- Home
- Astrology
- புதன் பெயர்ச்சி 2025: சுக்கிரனின் சொந்த ராசியில் குடியேறும் புதன்.! 3 ராசிகளுக்கு பொன், பொருள், பணம் குவியப் போகுது.!
புதன் பெயர்ச்சி 2025: சுக்கிரனின் சொந்த ராசியில் குடியேறும் புதன்.! 3 ராசிகளுக்கு பொன், பொருள், பணம் குவியப் போகுது.!
Budhan Peyarchi: அடுத்த சில தினங்களில் புதன் பகவான் சுக்கிரனின் சொந்த ராசியான துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

புதன் பெயர்ச்சி 2025
9 நவகிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் நகர்ந்து கொண்டே இருக்கின்றன. அப்போது அவை பிற கிரகங்களுடன் இணைந்து சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்குகின்றன. இந்த நிலையில் பேச்சு, படிப்பு, புத்திசாலித்தனம், வணிகம் ஆகியவற்றின் காரகராகவும், கிரகங்களின் இளவரசனாகவும் அறியப்படும் புதன் பகவான் அக்டோபர் 3 ஆம் தேதி துலாம் ராசிக்குள் நுழைய இருக்கிறார். அவர் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு சுமார் 23 நாட்களுக்கு ஒரு முறை இடம்பெயர்வார்.
புதன் தனது இயக்கத்தை மாற்றும் பொழுதெல்லாம் அது 12 ராசிகளின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் புதனின் துலாம் ராசி பெயர்ச்சியால் பலன் பெறும் மூன்று ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்கு புதனின் பெயர்ச்சி மிகவும் நன்மை பயக்க உள்ளது. புதன் உங்கள் ராசியில் இருந்து செல்வம் மற்றும் பேச்சின் இடத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இதன் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் அளவில்லாத செல்வத்தை பெற உள்ளனர். புதிய நிதி ஆதாயங்களை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கை இலக்குகள் அனைத்தும் நிறைவேறும் காலம் நெருங்கியுள்ளது. பேச்சின் காரகராக புதன் விளங்குவதால் உங்கள் தொடர்புத்திறன் மேம்படும். இதன் காரணமாக நீங்கள் மக்களை ஈர்ப்பீர்கள்.
வேலையில் இருப்பவர்களுக்கு சம்பளம் அதிகரிக்கக்கூடும். உங்கள் கடின உழைப்பு பாராட்டப்படும். வேலையில் பதவி உயர்வு கிடைக்கலாம். ஒரு குழுவை தாங்கும் பணியும் உங்களுக்கு கொடுக்கப்படும். உங்கள் செல்வாக்கு மற்றும் அதிகாரம் இந்த காலகட்டத்தில் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களின் லக்ன வீட்டில் புதன் பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக துலாம் ராசிக்காரர்கள் பல நன்மைகளை அனுபவிப்பீர்கள். உங்கள் தன்னம்பிக்கை, தைரியம், அதிகரிக்கும். குழப்பமான முடிவுகளில் இருந்து விடுபட்டு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடனான ஒருங்கிணைப்பு மேம்படும். உங்கள் தனிப்பட்ட உறவுகள் வலுப்படும். புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
மாணவர்கள் படிப்பில் வெற்றி பெறுவீர்கள். போட்டித் தேர்வுகளில் மாணவர்கள் நேர்மறையான முடிவுகளைக் காண்பீர்கள். இந்த காலம் நிதி ஸ்திரத் தன்மையும் வழங்கும். பல வழிகளில் சிக்கி இருந்த பணம் மீண்டும் கைக்கு வந்து சேரும். நீண்ட பயணங்கள் சாத்தியமாகும். இதன் காரணமாக மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு புதனின் துலாம் ராசி பெயர்ச்சியானது மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் வாழ்க்கையின் பல பகுதிகளில் நேர்மையான மாற்றங்கள் ஏற்படும். நிலுவையில் இருந்த பணிகள் நிறைவடையும். நீண்ட காலமாக கிடப்பில் இருந்த பணிகளை வெற்றிகரமாக முடித்து சாதித்து காட்டுவீர்கள். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். லாபகரமான ஒப்பந்தங்கள் மற்றும் புதிய தொடர்புகளால் வணிகர்கள் பயனடைவார்கள்.
தொழில் தொடர்பான பயணங்கள் நன்மையில் முடியும். லாபம் இரட்டிப்பாகும். இதன் காரணமாக புதிய முதலீடுகளில் சேமிப்பைத் தொடங்குவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் தொழில் வாழ்க்கை என ஒட்டுமொத்தமாக மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)