- Home
- Astrology
- Birth Date: இந்த தேதியில் பொறந்தவங்கள எல்லாரும் ரொம்ப வெறுப்பாங்களாம்.. ஆனா ஒரு ட்விஸ்ட்.!
Birth Date: இந்த தேதியில் பொறந்தவங்கள எல்லாரும் ரொம்ப வெறுப்பாங்களாம்.. ஆனா ஒரு ட்விஸ்ட்.!
எண் கணிதத்தின் படி குறிப்பிட்ட சில தினங்களில் பிறந்தவர்களைப் பார்த்து அனைவரும் பொறாமை கொள்வார்கள் என்றும், அவர்களின் வளர்ச்சி தாங்க முடியாததாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
Birth Date Numerology
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவமான ஆளுமை இருக்கும். சிலர் தங்களுடைய நடத்தை மற்றும் வார்த்தைகளால் பிறரின் மனங்களை வெல்வார்கள். சிலருக்கோ எவ்வளவு நல்ல செயல்கள் செய்தாலும், கடினமாக முயற்சித்தாலும் பிறரை கவர முடியாது. அவர்கள் எவ்வளவு உயரத்திற்குச் சென்றாலும், எவ்வளவு நேர்மையானவராக இருந்தாலும், எவ்வளவு உயரத்தை அடைந்தாலும் பிறரால் வெறுக்கப்படுகிறார்கள். அவர்களின் முன்னால் புகழ்ந்து பேசப்பட்டாலும், பின்னால் சென்று சபிக்கப்படுகிறார்கள். எண் கணிதத்தின் படி அத்தகையவர்களை எளிதாக அடையாளம் காணலாம். குறிப்பாக நாம் பிறந்த தேதிகளின் அடிப்படையில் அவர்களை அறிந்து கொள்ளலாம். அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
எண் 4
ஒவ்வொரு மாதத்திலும் நான்காம் தேதிகளில் பிறந்தவர்கள் ராகுவின் செல்வாக்கு மிக்கவர்களாக இருக்கின்றனர். அதேபோல் 13, 22 ஆகிய எண்களின் கூடுதலும் நான்கில் வருவதால் இவர்களின் மீதும் ராகுவின் செல்வாக்கு உள்ளது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் துணிச்சலானவர்களாகவும், அதே சமயம் புத்திசாலிகளாகவும் உள்ளனர். அவர்கள் தங்களுடைய கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் வெற்றியை பெறுகின்றனர். இருப்பினும் அவர்கள் மீது பலரும் பொறாமை கொள்கின்றனர். இதன் காரணமாக அவர்களை கீழே இழுக்க முயற்சிக்கின்றனர். இந்த எண்களில் பிறந்தவர்களின் வளர்ச்சியை பலராலும் ஜீரணிக்க முடியாது. எனவே பலரும் இவர்களை ஏதோ ஒரு வகையில் காயப்படுத்த முயற்சிக்கிறார்கள்.
எண் 8
ஒவ்வொரு மாதத்திலும் 8, 17, 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள் எட்டாம் எண்ணுக்கு கீழ் வருகிறார்கள். இவர்களின் மீது சனியின் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையிலேயே நேர்மையானவர்களாக இருக்கின்றனர். ஒருபோதும் மற்றவர்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இவர்களிடம் இருக்காது. அதேபோல் தங்களை பிறர் ஏமாற்றுவதையும் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். இருப்பினும் இவர்களின் வாழ்ககையில் பல நெருக்கடிகளை சந்திக்கலாம். இவர்கள் எந்த காரியத்தை தொடங்கினாலும் ஆரம்பத்தில் பின்னடைவுகளையே சந்திக்கின்றனர். இருப்பினும் அவர்களின் வளர்ச்சி அபாரமானது. இவர்கள் மீது பலரும் பொறாமை கொள்ளும்போதும் மெதுவான வளர்ச்சியால் இவர்கள் முன்னேறிச் சென்று கொண்டே உள்ளனர்.
எண் 9
ஒவ்வொரு மாதத்தில் ஒன்பதாம் தேதியிலும் 18, 27 போன்ற எண்களைக் கூட்டினால் 9 வரும் தேதியில் பிறந்தவர்களும் செவ்வாய் கிரகத்தின் செல்வாக்கு உட்பட்டவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் துணிச்சலானவர்கள் நீதியை நிலை நாட்டுவதற்காக தங்களால் இயன்றதை செய்கிறார்கள். அவர்களின் நேர்மை காரணமாக பல இடங்களில் அவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் தன்னலமின்றி அவர்கள் நேர்மையாக முன்னேறிக்கொண்டே இருக்கின்றனர்.