MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • இந்த தேதியில் பிறந்தவர்கள் நிச்சயம் பிரபலமாவார்கள்!.. உங்கள் பிறந்த தேதி இருக்கா?

இந்த தேதியில் பிறந்தவர்கள் நிச்சயம் பிரபலமாவார்கள்!.. உங்கள் பிறந்த தேதி இருக்கா?

எண் கணிதம் பார்வையில் பார்க்கும்போது, ​​சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே புகழ் பெறும் சக்தி அதிகம் இருப்பதாக நம்பப்படுகிறது. அந்த பட்டியலில் உங்கள் பிறந்த தேதி இருக்கிறதா? என்பதை சரிபாருங்கள்.

1 Min read
Author : Raghupati R
Published : Feb 20 2026, 11:59 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
புகழ் தரும் பிறந்த தேதிகள்
Image Credit : Asianet News

புகழ் தரும் பிறந்த தேதிகள்

புகழ் பெற வேண்டும் என்ற ஆசை இன்றைய தலைமுறையில் அதிகரித்து வருகிறது. சமூக வலைதளங்களின் வளர்ச்சி காரணமாக, திறமை இருந்தால் உலகம் முழுவதும் அறியப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் எண் கணிதம் பார்வையில் பார்க்கும்போது, ​​சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்களுக்கு இயற்கையாகவே புகழ் பெறும் சக்தி அதிகம் இருப்பதாக நம்பப்படுகிறது. திறமை, உழைப்பு, அதிர்ஷ்டம் ஆகிய மூன்றும் இணைந்தால்தான் ஒருவர் உயர முடியும் என்பதே இந்தக் கோட்பாட்டின் அடிப்படை ஆகும்.

25
எண் 1 பலன்
Image Credit : stockPhoto

எண் 1 பலன்

எண் 1 : 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை சூரியனின் ஆற்றல் இந்த எண்ணை வழிநடத்துகிறது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள், கவர்ச்சியான குணம் கொண்டவர்கள். அவர்கள் எங்கு சென்றாலும் தனித்துவமாகத் திகழ்வார்கள். மக்கள் மனதை எளிதில் கவரும் திறன் இவர்களிடம் இருப்பதால் சமூகத்தில் விரைவாக பிரபலமடைவார்கள்.

Related Articles

Related image1
Numerology: இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் எளிதில் யாரையும் நம்பிவிடுவார்கள்.. உங்க தேதி இருக்கா?
Related image2
இந்த ராசிகள் மறந்தும் கூட வெள்ளி நகை அணியக்கூடாது.! இவ்வளவு ஆபத்துக்கள் இருக்கா? முழு விவரம் இதோ.!
35
எண் 3 குணங்கள்
Image Credit : stockPhoto

எண் 3 குணங்கள்

எண் 3 : 3, 12, 21 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் குருவின் ஆதிக்கத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இவர்கள் அறிவு, வளர்ச்சி, துணிச்சல் ஆகியவற்றில் சிறந்து விளங்குவார்கள். புதிய அனுபவங்களை விரும்பும் இயல்பு, சாகச மனப்பான்மை மற்றும் பலருடன் விரைவில் பழகும் திறன் இவர்களை நினைவில் நிற்கும் நபர்களாக மாற்றும்.

45
எண் 4 சிறப்புகள்
Image Credit : Getty

எண் 4 சிறப்புகள்

எண் 4 : 4, 13, 22 தேதிகளில் பிறந்தவர்கள் புதுமை சிந்தனையாளர்கள் என பார்க்கப்படுகின்றனர். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் எண்ணங்கள் இவர்களிடம் அதிகம் இருக்கும். தனித்துவமான பார்வை மற்றும் படைப்பாற்றல் இவர்களின் புகழுக்கான காரணமாக அமையும்.

55
எண் 6 பலன்
Image Credit : stockPhoto

எண் 6 பலன்

எண் 6 : 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆற்றலை உடையவர்கள் என நம்பப்படுகிறது. அழகு, சமநிலை, மென்மை ஆகிய குணங்களால் பிறரை ஈர்க்கும் தன்மை இவர்களுக்கு உண்டு. நட்பு மனப்பான்மை மற்றும் அன்பான அணுகுமுறை இவர்களை அனைவராலும் விரும்பப்படும் நபர்களாக மாற்றும். இத்தகவல்கள் எண் கணித நம்பிக்கைகளை கொண்டவை ஆகும்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ராசி பலன்
ஜோதிடம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
18 வருடங்களுக்குப் பிறகு சூரியன் கேதுவால் உருவாகும் அரிய யோகம்.! 3 ராசிகளுக்கு ஜொலிக்கப்போகும் அதிர்ஷ்டம்.!
Recommended image2
Feb 20 Kanni Rasi Palan: கன்னி ராசி நேயர்களே, இன்று எதிரிகள் விலகுவார்கள்.! பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைவார்கள்.!
Recommended image3
Feb 20 Simma Rasi Palan: சிம்ம ராசி நேயர்களே, இன்று எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.! அதிகாரமிக்க பதவிகள் தேடி வரும்.!
Related Stories
Recommended image1
Numerology: இந்த தேதிகளில் பிறந்த பெண்கள் எளிதில் யாரையும் நம்பிவிடுவார்கள்.. உங்க தேதி இருக்கா?
Recommended image2
இந்த ராசிகள் மறந்தும் கூட வெள்ளி நகை அணியக்கூடாது.! இவ்வளவு ஆபத்துக்கள் இருக்கா? முழு விவரம் இதோ.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved