MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology Tamil: ருத்ர தாண்டவம் ஆடப்போகும் ராகு.! பெரிய கண்டத்தில் சிக்கும் 4 ராசிகள் இவைதான்.!

Astrology Tamil: ருத்ர தாண்டவம் ஆடப்போகும் ராகு.! பெரிய கண்டத்தில் சிக்கும் 4 ராசிகள் இவைதான்.!

Astrology Tamil: ஜூன் மாத இறுதியில் நடக்க இருக்கும் ராகுவின் பெயர்ச்சியானது, சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிக்கல்களை உருவாக்கும் என்று நம்பப்படுகிறது. அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Jun 24 2026, 12:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ராகு பெயர்ச்சி 2026
Image Credit : ChatGPT

ராகு பெயர்ச்சி 2026

ஜோதிட சாஸ்திரத்தில் ராகு பகவான் நிழல் கிரகமாகவும், பின்னோக்கி நகரும் கிரகமாகவும் அதிகப்படுகிறார். இவர் மாயைகள், ஆசைகள், எதிர்பாராத மாற்றங்கள், திடீர் திருப்பங்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறார். ராகுவின் பெயர்ச்சி என்றாலே பலருக்கும் அச்சம் ஏற்படும். அவரின் ஆட்டம் மிகுந்த மோசமான பிரச்சனைகளில் தள்ளிவிடும். அந்த வகையில் அவர் ஜூன் 30-ம் தேதி அவிட்ட நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இந்த நட்சத்திரத்தில் ராகு பகவான் ஏப்ரல் 2027 வரை சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக நான்கு ராசிக்காரர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அந்த ராசிகள் குறித்து இங்கு காணலாம்.

இதையும் படியுங்கள்: Numerology Calculator: அடுத்த ஜென்மத்தில் என்னவாக பிறப்பீர்கள்? பிறந்த தேதியை வைத்தே கண்டுபிடிக்கலாம் வாங்க.!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

ராகுவின் நட்சத்திரப் பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு சுபமானதாக இல்லை. ரிஷப ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் எதிர்பாராத சவால்கள், நிதி சிக்கல்கள், சிரமங்களை சந்திக்க நேரிடலாம். திடீர் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். பண விஷயங்களில் இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. முதலீடு சார்ந்த விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கை தேவை. குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள், குழப்பங்கள் வந்து நீங்கும். வியாபாரம் மற்றும் வேலையில் தடைகள் ஏற்படலாம். பணியிடத்தில் உங்கள் பெயருக்கு களங்கள் விளைவிக்கும் வகையில் நிகழ்வுகள் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

இதையும் படியுங்கள்: Astrology: இந்த 4 ராசியில் பிறந்தவர்களுக்கு உடன் பிறந்தவர்களே எதிரியாக மாறுவார்களாம்.! சகோதர பகை தரும் ராசிகள்.!

Related Articles

Related image1
Numerology: இந்த தேதிகளில் பிறந்த ஆண்கள் தலைசிறந்த மருமகனாக இருப்பார்களாம்.! உங்க சொந்த மகன் மாதிரி நடந்துக்குவாங்களாம்.!
Related image2
Numerology: உங்கள் பிறந்த தேதியை சொல்லுங்க.! நீங்க ராமாயணத்தில் எந்த கதாப்பாத்திரம்ன்னு சொல்றோம்.!
35
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

மிதுன ராசிக்காரர்கள் ராகுவின் பெயர்ச்சியால் சில சோதனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் பொறுமையை சோதிக்கும் வகையில் சவால்கள் ஏற்படும். பெற்றோர் அல்லது சகோதரர்கள் உடனான உறவில் விரிசல்கள் ஏற்படும். வரவுக்கு மீறிய செலவுகள் உங்களை நிலை குலைய வைக்கும். குடும்ப வாழ்க்கையில் எதிர்பாராத பிரிவுகளை சந்திப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்து வந்த மந்த நிலை மேலும் அதிகரிக்கும். குறிப்பாக பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது இருக்கும். பணியில் இருப்பவர்களுக்கு வேலையில் பிரச்சனைகள், வேலை மாற்றம் ஆகியவை ஏற்படலாம். சம்பள உயர்வு, பதவி உயர்வில் தாமதம் ஏற்படும்.

இதையும் படியுங்கள்:  Numerology: பிறந்த தேதியின்படி நீங்கள் எந்த விலங்கின் குணத்தைக் கொண்டவர்? உங்களுக்குள் ஒளிந்திருக்கும் மிருகம் எது தெரியுமா?

45
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்கள் ராகுவின் பெயர்ச்சியால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணியிடத்திலும், பேச்சிலும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். புதிதாக தொடங்க நினைக்கும் காரியங்களில் சற்று தாமதம் ஏற்படும். முக்கியமான முடிவுகளை எடுப்பதை தள்ளி வைக்கவும். கடன் பிரச்சனைகள் மீண்டும் தலைதூக்கலாம். ஆன்லைன் பரிவர்த்தனைகளில் விழிப்புணர்வு தேவை. சிறிய கவனக்குறைவு கூட பெரிய இழப்புகளை ஏற்படுத்தும். பணியிடத்தில் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். குறிப்பாக உடன் பணிபுரிபவர்களிடம் தேவையில்லாத வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம். அது உங்களுக்கு எதிராக திரும்புவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

இதையும் படியுங்கள்:  Numerology: முன் ஜென்மத்தில் நீங்கள் என்னவாக பிறந்தீர்கள்? பிறந்த தேதியை வைத்தே தெரிஞ்சிக்கலாம் வாங்க.!

55
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி மனரீதியான அழுத்தங்களை அதிகரிக்கும். உங்கள் பொறுமையை சோதிக்கும் காலகட்டங்கள் உருவாகும். தேவையில்லாத பதற்றம், மன அழுத்தம், மனக்குழப்பங்கள் ஏற்படலாம். வேலையில் உங்கள் சுறுசுறுப்பு குறைந்து மந்த நிலை உருவாகும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் சார்ந்த கவலைகள் அதிகரிக்கும். நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்க வேண்டும். அமைதியை கடைப்பிடிப்பது நல்லது. முதலீடுகளை எடுப்பதற்கு முன்னர் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறும் என்பதால் எதையும் தாங்கும் மனதுடன் இருக்க வேண்டும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology : தொட்டதெல்லாம் வெற்றிபெறப்போகும் 5 ராசிகள்! 3 கிரகங்கள் கூட்டணியால் அற்புதப் பலன்கள்!
Recommended image2
Astrology: உங்கள் ராசி இதுவா? ஜூலை மாதத்தில் சூரியன், புதன், சுக்கிரன் தரும் மாற்றங்களால் காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்!
Recommended image3
CM Vijay: "அண்ணே... பெட்ரோல் போடவாவது காசு இருக்கா?!" ரூ.2 லட்சம் சம்பளத்தில் ‘பட்ஜெட்’ பத்மநாபனான சிஎம் விஜய்!
Related Stories
Recommended image1
Numerology: இந்த தேதிகளில் பிறந்த ஆண்கள் தலைசிறந்த மருமகனாக இருப்பார்களாம்.! உங்க சொந்த மகன் மாதிரி நடந்துக்குவாங்களாம்.!
Recommended image2
Numerology: உங்கள் பிறந்த தேதியை சொல்லுங்க.! நீங்க ராமாயணத்தில் எந்த கதாப்பாத்திரம்ன்னு சொல்றோம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved