MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • இந்த ராசிகள் மறந்தும் கூட வெள்ளி நகை அணியக்கூடாது.! இவ்வளவு ஆபத்துக்கள் இருக்கா? முழு விவரம் இதோ.!

இந்த ராசிகள் மறந்தும் கூட வெள்ளி நகை அணியக்கூடாது.! இவ்வளவு ஆபத்துக்கள் இருக்கா? முழு விவரம் இதோ.!

எல்லா ராசிக்காரர்களுக்கும் வெள்ளி அதிர்ஷ்டம் தராது. ஜோதிடப்படி குறிப்பிட்ட ராசிக்காரர்கள் வெள்ளி மோதிரம் அல்லது நகைகளை அணிவது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தலாம். அதற்கான காரணங்கள் குறித்து இங்கு காணலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Feb 05 2026, 01:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
வெள்ளி அணியக்கூடாத ராசிகள்
Image Credit : AI

வெள்ளி அணியக்கூடாத ராசிகள்

Who should not wear silver: ஜோதிடத்தின் படி சில ராசியில் பிறந்தவர்கள் வெள்ளி நகைகளை அணியக்கூடாது என்று ஜோதிடர்கள் அறிவுறுத்துகின்றனர். அதற்கான காரணங்களும், அந்த ராசிகள் யார் என்பது குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.

வெள்ளியின் விலை நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. இருந்தபோதிலும் சமீபகாலமாக வெள்ளி மோதிரங்கள், பிரேஸ்லெட்டுகள் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிலர் வெள்ளி பாத்திரங்கள், வெள்ளி பொருட்களை வாங்குகின்றனர். 

தங்கத்திற்கு மாற்றாக வெள்ளியில் முதலீடு செய்யலாம் என்றும் சிலர் யோசித்து வருகின்றனர். ஆனால், சில ராசிக்காரர்களுக்கு வெள்ளி அணிவது நல்லதல்ல என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர். அந்த ராசிகள் எவை என்று பார்ப்போம்.

27
வெள்ளி சந்திரனுடன் தொடர்புடையது
Image Credit : AI

வெள்ளி சந்திரனுடன் தொடர்புடையது

ஜோதிடத்தின்படி, ஒவ்வோரு உலோகங்களுக்கும் சிறப்பு சக்தி உண்டு. ஒவ்வொரு உலோகமும் ஒரு கிரகத்துடன் தொடர்புடையது. வெள்ளி சந்திரனுடன் தொடர்புடைய உலோகம் என்பதால், மன அமைதியை விரும்புபவர்கள் இதை அதிகம் பயன்படுத்துகின்றனர். 

வெள்ளி சந்திரனின் தாக்கத்தை வலுப்படுத்தும். சந்திரன் மனம், உணர்ச்சிகளுடன் தொடர்புடையது. வெள்ளி நகைகள், மோதிரம், செயின், பிரேஸ்லெட் அணிந்தால் கவலை குறைந்து, மன அமைதி, உணர்ச்சி சமநிலை மேம்படும் என நம்பப்படுகிறது.

Related Articles

Related image1
மிருகசீரிட நட்சத்திரத்தில் சுக்கிர பகவான் சஞ்சாரம்.! வறுமை நீங்கி பணக்காரராக மாறப்போகும் 4 ராசிகள்.!
Related image2
மகா சிவராத்திரியில் 3 சக்தி வாய்ந்த ராஜயோகங்கள்.! 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கப்போகுது.!
37
வெள்ளி நகைகள் யார் அணியக்கூடாது?
Image Credit : Asianet News

வெள்ளி நகைகள் யார் அணியக்கூடாது?

கடகம், விருச்சிகம், மீனம் ராசிக்காரர்களுக்கு வெள்ளி உகந்தது. இவை நீர் ராசிகள் என்பதால், வெள்ளி பிரேஸ்லெட் அணிவது இவர்களுக்கு மன உறுதி மற்றும் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். மேஷம், சிம்மம், தனுசு ராசிக்காரர்களுக்கு வெள்ளி அவ்வளவாகப் பொருந்தாது என ஜோதிடர்கள் எச்சரிக்கின்றனர். இவை நெருப்பு ராசிகள். வெள்ளி அணிவதால் மன உறுதியின்மை, நிதி சிக்கல்கள், உடல் சோர்வு ஏற்படலாம்.

