- Home
- Astrology
- Oct 28 Today Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இன்று சொத்துக்கள் விஷயங்களில் நல்ல செய்தி கிடைக்கும்.! ரெடியா இருங்க.!
Oct 28 Today Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இன்று சொத்துக்கள் விஷயங்களில் நல்ல செய்தி கிடைக்கும்.! ரெடியா இருங்க.!
Today Rasi Palan : அக்டோபர் 28, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

அக்டோபர் 28, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:
தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு மிதமான பலன்களைத் தரக்கூடிய நாளாக இருக்கும். எந்த ஒரு செயலிலும் அவசரம் காட்டாமல் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. தடைபட்டிருந்த காரியங்களை முடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் ரீதியாகவோ அல்லது வேலையிலோ கூடுதல் பணிச்சுமையை ஏற்க வேண்டிய சூழல் வரலாம்.
நிதி நிலைமை:
உங்கள் நிதி நிலைமை மேம்படக்கூடிய வாய்ப்புகள் இன்று கிடைக்கலாம். பெரிய அளவில் நில விஷயங்களை முடிப்பதற்கான வாய்ப்புகள் வரலாம். உங்களுக்கு வந்து சேர வேண்டிய பழைய கடன்கள் அல்லது பணம் ஆகியவை திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நிலம் சார்ந்த முதலீடுகளில் இன்றைய தினம் ஈடுபடுவீர்கள்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்பத்தில் சிறிய அளவிலான குழப்பங்கள் வரலாம் என்றாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது. வாழ்க்கைத் துணை மூலம் இன்று மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். துணையுடன் இருக்கும் உறவை பலப்படுத்த நீங்கள் தெளிவாக புரிந்து கொண்டு உணர்ச்சிபூர்வமான ஆதரவை அளிக்க வேண்டும். அடுத்தவர்களின் பொறுப்புகளை ஏற்காமல் நீங்களே செயல்படுவது நல்லது.
பரிகாரங்கள்:
உங்கள் ராசியின் அதிபதியான தட்சிணாமூர்த்தியை வணங்குவது நல்லது. ஏழை மாணவர்களுக்கு கல்விக்கு உதவுங்கள். இயன்றவர்கள் ஏழை சிறுமிகளுக்கு உடைகள் வாங்கிக் கொடுப்பது நேர்மறை பலன்களை அதிகரிக்கும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.