Birth Date: இந்த தேதில பிறந்தவங்கள காதலிக்காதீங்க! ஈஸியா பிரேக் பண்ணிடுவாங்க
எண் கணிதத்தின்படி, சில தேதிகளில் பிறந்தவர்கள் காதலை எளிதில் கைவிடுவார்கள். அது எந்தெந்த தேதிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

எந்த தேதியில் பிறந்தவர்கள் பிரேக் அப் செய்து விடுவார்கள்?
காதல் ஒரு உணர்வு பூர்வமான உணர்வு. சிலர் தங்களது காதல் கைகூட எந்த எல்லைக்கும் செல்வார்கள். அந்தவகையில் எண் கணிதத்தின்படி, ஒரு சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் காதலை மிக எளிதாக பிரேக்கப் செய்து விடுவார்கள். அது எந்தெந்த தேதிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
1, 10, 19 மற்றும் 28 தேதிகள்..
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த நான்கு தேதிகளில் பிறந்தவர்களுக்கு தலைமைத்துவம் குணங்கள் இருக்கும். இவர்களுக்கு சுதந்திரம் முதன்மையானது. இவர்கள் காதலில் சிறிய தடை ஏற்பட்டால் உடனே அதை கைவிட்டு விட்டு தங்களது வாழ்க்கையை திட்டமிடுவது நல்லது என்று நினைப்பார்கள். மேலும் இவர்கள் காதல் வாழ்க்கையில் அதிகம் தர்க்கம் செய்வார்கள்.
5, 14 மற்றும் 23 தேதிகள்..
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் வேடிக்கையாகவும், சந்தோஷமாகவும் வாழ விரும்புபவர்கள். இவர்கள் ரொம்பவே வித்தியாசமானவர்கள். ஒரு உறவில் இருப்பது இவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தும் என்பதால், காதல் உறவில் இருந்தால் ஒரு சிறிய காரணத்தை கண்டுபிடித்து உடனே பிரேக் அப் செய்து விடுவார்கள். இவர்கள் காதலை இழிவாக பார்ப்பார்கள்.
7, 16 மற்றும் 25 தேதிகள்..
எண் கணிதத்தின்படி, எந்த மாதத்திலும் இந்த மூன்று தேதிகளில் பிறந்தவர்கள் உள்முக சிந்தனையாளர்களாக இருப்பார்கள். இவர்கள் அதிக உணர்ச்சி வசப்படும் இயல்புடையவர்கள். இந்த இயல்பு காரணமாக இவர்கள் காதலில் ஏதேனும் மோசமான அனுபவம் ஏற்பட்டால் உடனே அந்த உறவை கைவிட்டு விடுவார்கள். காரணம் இவர்கள் மீண்டும் மீண்டும் காயப்படுவதை விரும்ப மாட்டார்கள். இவர்கள் உறவை விட மன அமைதிக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
4, 13 , 22 மற்றும் 31 தேதிகள்..
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த நான்கு தேதிகளில் பிறந்தவர்கள் காதலித்தாலும் எதிர்பார்த்த அளவு உறவு இல்லையென்றால் உடனே பிரேக்கப் செய்ய தயங்க மாட்டார்கள். காதலில் சிறிய தடை ஏற்பட்டால் கூட உடனே முற்றுப்புள்ளி வைத்து விடுவார்கள்.