- Home
- Astrology
- Oct 22 Today Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இன்று நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.! கடவுள்களின் ஆசி பரிபூரணமாக உண்டு.!
Oct 22 Today Rasi Palan: தனுசு ராசி நேயர்களே, இன்று நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.! கடவுள்களின் ஆசி பரிபூரணமாக உண்டு.!
Today Rasi Palan : அக்டோபர் 22, 2025 தேதி தனுசு ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

அக்டோபர் 22, 2025 தனுசு ராசிக்கான பலன்கள்:
தனுசு ராசி நேயர்களே, இன்றைய நாள் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியங்களில் முன்னேற்றம் காண்பதற்கான வாய்ப்பு உள்ளது. திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள்.
நிதி நிலைமை:
இன்று பொருளாதார நிலைமை திருப்திகரமாக இருக்கும். வருமானத்திலிருந்து சேமிக்க முயற்சி செய்வீர்கள். பணப்புழக்கம் சீராக இருக்கும். இருப்பினும், திடீர் செலவுகள் காரணமாக நிதி நெருக்கடிகள் ஏற்படலாம். எனவே பணத்தை சேமிப்பது நல்லது. தேவையில்லாமல் செலவழிப்பது, பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்த்து விடுங்கள். முதலீடுகளில் கவனம் தேவை.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உறவுகளின் ஆதரவு கிடைக்கும். தம்பதிகளுக்கிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. குழந்தைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் நல்ல செய்திகள் கிடைக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உறவினர்களுடன் இருந்த மன வருத்தங்கள் நீங்கும்.
பரிகாரங்கள்:
இன்று பகவான் கிருஷ்ணரை வழிபடுவது நல்லது. உங்கள் ராசிநாதனான குரு பகவானை வழிபடுங்கள். உங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்து காரியங்களை தொடங்குங்கள். கோவில்களுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவது எதிர்மறை ஆற்றல்களை விலக்க உதவும். முடிந்தால் ஏழை மாணவர்கள் அல்லது முதியவர்களுக்கு உதவிகளை செய்யுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.