- Home
- Astrology
- Birth Date: இந்த 4 தேதியில் பிறந்தவங்க ரொம்ப ஸ்ட்ராங்கா இருப்பாங்க!! பிட்னஸ் பிரியர்கள்
Birth Date: இந்த 4 தேதியில் பிறந்தவங்க ரொம்ப ஸ்ட்ராங்கா இருப்பாங்க!! பிட்னஸ் பிரியர்கள்
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் உடற்பயிற்சியில் அதிக ஆர்வமாக இருப்பார்கள். அவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

பிறந்த தேதி
இந்து மதத்தில் ஜோதிடம் மற்றும் எண் கணிதத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு. அவை அவர்களது வாழ்க்கையை பெரிதும் பாதிப்பதாக நம்புகிறார்கள். குறிப்பாக எண் கணிதத்தின்படி ஒருவரது பிறந்த தேதியை வைத்து அவரது ஆளுமை மற்றும் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று சொல்லிவிடலாம். அந்த வகையில் ஒரு குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் உடற்பயிற்சியில் ரொம்பவே ஆர்வமாக இருப்பார்கள். என்று எண் கணிதம் சொல்கிறது. இவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதற்காக அவர்கள் கடுமையாக உடற்பயிற்சி செய்வார்கள். அத்தகைய தேதிகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
எண் 1
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 1, 19 மற்றும் 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் உடற்பயிற்சியில் ரொம்பவே ஆர்வமாக இருப்பார்கள். இவர்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தில் மிகவும் அக்கறை உடையவர்கள். இவர்கள் தங்களது உடலை வலுவாக வைத்திருக்க கடுமையாக உழைப்பார்கள். இதனால் அவர்கள் ஜிம்மில் அதிக நேரம் செலவிடுவார்கள். இதன் கரணமாக இந்த தேதிகளில் பிறந்தவர்கள் எப்போதுமே தங்களது உடலை ஃபிட்டாக வைத்திருப்பார்கள்.
எண் 5
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 5, 14 அல்லது 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 5 இன் கீழ் வருவார்கள். இவர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை உள்ளவர்கள். இதனால் அவர்கள் விடாமுயற்சியுடன் உடற்பயிற்சி செய்வார்கள். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க விரும்புவதால், உடற்பயிற்சி அதற்கு சிறந்த வழி என்று அதை தேர்வு செய்வார்கள்.
எண் 9
எண் கணிதத்தின்படி எந்த மாதத்திலும் ஒன்பது 18 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் எண் 9 இன் கீழ் வருவார்கள். இவர்கள் இயற்கையாகவே இரக்கம் மற்றும் பச்சபாதம் உடையவர்கள். மேலும் இவர்கள் ஆரோக்கியத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். இதனால் இவர்கள் உடற்பயிற்சியில் ஆர்வமாக செய்வார்கள். இதனால் இவர்கள் ஆர்வலராகவும் இருப்பார்கள்.
எண் 22
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 22 ஆம் தேதியில் பிறந்தவர்கள் உடற்பயிற்சியில் தீவிர ஆர்வலராக இருப்பார்கள். இவர்கள் விடாமுயற்சி மற்றும் கடின உழைப்புடன் உடற்பயிற்சி செய்வார்கள். இவர்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய விரும்புவார்கள். சொல்லப்போனால் இவர்கள் தங்களது வாழ்க்கையை உடற்பயிற்சிக்காக அர்ப்பணிப்பார்கள்.