- Home
- Astrology
- Astrology: 2026 முதல் சனி பகவான் இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குவாராம்.! உங்க ராசி இருக்கா?
Astrology: 2026 முதல் சனி பகவான் இந்த 4 ராசிக்காரர்களுக்கு செல்வத்தை வாரி வழங்குவாராம்.! உங்க ராசி இருக்கா?
4 zodiac signs who blessed by lord shani: 2026 ஆம் ஆண்டு முதல் சனி பகவான் சில ராசிகளுக்கு சுப பலன்களை அளிக்க இருக்கிறார். அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2026-ல் சனி பகவான் ஆசி பெறும் ராசிகள்
ஜோதிடத்தின் படி சனி பகவான் சக்தி வாய்ந்த கிரகமாகவும் நம், கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவராகவும் கருதப்படுகிறார். நம் செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்கும் அவர், வாழ்க்கையில் பலவிதமான சோதனைகளை சந்திக்க முக்கிய காரணமாக இருக்கிறார். ஒருவருக்கு சனி பகவானின் ஆசி இருந்தால் ஏழை கூட பணக்காரராக மாற முடியும். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டு அவர் சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளை வாரி வழங்க இருக்கிறார்.
சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் வரை சஞ்சரிக்கிறார். தற்போது அவர் மீன ராசியில் பின்னோக்கிய நிலை (வக்ர நிலையில்) பயணித்து வருகிறார். நவம்பர் மாதம் முதல் அவர் நேரடியாக பயணிக்க உள்ளார். நவம்பர் 2025 தொடங்கி 2027 ஆம் ஆண்டு வரை மீன ராசியில் அவர் நேரடி நிலையில் பயணிக்கிறார். அப்படி அவர் மீன ராசியில் இருக்கும் பொழுது நான்கு ராசிக்காரர்கள் பல நன்மைகளை பெற இருக்கின்றனர். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் அருளால் 2026 ஆம் ஆண்டு நன்மைகள் கிடைக்கும் ஆண்டாக இருக்கும். சனி பகவான் நிலையான வெற்றியை ரிஷப ராசிக்காரர்களுக்கு அளிக்க இருக்கிறார். அவரது செல்வாக்கு காரணமாக வேலை அல்லது தொழிலில் இருந்த தடைகள் படிப்படியாக தீரும். கடின உழைப்பும், ஒழுக்கமும் நீண்ட கால வெற்றிக்கு வழிவகுக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் ஆதாயங்கள் கிடைக்கும். இந்த ஆண்டு கஷ்டங்கள், சங்கடங்கள் இருந்தாலும் சனி பகவான் வெற்றி பெறுவதற்கான வழிகளை அளிப்பார். தொழில், வணிகம், தனிப்பட்ட வாழ்க்கை, வேலை என அனைத்திலும் சுமூகமான நிலையை காண்பீர்கள். இருப்பினும் இந்த ஆண்டில் அவசரமாக எந்த முதலீடுகளை செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
சிம்மம்
2026 ஆம் ஆண்டில் சிம்ம ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி நடக்கும். இதனால் சில தடைகள், தாமதங்கள் மற்றும் சிரமங்களை சிம்ம ராசிக்காரர்கள் சந்திக்க நேரிடலாம். மேலும் சனி பகவானின் ஆதிக்கம் காரணமாக ஆரோக்கியம் மற்றும் குடும்ப உறவுகளில் சிக்கல்களை சந்திக்கலாம். இருப்பினும் கடினமாகவும், நேர்மையாகவும் உழைப்பவர்கள் சனி பகவானின் அருளை முழுமையாக பெற்று நீண்ட கால வெற்றியையும், நிலையான முடிவுகளையும் அடைவார்கள். சனி பகவான் இந்த காலகட்டத்தில் சிம்ம ராசிக்காரர்களுக்கு கட்டுப்பாடு, ஒழுக்கம், பொறுமை ஆகியவற்றை கற்றுக் கொடுக்கிறார். அவரின் இந்த சஞ்சாரமானது எதிர்காலத்தில் நன்மையைப் பயக்கும். நிதி சார்ந்த விஷயங்களில் பொறுமையை கடைப்பிடிப்பது நீடித்த பாதுகாப்பிற்கு வழிவகுக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு சனி பகவான் பல வழிகளில் நன்மையை தருவார். அவர்களின் பொறுமை, கடின உழைப்பு, செயல்களின் அடிப்படையில் பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு ஒழுக்கத்தையும், நேர்மையையும் சனி பகவான் கற்றுக் கொடுக்கிறார். இதன் காரணமாக வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் ஏற்பட உள்ளன. சனி பகவானின் ஆசி காரணமாக தொழிலில் நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் தடையின்றி வெற்றிகரமாக முடிவடையும். முயற்சிகளுக்கு ஏற்ற பலன்கள் இந்த ஆண்டு முதல் கிடைக்கும். புதிய வீடு, சொத்து, ஆடம்பரம், வசதிகள் கிடைக்கும் யோகம் உண்டு. நிதி நிலைமை கணிசமாக உயரும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2026 ஆம் ஆண்டு ஏழரை சனியின் இறுதிக் கட்டமாகும். இதனால் கும்ப ராசிக்காரர்கள் சனி பகவானின் ஆசியை பரிபூரணமாக பெற உள்ளனர். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியும், தொழிலில் லாபமும், வணிகத்தில் நிதி முன்னேற்றமும் ஏற்படும். நீங்கள் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். குடும்ப உறவுகள் வலுப்படும். இனி வரவிருக்கும் புதிய சவால்களையும் திறம்பட எதிர்கொண்டு வெற்றியைப் பெறுவீர்கள். சனி பகவானின் ஆசி காரணமாக நீங்கள் எடுக்கும் வேலைகள் அனைத்திலும் புதிய மைல் கல்லை எட்டுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)