான பாத்திரங்களை ஒருபோதும் உங்கள் வீட்டிற்கு கொண்டு வர வேண்டாம். இப்படி செய்வதன் மூலம் துரதிஷ்டம் உங்கள் வீட்டிற்கு வந்து விடும். இதனால் குடும்பத்தின் செழிப்பு குறையும்.
கேஸ் அடுப்பு:
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்களது வீட்டிற்கு வேறு ஒருவரின் வீட்டிலிருந்து கேஸ் அடுப்பு கொண்டு வர வேண்டாம். இப்படி செய்தால் உங்கள் வீட்டிற்கு ஆசீர்வாதங்கள் வருவது நின்றுவிடும்.
இதையும் படிங்க: பூஜை அறையில் பணம், நகைகளை வைத்தால் செல்வம் குவியுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
மின்சாரப் பொருட்கள்:
மற்றவர்களின் வீட்டில் இருந்து எந்த ஒரு மின்சார பொருட்களையும் இலவசமாக உங்கள் வீட்டிற்கு கொண்டு வர வேண்டாம். இப்படி நீங்கள் செய்தால் உங்கள் வாழ்க்கையில் சோகம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.
இதையும் படிங்க: கோயிலுக்குபோய்ட்டு வீட்டுக்கு வர்றப்ப செய்யும் '1' செயலால் பூரண அருள்!!