ஜூலை 26, இன்றைய ராசி பலன்கள் : பணமழை கொட்டப்போகும் போகும் ராசிகள்!
இன்றைய ராசி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகளுக்கு வெற்றிகள், சவால்கள், மற்றும் பல்வேறு அனுபவங்களைப் பற்றி விவரிக்கின்றன. தொழில், குடும்பம், நிதி, மற்றும் உறவுகள் போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களை இங்கே காணலாம்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை 1)
யாருக்கும் தீங்கு செய்ய நினைக்காத மேஷ ராசிய நேயர்களே, இன்று உங்களுக்கு வெற்றிகள் குவியும், பல்வேறு சாதனைகளை செய்வீர்கள். நண்பர்களுக்கு உதவி செய்யும் சூழல் உருவாகும். குடும்பத்தில் கலகலபான சூழல் உருவாகும். நீண்ட நாள் செய்ய நினைத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். வியாபரம் மற்றும் தொழிலில் செல்வாக்கு அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். கணவன்–மனைவி உறவுகளில் இனிமை பெருகும். காதலர்கள் இடையே இருந்த பிணக்குகள் மறையும். அன்யோன்யம் பிறக்கும். குழந்தைகளின் கல்வி வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் மனமகிழ்ச்சி தரும். பயணங்கள் சாதகமாக இருக்கும். இருந்த போதிலும் இன்று உங்களுக்கு சற்று பொறுமை தேவைப்படும் நாள். மற்றவர்களின் சிந்தனைக்கும் கருத்துக்கும் மதிப்பு கொடுத்தால் நன்மை கிடைக்கும்.
- அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
- அதிர்ஷ்ட எண்: 9
- லாபம் தரும் முதலீடு: தொழில் விரிவாக்கம்
- பரிகாரம்: முருகனை 6 விளக்கு ஏற்றி வணங்கவும்
- வணங்க வேண்டிய தெய்வம்: முருகன்
ரிஷபம் (கார்த்திகை 2-4, ரோகிணி, மிருகசீரிஷம் 1-2)
மற்றவர்கள் மீது அன்பை பொழியும் ரிஷப ராசி நேயர்களே இன்று நீங்கள் பல்வேறு சவால்களை எளிதில் சமாளீப்பிர்கள். உங்களின் நேர்மையான முயற்சிகளுக்கு இன்று முழுமையான ஆதரவு கிடைக்கும் நாள். வியாபாரத்திலும் உத்தியோகத்தில் எதிர்பாராத ஒப்பந்த வாய்ப்பு வரலாம். அதன் மூலம் உடனடி லாபம் கிடைக்கலாம். நிலம், வீடு உள்ளிட்ட சொத்து சார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் பெற வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் விட்டுக்கொடுத்து செல்லும் சூழல் உருவாகும். குடும்ப பிரச்சினைகள் இறுதியில் சமாதானமாக மாறும். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வீர்கள். இன்று உங்களுக்கு மன அமைதி தேவைப்படும் நாள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விசயங்களில் கூடுதல் கவனம் தேவை. நெருங்கிய பால்ய நண்பர்கள் மூலம் நல்ல வாய்ப்பு உருவாகும்.
- அதிர்ஷ்ட நிறம்: பச்சை
- அதிர்ஷ்ட எண்: 6
- லாபம் தரும் முதலீடு: நிலம், சொத்து
- பரிகாரம்: பசுவுக்கு பசும்புல் போடவும்
- வணங்க வேண்டிய தெய்வம்: பரமேஸ்வரர்
மிதுனம் (மிருகசீரிஷம் 3-4, திருவாதிரை, புனர்பூசம் 1-3)
எப்போதும் சுறுசுறுப்பாகவும், தனது இலக்கை நோக்கி நோக்கி நேர்மையாக சிந்திக்கும் மிதுன ராசி நேயர்களே இன்று நீங்கள் சமயோசிதமாக செயல்பட வேண்டிய நாள். பணம் கொடுக்கல் வாங்கல் மற்றும் நிதியியல் விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. சில புதிய திட்டங்கள் தாமதமாக வாய்ப்புகள் இருந்தாலும் பழைய தொழில் உங்களுக்கு கை கொடுத்து தூக்கி விடும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வீண் வாக்குவாதங்களை தவிர்த்து அமைதி காத்தால் நன்மை உண்டு. கல்லூரி நண்பர்கள் வழியாக பயனுள்ள தகவல்கள் வரும் சேரும். குடும்பத்தில் பெற்றோர் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பெற்றோல் சொல்லும் ஆலோசனைகளை கேட்டு நடந்தால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
- அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
- அதிர்ஷ்ட எண்: 5
- அதிர்ஷ்ட முதலீடு: பங்கு சந்தை
- பரிகாரம்: விஷ்ணுவுக்கு பச்சை கீரை நிவேதனம்
- வணங்க வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)
நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டு எதையும் பலமுறை யோசித்து செய்யும் குணம் உடைய கடக ராசி நேயர்களே இன்று உங்களுக்கு பல்வேறு வழிகளில் லாபம் கிடைக்கும். உறவினர்கள், நண்பகர்கள் நல்ல செய்தியை கொண்டு வருவர். காதலர்கள் இடையே இருந்த தவறான புரிதல் காணாமல் போகும். பல நாட்கள் தேங்கி கிடந்த காரியத்தை இன்று சட்டென்று முடித்து சாதிப்பீர்கள். தொழிலில் கூடுதல் பொறுப்பு கிடைக்கலாம். பணவரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் லாபத்தை அள்ளித்தரும். புதிய நபர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுமூக நிலை காணப்படும். கணவரன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். தொழிலை விரிவு படுத்துவதற்காக செல்லும் பயணத்தில் நன்மை உண்டு. இன்று கடன் வாங்க வேண்டாம்.
- அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
- அதிர்ஷ்ட எண்: 2
- அதிர்ஷ்ட முதலீடு: விலையுயர்ந்த உபகரணங்கள்
- பரிகாரம்: அம்மன் கோவிலில் விளக்கு ஏற்றவும்
- வணங்க வேண்டிய தெய்வம்: காமாட்சி அம்மன்
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1)
நண்பர்களையும், உறவினர்களையும் தலைமையேற்று வழிநடத்தும் ஆற்றல் கொண்ட சிம்ம ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு சாதகமான நாள். வெற்றிக்கான வாய்ப்புகள் உருவாகும் நாள். தொழிலில் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு வாய்ப்பு உண்டு. மேல் அதிகாரிகளால் பாராட்டு கிடைக்கும். நம்பிக்கை உள்ள நண்பர்கள் உதவியுடன் முக்கிய விஷங்களில் நல்ல முடிவுகள் கிடைக்கும். குடும்பத்தில் திருமண விஷயம், சுப நிகழ்ச்சிகள் குறித்து நேரடியாக பேசப்படும். வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
- அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
- அதிர்ஷ்ட எண்: 1
- லாபம் தரும் முதலீடு: தொழில் விரிவாக்கம்
- பரிகாரம்: சூரியனை வணங்கி சூர்ய நமஸ்காரம் செய்யவும்
- வணங்க வேண்டிய தெய்வம்: சூரியன்
கன்னி (உத்திரம் 2-4, ஹஸ்தம், சித்திரை 1-2)
எதிரிகளுக்கு கூட உதவி செய்து சந்தோஷப்படும் கன்னி ராசி நேயர்களே, இன்று உங்கள் திட்டங்களில் சிறிது தாமதம் ஏற்படும் என்றாலும் இறுதியில் வெற்றி கனியை தட்டி பறிப்பீரகள். தொழில் மற்றும் வியாபாரத்தில் பணவரவு இருக்கலாம், இருந்த போதிலும் செலவுகள் கட்டுப்பாடின்றி செல்லும். ஆலயம் செல்லும் யோசனை வரும். அமைதியாக இருந்தால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை எளிதில் சமாளிக்கலாம். நண்பர்கள் வருகை வீட்டில் மகிழ்ச்சியை தரலாம். எதை செய்தாலும் ஒரு முறைக்கு பலமுறை நிதானமாக யோசித்து செய்யவும். சனிக்கிழமையாய் இருப்பதால் பரிகாரம் அவசியம்.
- அதிர்ஷ்ட நிறம்: கிரே
- அதிர்ஷ்ட எண்: 7
- லாபம் தரும் முதலீடு: கல்வி, மருத்துவம்
- பரிகாரம்: ஐயனார் சுவாமியை வணங்கவும்
- வணங்க வேண்டிய தெய்வம்: ஐயனார்
துலாம் (சித்திரை 3-4, சுவாதி, விசாகம் 1-3)
சொல்வதை மட்டும் செய்யும் பழக்கம் உடைய துலாம் ராசி நேயர்களே, உங்களுக்கு இன்று பண்சுமை கொஞ்சம் கூடுதலாக இருக்கலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியால் சில விஷயங்கள் விரைவில் நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். குழந்தைகளின் கல்வி செலவு அதிகரிக்கலாம். உடல்நலத்தில் சிறிய சோர்வு வரலாம். கணவன் மனைவிக்குள் நெருக்கம் ஏற்படலாம். ஆலயம் சென்று வர சான்ஸ் கிடைக்கும். நினைத்த காரியத்தை எளிதில் செய்து முடித்து சாதனை படைப்பீர்கள்.
- அதிர்ஷ்ட நிறம்: நீலம்
- அதிர்ஷ்ட எண்: 4
- லபாம் தரும முதலீடு: சேமிப்பு திட்டம்
- பரிகாரம்: சனீஸ்வரன் சுவாமிக்கு எண்ணெய் தீபம்
- வணங்க வேண்டிய தெய்வம்: பகவதி அம்மன்
விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை)
பணம் மற்றும் புகழ்ச்சிக்கு என்றுமே மயங்காத விருச்சிக ராசி நேயர்களே இன்று நீங்கள் பல்வேறு சாதனைகளை அசால்டாக செய்து முடித்து சந்தோஷப்படுவீர்கள். உறவினர்களும் நண்பர்களும் கைகொடுத்து ஆதரிப்பார்கள். தொழிலில் பழைய ஒப்பந்தங்களை புதுப்பித்து லாபம் ஈட்ட வழிகாண்பீர்கள். பழைய கடனை வசூலிக்க ஏற்ற நாள். குடும்பத்தில் பெரியவர்களின் வழிகாட்டுதல் உலகத்தை புரிய வைக்கும். இன்று நீங்கள்உற்சாகம் குறையாமல் இருக்கலாம். பால்ய நண்பர்களிடம் இருந்து திடீர் அழைப்புகள் வரும். சொத்து வாங்குவதற்கு இருந்த தடைகள் விலகும்.
- அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
- அதிர்ஷ்ட எண்: 8
- லபாம் தரும் முதலீடு: வணிகம்
- பரிகாரம்: நாக பஞ்சமி நாளில் நாகபூசை
- வணங்க வேண்டிய தெய்வம்: சுப்பிரமணியர்
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1)
எதிரியாக இருந்தால் கூட அவர்களிடம் அன்புகாட்டும் குணம் உடைய தனசு ராசி நேயர்களே இன்று உங்களின் மனநிலை மிகவும் உற்சாகத்துடன் காணப்படும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும. குடும்ப உறுப்பினர்கள் நம்பிக்கை அதிகரிக்கும். தம்பதிகள் ஒருவரை ஒரிவர் புரிந்தகொள்வர். வணிகம் மற்றும தொழிலில் புதிய முயற்சி வெற்றி பெறும். உறவினர்கள் மற்றம் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். பயணங்களில் கூடுதல் கவனம் தேவை. தெய்வ வழிபாடு நிம்மதி தரும்.
- அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
- அதிர்ஷ்ட எண்: 3
- லாபம் தரும் முதலீடு: பயண சேவை
- பரிகாரம்: வியாழனன்று குருவை வழிபடவும்
- வணங்க வேண்டிய தெய்வம்: தட்சிணாமூர்த்தி
மகரம் (உத்திராடம் 2-4, திருவோணம், அவிட்டம் 1-2)
எல்லோருக்கும் கேட்காமலேயே உதவி செய்யும் குணம் உடைய மகர ராசி நேயர்களே, இந்று உங்களின் உழைப்பிற்குப் பலன் கிடைக்கும் நாள். சிலருக்கு உத்யோகம் அல்லது தொழில் மாற்றம் தேவைப்படும். குடும்பத்தில் சகோதர உறவுகள் வலுவடையும். தம்பதிகள் இடையே சிறு மன கசப்பு வந்தாலும் இறுதியில் ஒருவரை ஒருவர் முழுமையாக புரிந்துகொள்வீர்கள். வாகன பராமரிப்பு தேவை. உத்தியோகத்தில் கூடுல் பொறுப்பு உண்டு. போகிறபோக்கில் செய்யும் காரியங்களில் கூட லாபம் கிடைக்கும். நீண்ட நாள் திட்டமிட்டு செய்ய முடியாமல் தடைபட்டு வந்த காரியம் இன்று டக்கென முடியும்.
- அதிர்ஷ்ட நிறம்: நீலச்சிவப்பு
- அதிர்ஷ்ட எண்: 10
- லபாம் தரும் முதலீடு: வீட்டு சொத்து
- பரிகாரம்: விநாயகருக்கு எள்ளுருண்டை படைத்து வழிபடவும்
- வணங்க வேண்டிய தெய்வம்: விநாயகர்
கும்பம் (அவிட்டம் 3-4, சதயம், பூரட்டாதி 1-3)
எந்த சிக்கலுக்கும் நிதானமாக யோசித்து தீர்வ காணும் மனமுடைய கும்பராசி நேயர்களே இன்று உங்களுக்கு புதிய வாய்ப்புகள் வழிகாட்டும். தொழிலில் லாபமும் உத்யோகத்தில் பதவி உயர்வும் கிடைக்கும். பயணங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்ப உறவுகள் உங்களின் ஆலோசனையை கேட்டு நடப்பர். சரியான நேரத்தில் நண்பர்களின் உதவி கிடைக்கும். எதிர்பாராத செலவுகள் வரலாம். இருந்தபோதிலும் பணவரவு இருக்கும் என்பதால் சிரமம் குறையும். தூரத்து உறவினரிடம் இருந்து சந்தோஷ செய்தி வந்து சேரும்.
- அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
- அதிர்ஷ்ட எண்: 11
- லாபம் தரும் முதலீடு: டிஜிட்டல் சேவைகள்
- பரிகாரம்: சனி பகவானுக்கு எண்ணெய் தீபம்
- வணங்க வேண்டிய தெய்வம்: சனி பகவன்
மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)
கேட்காதவர்களுக்கு கூட உதவி செய்து சந்தோஷப்படும் மீனராசி நேயர்களே, இன்று தோல்விகளுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும் நாள். உங்கள் முயற்சிகள் சாதகமாக அமையும். வியாபாரம் மற்றும் தொழிலில் பழைய பாக்கிகளை வசூலாகும் நேரம் இது. குடும்பத்தில் மகிழ்ச்சி சூழ்ந்திருக்கும். தம்பதிகள் இடையே இருந்த பிணக்குகள் காணாமல் பகோகும். புதிய முதலீடுகள் லாபம் தரும். இன்று உங்களுக்கு லாபத்தையும் சந்தோஷத்தையும் அள்ளித்தரும் நாள்.
- அதிர்ஷ்ட நிறம்: தேன் நிறம்
- அதிர்ஷ்ட எண்: 12
- லபாம்தரும் முதலீடு: கலை/இசை
- பரிகாரம்: பசுமாட்டுக்கு பச்சை முளைக்கடலை தரவும்
- தெய்வம்: மகாவிஷ்ணு