47
மேஷம்
Image Credit : AI Generated

மேஷம்

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். செவ்வாய் நெருப்பு தத்துவத்தை கொண்டது. சந்திர பகவான் குளிர்ச்சி தத்துவத்தை கொண்டவர். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று பகை இல்லை என்றாலும் மேஷ ராசிக்காரர்கள் அதிகப்படியான வெள்ளி நகைகளை அணியும் பொழுது அது தன்னம்பிக்கையை குறைக்கலாம் அல்லது தேவையற்ற மன குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

57
சிம்மம்
Image Credit : AI Generated

சிம்மம்

சிம்ம ராசியின் அதிபதி சூரிய பகவான் ஆவார். சூரியனும், சந்திரனும் நட்பு கிரகங்கள் என்றாலும் சூரியன் ஆளுமை மற்றும் உஷ்ணத்தைப் பிரதிபலிப்பவர். சிம்ம ராசிக்காரர்கள் வெள்ளி அணியும் பொழுது அது அவர்களின் ஆளுமைத்திறனை மழுங்கடிக்கச் செய்யலாம் மற்றும் தேவையற்ற சோம்பலை உருவாக்கலாம் என்று நம்பப்படுகிறது.

67
தனுசு
Image Credit : AI Generated

தனுசு

தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான் ஆவார். கு ருபகவான் பொன்னிறமானவர். தனுசு ராசிக்காரர்கள் வெள்ளி மோதிரம் அல்லது செயின் அணியும் பொழுது அது அவர்களின் ஜாதகத்தில் உள்ள சுபயோகங்களை குறைக்க வாய்ப்பு உள்ளது. நிதி நெருக்கடிகள் அல்லது முடிவுகளில் தடுமாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் தனுசு ராசிக்காரர்கள் வெள்ளி அணிவதை தவிர்க்க வேண்டும்

77
கவனிக்க வேண்டியவை
Image Credit : Getty

கவனிக்க வேண்டியவை

வெள்ளி அணிய திங்கள், வெள்ளி உகந்த நாட்கள். ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் அணிவது நல்லது. ஒவ்வொருவரின் ஜாதகமும் வேறுபடும் என்பதால் வெள்ளி அணிவதற்கு முன்பு ஜோதிட நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். 

மேஷம் சிம்மம் தனுசு ராசிக்காரர்களுக்கு தங்கம் அதிக அதிர்ஷ்டத்தை தரும் நீங்கள் வெள்ளை அணிய விரும்பினால் உங்கள் ஜாதகத்தில் சந்திரனின் நிலையை ஜோதிடரிடம் சரிபார்த்துக் கொள்வது நல்லது. 

பெண்கள் பொதுவாக காலில் வெள்ளி கொலுசு அணிவது வழக்கம். இது பொதுவான கலாச்சாரம் என்பதால் இதற்கு விதிவிலக்குகள் கிடையாது. ஆனால் கையில் மோதிரமாக அணியும் பொழுது மட்டும் கவனம் தேவை.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மகா சிவராத்திரியில் 3 சக்தி வாய்ந்த ராஜயோகங்கள்.! 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கப்போகுது.!
Recommended image2
மிருகசீரிட நட்சத்திரத்தில் சுக்கிர பகவான் சஞ்சாரம்.! வறுமை நீங்கி பணக்காரராக மாறப்போகும் 4 ராசிகள்.!
Recommended image3
12 மாதங்களுக்கு பிறகு உருவாகும் சுக்ராதித்ய மற்றும் விபரீத ராஜயோகம்: துள்ளி குதித்த ஆட்டம் போடும் டாப் 3 ராசிகள்!
Related Stories
Recommended image1
மிருகசீரிட நட்சத்திரத்தில் சுக்கிர பகவான் சஞ்சாரம்.! வறுமை நீங்கி பணக்காரராக மாறப்போகும் 4 ராசிகள்.!
Recommended image2
மகா சிவராத்திரியில் 3 சக்தி வாய்ந்த ராஜயோகங்கள்.! 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட கதவுகள் திறக்கப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved