MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology:செல்வம், சுகம், வெற்றியை வரவழைக்கும் வண்ணங்கள்.! ஆடை நிறத்தால் மாறும் வாழ்க்கை.!

Astrology:செல்வம், சுகம், வெற்றியை வரவழைக்கும் வண்ணங்கள்.! ஆடை நிறத்தால் மாறும் வாழ்க்கை.!

வண்ணங்கள் எப்போதும் நம் மனநிலை, சிந்தனை மற்றும் அதிர்ஷ்டத்தை பாதிக்கின்றன. வேத ஜோதிடத்தின்படி, ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு நிறம் உண்டு. அதை அணிவது அந்த கிரகத்தின் நேர்மறை சக्तியை அதிகரிக்கும். இதனால் வெற்றி, செல்வம் கிடைக்கும்.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Sep 13 2025, 12:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
கிரக சக்தியை உயர்த்தும் அதிர்ஷ்ட நிறங்கள் – ஜோதிட ரகசியம்!
Image Credit : Asianet News

கிரக சக்தியை உயர்த்தும் அதிர்ஷ்ட நிறங்கள் – ஜோதிட ரகசியம்!

நாம் தினசரி அணியும் உடைகள், பயன்படுத்தும் பொருட்கள், வீட்டின் அலங்காரம் என அனைத்திலும் நிறங்கள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. வெறும் அழகிற்காக மட்டுமல்ல, நம் மனநிலையையும், சிந்தனையையும், அதிர்ஷ்டத்தையும் கூட நிறங்கள் பாதிக்கக்கூடியவை. வேத ஜோதிடக் கோட்பாடுகளின்படி ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்துவமான நிறம் உண்டு. அந்த நிறத்தை அணிவது அல்லது வாழ்க்கையில் பயன்படுத்துவது அந்த கிரகத்தின் நேர்மறை சக்தியை அதிகரிக்க உதவும் என்றும், எதிர்மறை விளைவுகளை குறைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
211
சூரியன் (Surya)
Image Credit : Pinterest

சூரியன் (Surya)

சூரியன் ஆற்றல், ஆரோக்கியம், அதிகாரம், தன்னம்பிக்கை ஆகியவற்றின் பிரதிநிதி. சிவப்பு, ஆரஞ்சு, தங்க நிறங்களை அணிவது சூரியனின் சக்தியை உயர்த்தும். இது தலைமைத் தன்மையை ஊக்குவித்து, சமூகத்தில் மதிப்பையும் பெருமையையும் தரும். குறிப்பாக முக்கியமான பேச்சுவார்த்தைகள் அல்லது வேலை நேர்முகங்களுக்கு சிவப்பு நிறத்தை அணிவது நன்மை தரும்.

311
சந்திரன் (Chandra)
Image Credit : Asianet News

சந்திரன் (Chandra)

சந்திரன் மனநிலை, உணர்ச்சி, குடும்ப பாசம், அமைதியை குறிக்கிறது. வெள்ளை, பால் நிறம் மற்றும் லைட் நீல நிறங்கள் சந்திரனின் சக்தியை அதிகரிக்கின்றன. இவை மன அமைதியையும், நல்ல உறக்கத்தையும் தரும். அதிகமான மன அழுத்தம் கொண்டவர்கள் இந்நிறங்களைப் பயன்படுத்தினால் சாந்தம் கிடைக்கும்.

411
செவ்வாய் (Mars)
Image Credit : Asianet News

செவ்வாய் (Mars)

தைரியம், வீரியம், உடல் சக்தியை குறிக்கும் செவ்வாய்க்கு சிவப்பு மற்றும் ஆழ்ந்த சிகப்பு நிறங்கள் ஏற்றவை. இந்த நிறங்கள் போட்டிகளில் வெற்றி பெறவும், தன்னம்பிக்கையுடன் செயல்படவும் உதவும். விளையாட்டு வீரர்கள் அல்லது சவாலான துறைகளில் பணிபுரிபவர்கள் செவ்வாயின் நிறங்களைத் தொடர்ந்து பயன்படுத்தினால் பலன் பெறுவர்.

511
புதன் (Mercury)
Image Credit : Instagram

புதன் (Mercury)

புதன் அறிவு, தொடர்பு, வணிக நுணுக்கம் ஆகியவற்றை குறிக்கிறது. பசுமை நிறம் புதனின் சக்தியை அதிகரிக்கும். இந்த நிறம் மனத் தெளிவைத் தருவதோடு கல்வி மற்றும் வியாபாரத்தில் வெற்றியையும் தரும். மாணவர்கள், தொழிலதிபர்கள், பேச்சுத்திறன் தேவைப்படும் துறையினர் பச்சை நிறத்தை அணிந்தால் முன்னேற்றம் காணலாம்.

611
குரு (Jupiter)
Image Credit : Pinterest

குரு (Jupiter)

ஆன்மீகம், கல்வி, வளம் ஆகியவற்றின் கிரகமான குருவுக்கு மஞ்சள் மற்றும் குங்குமப்பூ நிறம் சிறந்தவை. இந்த நிறங்கள் அறிவையும், ஆன்மீக முன்னேற்றத்தையும், ஆசீர்வாதங்களையும் ஈர்க்கும். குருவின் சக்தி நல்ல முறையில் செயல்படும்போது குடும்பத்தில் வளமும், சமூகத்தில் மதிப்பும் அதிகரிக்கும்.

711
சுக்ரன் (Venus)
Image Credit : instagram

சுக்ரன் (Venus)

அழகு, காதல், செல்வம் ஆகியவற்றின் அடையாளமாக விளங்கும் சுக்ரனுக்கு வெள்ளை, பிங்க் மற்றும் மென்மையான பாஸ்டல் நிறங்கள் மிகுந்த சாதகமானவை. இவை உறவுகளில் அன்பையும், கவர்ச்சியையும் அதிகரிக்கும். கலை, இசை, ஃபேஷன் துறையினர் சுக்ரனின் நிறங்களைப் பயன்படுத்தினால் சிறப்பு வெற்றி பெறுவர்.

811
சனி (Saturn)
Image Credit : Asianet News

சனி (Saturn)

ஒழுக்கம், பொறுமை, நிதானம் ஆகியவற்றின் கிரகமான சனிக்கு கருப்பு, டார்க் ப்ளூ, கருஞ்சாம்பல் நிறங்கள் பொருந்தும். இவை மன உறுதியையும் தடைகளை சமாளிக்கும் சக்தியையும் தரும். வாழ்க்கையில் சிரமங்களை எதிர்கொள்வோர் சனியின் நிறங்களைப் பயன்படுத்தினால் நிலைத்தன்மை அதிகரிக்கும்.

911
ராகு (Rahu)
Image Credit : Freepik

ராகு (Rahu)

புதிரும் சவாலும் நிறைந்த ராகுவிற்கு புகைமிகு சாம்பல் மற்றும் மண் நிறங்கள் பொருத்தமானவை. இந்த நிறங்கள் சமநிலையை பேணவும், எதிர்பாராத சவால்களை கையாளவும் உதவும்.

1011
கேது (Ketu)
Image Credit : NOIRLab/NSF/AURA/R. Proctor

கேது (Ketu)

ஆன்மீகம், தனிமை, தியானம் ஆகியவற்றை குறிக்கும் கேதுவுக்கு பழுப்பு மற்றும் கலவை நிறங்கள் ஏற்றவை. இந்த நிறங்கள் உள் அமைதியையும், ஆன்மீக முன்னேற்றத்தையும் அதிகரிக்கும்.

1111
அதிர்ஷ்டத்தையும் அமைதியையும் அதிகரிக்கும்.!
Image Credit : Asianet News

அதிர்ஷ்டத்தையும் அமைதியையும் அதிகரிக்கும்.!

நிறங்கள் வெறும் கண்ணுக்கினியவை அல்ல; அவை நம் வாழ்க்கையில் அதிர்ஷ்டத்தையும் அமைதியையும் அதிகரிக்கும் சக்தி கொண்டவை. ஜோதிடக் கோட்பாட்டின்படி ஒவ்வொரு கிரகத்திற்கும் சேர்ந்த நிறங்களை வாழ்க்கையில் பயன்படுத்தினால், வாழ்க்கை நன்மை நோக்கி நகரும். தினசரி உடைகள், வீட்டின் அலங்காரம், தனிப்பட்ட பொருட்களில் இந்நிறங்களைச் சேர்த்து பாருங்கள் – உங்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் நிகழும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஆன்மீகம்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Shani Nakshatra Gochar: அடுத்த 100 நாள்ல இந்த 5 ராசிக்காரங்க தலைவிதி மாறப்போகுது!
Recommended image2
Rahu Ketu Transit : சர்ப்பக் கிரக பெயர்ச்சி..ராகு-கேது மாற்றத்தால் வாழ்க்கையில் திடீர் திருப்பம் காணப்போகும் 12 ராசிகள்!
Recommended image3
Guru Chandal Yoga : குரு – கேது சேர்க்கையால் உருவாகும் குரு சண்டாள யோகம்... 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் அதிரடி பலன்கள்!
Related Stories
Recommended image1
குரு பார்வையால் அடிக்கும் அதிர்ஷ்டம்.! அடுத்த 3 மாதங்களுக்கு இந்த ராசிகாரர்களுக்கு பணப்பிரச்சினையே வராதாம்.! ரிசர்வ் வங்கியே கடன் கேட்குமாம்.!
Recommended image2
Spiritual: செல்வத்தை அள்ளித்தரும் சீக்ரெட் மந்திரம்.! தினமும் ஜெபித்தால் வீட்டில் செல்வ வளம் கொழிக்கும்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved