MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: சனி தோஷத்தை போக்கும் எளிய பரிகாரம்.! விரய சனியை லாப சனியாக மாற்றும் ஜோதிட ரகசியம்.!

Astrology: சனி தோஷத்தை போக்கும் எளிய பரிகாரம்.! விரய சனியை லாப சனியாக மாற்றும் ஜோதிட ரகசியம்.!

விரய சனி, வாழ்வில் தடைகளையும் தேவையற்ற செலவுகளையும் ஏற்படுத்தலாம். ஆனால் சனிக்கிழமை வழிபாடு, தானம், ஆஞ்சநேயர் வழிபாடு போன்ற எளிய பரிகாரங்கள் மூலம் சனியின் தாக்கத்தை குறைத்து, விரயத்தை லாபமாக மாற்ற முடியும் என இக்கட்டுரை விளக்குகிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Mar 31 2026, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
சனி தோஷத்தை போக்கும் பரிகாரங்கள்.!
Image Credit : Asianet News

சனி தோஷத்தை போக்கும் பரிகாரங்கள்.!

ஜோதிடத்தில் சனி கிரகம் மிகவும் முக்கியமானதும், அதே நேரத்தில் பயத்தை ஏற்படுத்தக்கூடியதுமான கிரகமாக கருதப்படுகிறது. சனி ஒருவரின் வாழ்க்கையில் தாமதம், தடைகள், விரயம், மன அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தினாலும், அது முழுக்க தீமையை மட்டும் தருவதில்லை. சரியான பரிகாரங்கள் செய்தால், அதே சனி பெரும் லாபங்களையும், நிலைத்த வெற்றியையும் தரும் சக்தி கொண்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
விரய சனி என்றால் என்ன?
Image Credit : Asianet News

விரய சனி என்றால் என்ன?

ஜாதகத்தில் சனி 12-ஆம் இடத்தில் அல்லது விரய ஸ்தானத்தில் இருப்பது “விரய சனி” என்று அழைக்கப்படுகிறது. இதனால் தேவையற்ற செலவுகள், கடன் சுமை, மன உளைச்சல், முயற்சியில் தடை போன்ற பிரச்சினைகள் அதிகமாக காணப்படும். ஆனால் இதை சரியாக கையாள்ந்தால், இந்த விரயம் கூட முதலீடாக மாறி லாபமாக திரும்பும்.

37
சனி தோஷத்தை போக்கும் எளிய பரிகாரங்கள்
Image Credit : Social Media

சனி தோஷத்தை போக்கும் எளிய பரிகாரங்கள்

சனிக்கிழமை வழிபாடு

நீதிமானான சனி பகவான் அள்ளிக்கொடுக்கும் வள்ளல் என்கின்றன ஜோதிட நூல்கள். விரய சனிகாலத்தில் கூட நாம் செய்யும் எளிய பரிகாரங்கள் நம்மை பாதுகாக்கும் எனவும், எல்லாவற்றிலும் லாபத்தை அள்ளிக்கொடுக்கும் என்றும் ஜோதிட வல்லுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.  அதில் முக்கியமாக ஒவ்வொரு சனிக்கிழமையும் சனீஸ்வர பகவானை வழிபடுவது மிக முக்கியமாக சொல்லப்படுகிறது. எள் எண்ணெய் தீபம் ஏற்றி, “ஓம் சனீஸ்வராய நம:” என்று 108 முறை ஜபம் செய்ய வேண்டும் எனவும் அப்படி செய்தால் நம் ஜாதகத்தில் உள்ள ஜோஷங்கள் காணாமல் போகும் எனவும் ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். 

எள் மற்றும் கருப்பு பொருட்கள் தானம்

யார் யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து அவர்களுக்கு உதவி செய்தால் சனி பகவானின் தாக்கம் குறைந்து அவருடைய அருள் கிடைக்கும் என்கின்றனர் ஜோதிடர்கள். அதிலும் கருப்பு எள், கருப்பு துணி, இரும்பு போன்றவற்றை ஏழைகளுக்கு தானமாக கொடுத்தால் சனியின் தாக்கம் குறையும் என்கின்றனர் அவர்கள்.

