- Home
- Astrology
- Astrology: டிசம்பரில் 5 முறை மாற்றம் காணும் புதன்.! 4 ராசிகளுக்கு பணமும், பெயரும், புகழும் குவியப்போகுது.!
Astrology: டிசம்பரில் 5 முறை மாற்றம் காணும் புதன்.! 4 ராசிகளுக்கு பணமும், பெயரும், புகழும் குவியப்போகுது.!
Budh Gochar 2025 lucky zodiac signs: டிசம்பர் 2025 புதன் பகவான் இரண்டு முறை ராசி மாற்றம் செய்கிறார். இதன் காரணமாக பலன் பெறும ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

புதன் பெயர்ச்சி 2025
ஜோதிடத்தில் புதன் பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் படிப்பு, பேச்சு, புத்திசாலித்தனம், கல்வி, வணிகம், வியாபாரம், தகவல் தொடர்பு மற்றும் நுட்பமான அறிவு ஆகியவற்றின் காரகராக கருதப்படுகிறார். டிசம்பர் 2025ல் புதன் பகவான் ஐந்து முறை தனது நிலைப்பாட்டை மாற்றுகிறார். இதில் இரண்டு முறை ராசி பெயர்ச்சிகளும், 3 நட்சத்திர பெயர்ச்சிகளும் அடங்கும்.
டிசம்பரில் நடக்கும் புதன் பெயர்ச்சி
டிசம்பர் 6, 2025 புதன் பகவான் விருச்சக ராசிக்குள் நுழைய இருக்கிறார். இதற்கு முன் அவர் துலாம் ராசியில் வக்ர நிவர்த்தி அடைந்து விருச்சிக ராசிக்குள் செல்ல இருக்கிறார். அதேபோல் டிசம்பர் 28, 2025 புதன் பகவான் தனுசு ராசிக்குள் நுழைய இருக்கிறார். ராசியை மட்டும் அல்லாமல் மூன்று முறை நட்சத்திரத்தையும் மாற்றுகிறார். புதன் பகவான் டிசம்பரில் ஐந்து முறை தனது நிலையை மாற்றுவது சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்கவுள்ளது. அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
மேஷம்
புதன் பகவானின் நட்சத்திர மாற்றம் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் சிறப்பான நன்மையைப் பெற உள்ளனர். வணிகத்தின் காரகராக விளங்கும் புதன் பகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு வணிகத்தில் புதிய உச்சங்களை கொடுக்க இருக்கிறார். வேலை தேடுபவர்களுக்கு சிறந்த வேலை கிடைக்க வாய்ப்பும் உள்ளது. நிதி நிலைமை சீராகி பணத்தை சேமிப்பதற்கான வழிகள் உருவாகும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். மூத்த அதிகாரிகளின் ஆதரவு மற்றும் பாராட்டுக்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டு நின்ற வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
மிதுனம்
மிதுன ராசிக்கு புதன் அதிபதி என்பதால் இந்த பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு மிகுந்த சாதகமாக அமையும். நிதி நிலைமை மேம்படும். முதலீடுகள் மூலம் நல்ல லாபாயம் கிடைக்கலாம். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். தொழிலில் புதிய யோசனைகளை செயல்படுத்தி புதிய உச்சங்களை தொடுவீர்கள். சமூகத்தில் அந்தஸ்து மற்றும் கௌரவம் அதிகரிக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். உங்கள் கடின உழைப்புக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த மாதம் சிறப்பானதாக இருக்கும். அரசு வேலைக்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்கலாம்.
துலாம்
துலாம் ராசி காரர்களுக்கு புதன் பகவான் தொழில் ரீதியாக பல நன்மைகளை வழங்க உள்ளார். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து நேர்மறையான மாற்றங்கள் காணப்படும். நிலையான வருமானம் கிடைக்கும். வருமானத்தில் திடீர் அதிகரிப்பு காணப்படும். பணம் ஈட்டுவதற்கான புதிய வழிகள் கிடைக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள், பதவி உயர்வுகள் கிடைக்கலாம். ஒரு குழுவை தாங்கும் பொறுப்புகள் உங்களுக்கு வழங்கப்படலாம். உடன் பிறந்தவர்களால் முழு ஆதரவு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு டிசம்பர் மாதத்தில் நடைபெறும் புதனின் நட்சத்திர பெயர்ச்சியால் பணமும் வெற்றியும் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுழ தொழில் செய்து வருபவர்கள் திடீர் பண வரவு மற்றும் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள். தொழிலை விரிவு படுத்துவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உங்கள் கடின உழைப்புக்கான வெற்றி கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு இருப்பதால் ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகள் குவியும். சொந்தமாக வீடு வாங்க முயற்சிப்பவர்களுக்கு கனவு நனவாகும். ஏற்றுமதி இறக்குமதி தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். மாதத்தின் பிற்பகுதியில் உடல் நலத்தில் சற்று ஆரோக்கியம் தேவை.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

