- Home
- Astrology
- Astrology: செவ்வாயின் சொந்த ராசியில் குடியேறும் புதன்.! தீபாவளிக்குப் பின் லக்கி பாஸ்கராக மாறப்போகும் 3 ராசிகள்.!
Astrology: செவ்வாயின் சொந்த ராசியில் குடியேறும் புதன்.! தீபாவளிக்குப் பின் லக்கி பாஸ்கராக மாறப்போகும் 3 ராசிகள்.!
Budhan Peyarchi: தீபாவளிக்குப் பிறகு புதன் பகவானின் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க உள்ளது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

புதன் பெயர்ச்சி 2025
நவ கிரகங்களில் புதன் கிரகமானது பேச்சு, அறிவு, தகவல் தொடர்பு, புத்திசாலித்தனம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். தீபாவளிக்குப் பிறகு அக்டோபர் 24 ஆம் தேதி புதன் கிரகம் விருச்சிக ராசிக்கு உள் நுழைகிறார். விருச்சிக ராசியானது செவ்வாய் பகவனால் ஆளப்படும் ராசியாகும். செவ்வாயின் சொந்த ராசிக்குள் புதன் நுழைவது மூன்று ராசிகளின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. விருச்சிக ராசியில் புதனின் சஞ்சாரம் வணிகம், தொழில், காதல், நிதி, கல்வி மற்றும் குடும்ப வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
அக்டோபர் 24 ஆம் தேதிக்கு பிறகு மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும். புதனின் சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களின் நிதி வாழ்க்கையை பலமாக்கும். நீங்கள் அனைத்து விதமான வசதிகளையும் அனுபவிப்பீர்கள். நீங்கள் செய்துவரும் தொழில் அல்லது வணிகத்திலிருந்து லாபம் பெருகும். உங்கள் வருமானத்தை அதிகரிக்கும் வழிகளைக் காண்பீர்கள்.
நீங்கள் விரும்பிய அனைத்து ஆசைகளும் நிறைவேறும். நீங்கள் விரும்பும் வாழ்க்கை மிக அழகாக மாறும். கன்னி ராசிக்கும் மிதுன ராசிக்கும் புதன் அதிபதியாவார். எனவே விருச்சிக ராசியில் புதனின் பிரவேசம் மிதுன ராசிக்கு மிகவும் நன்மைகளை வழங்கும். முக்கிய விஷயங்களில் புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுத்து வெற்றிகளைப் பெறுவீர்கள். சமூகத்தில் புகழும், மரியாதையும் அதிகரிக்கும்.
துலாம்
அக்டோபர் 24 ஆம் தேதி புதன் துலாம் ராசியின் இரண்டாம் வீட்டில் நுழைவார். இதன் காரணமாக துலாம் ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். துலாம் ராசிக்காரர்களுக்கு புதன் பகவான் அனைத்து வசதிகளையும் வழங்குகிறார். புதனின் அருளால் வீட்டில் உள்ள கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். விரும்பிய வேலைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறும்.
அனைத்து நிதி சிக்கல்களும் நீங்கி, மகிழ்ச்சி அதிகரிக்கும். புதிய ஆடைகள், புதிய நகைகள், புதிய வீடு, மனை, நிலம், வாகனம் ஆகியவற்றை வாங்கும் யோகமும் கைகூடும். உங்கள் தொடர்புத் திறன் வலுப்படும். இதன் காரணமாக வணிகத்தை விரிவுபடுத்தி, தொழிலில் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகளை வலுப்படுத்த வாய்ப்புகள் ஏற்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு அக்டோபர் 24 ஆம் தேதிக்கு பின்னர் அதிர்ஷ்ட கதவு திறக்கும். புதன் பகவான் உங்களுக்கு இரட்டிப்பு ஆசிகளை வழங்க இருக்கிறார். உங்கள் கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவீர்கள். அனைத்து நிதி பிரச்சனைகளிலிருந்தும் விடுபட்டு செல்வத்தை பெருக்குவதற்கு நல்ல வாய்ப்பு ஏற்படும். திருமண வாழ்க்கையில் பரஸ்பர புரிதல் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
நீங்கள் எந்த துறையில் முதலீடு செய்தாலும் அதில் லாபம் கிடைக்கும். ஜோதிடத்தின் படி கும்ப ராசியின் 10வது வீட்டில் புதன் பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும் என்று கூறப்படுகிறது. உங்கள் தொழில் இருந்த போட்டியாளர்கள், எதிரிகளை வெற்றி கொண்டு தொழிலிலும் முன்னேறச் செல்வீர்கள். உங்கள் நற்பெயர் மரியாதை இந்த காலகட்டத்தில் அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)