47
ஆஞ்சநேயர் வழிபாடு
Image Credit : Gemini

ஆஞ்சநேயர் வழிபாடு

சனி தோஷத்தை குறைக்க ஆஞ்சநேயரை வழிபடுவது சிறந்த பரிகாரம். குறிப்பாக சனிக்கிழமைகளில் “ஹனுமான் சாலிசா” பாராயணம் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதேபோல் மற்ற நாட்களிலும் அருகேயுள்ள ஆஞ்சநேயர் ஆலயம் சென்று வழிபாடு நடத்தலாம். இது விரய சனியின் தாக்கத்தை போக்கி லாபத்தையும் சந்தோஷத்தையும் கொடுக்கும்.

உழைக்கும் மக்களுக்கு உதவி

சனி உழைப்பையும், தாழ்மையையும் குறிக்கிறது. ஆகவே கூலி தொழிலாளர்கள், முதியவர்கள் போன்றவர்களுக்கு உதவி செய்தால் சனி கருணை அதிகரிக்கும். அதேபோல் மாணவர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துதல் போன்றவையும் நல்ல பலனை கொடுக்கும் என்கின்றன ஜோதிட நூல்கள்.

57
நெறியான வாழ்க்கை முறை
Image Credit : AI

நெறியான வாழ்க்கை முறை

பொய் பேசாமல், நேர்மையாக வாழ்வது சனியின் அருளைப் பெற முக்கியமானது. தவறான வழிகளில் சம்பாதித்த பணம் சனியின் கோபத்தை அதிகரிக்கும். அதேபோல் நல்ல சிந்தனை மற்றும் தொடர் முயற்சி ஆகியவையும் நமக்கான ஆரோக்கிய வளர்ச்சியை தரும்.

67
விரய சனியை லாப சனியாக மாற்றுவது எப்படி?
Image Credit : Asianet News

விரய சனியை லாப சனியாக மாற்றுவது எப்படி?

விரய சனி உள்ளவர்கள் தங்கள் செலவுகளை கட்டுப்படுத்தி, சேமிப்பு பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதேசமயம் ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரித்தால் மன அமைதி கிடைக்கும். சனி கொடுக்கும் கஷ்டங்கள் நம்மை சோதிப்பதற்காகவே; அதை தாண்டினால் பெரிய வெற்றி நிச்சயம்.

77
 பயப்பட வேண்டியதில்லை
Image Credit : Asianet News

பயப்பட வேண்டியதில்லை

சனி தோஷம் என்றால் பயப்பட வேண்டியதில்லை. அது நம்மை ஒழுக்கமாகவும், பொறுமையாகவும் மாற்றும் ஒரு வாழ்க்கை ஆசிரியர். சரியான பரிகாரங்களும், நல்ல செயல்களும் இருந்தால், விரய சனி கூட லாப சனியாக மாறி வாழ்க்கையில் நிலையான முன்னேற்றத்தை அளிக்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jupiter Exalted in Cancer: நவராத்திரி தொடக்கத்தில் உச்சத்தில் குரு..! 4 ராசிகளுக்கு கொட்டும் பணம்..
Recommended image2
Vish Yoga : ரிவர்ஸ் ஆட்டம் ஆடும் சனி பகவான்... விஷ யோகத்தால் சிக்கலில் சிக்கும் 5 ராசிகள் என்னென்ன?
Recommended image3
Guru Peyarchi : அக்டோபர் 31 முதல் மாறப்போகும் குரு பகவான்! 12 ராசிகளுக்கும் என்னென்ன பலன்கள்?
Related Stories
Recommended image1
ஒரே வாரத்தில் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.! உடனே வேலை கிடைக்க புதன் பகவானுக்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரம்.!
Recommended image2
ராகு தோஷத்திலிருந்து விடுபட செய்ய வெண்டிய பரிகாரம்; பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன் கோயில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved