- Home
- Astrology
- Angalakshana Shastra: உச்சம் தொட வைக்கும் மஞ்சங்கள்.! உங்களுக்கு எந்த இடத்தில் மச்சம் இருக்கு?!
Angalakshana Shastra: உச்சம் தொட வைக்கும் மஞ்சங்கள்.! உங்களுக்கு எந்த இடத்தில் மச்சம் இருக்கு?!
அங்கலட்சண சாஸ்திரத்தின்படி, உடலில் தோன்றும் மச்சங்கள் ஒருவரின் குணநலன்கள் மற்றும் அதிர்ஷ்டத்தைக் குறிக்கின்றன. நெற்றி, காது, மூக்கு, கைகள் என ஒவ்வொரு இடத்திலும் உள்ள மச்சத்திற்கு தனித்தனி பலன்கள் உண்டு, அவை வாழ்வின் சின்னமாகவும் கருதப்படுகின்றன.

மச்சங்கள் சொல்லும் மறைபொருள்
மனித உடலில் தோன்றும் மச்சங்கள், வெறும் அழகுக்குறி மட்டுமல்ல; அங்கலட்சண சாஸ்திரம் படி, அவை ஒருவரின் குணநலன்கள், வாழ்வியல் நடை, அதிர்ஷ்டம் போன்றவற்றைக் குறிக்கும் சின்னங்களாகக் கருதப்படுகின்றன. மச்சம் இருக்கும் இடத்தைப் பொறுத்து தனித்தனி பலன்கள் அமையும் என்பது தொன்ம நம்பிக்கையாக உள்ளது.
நெற்றி மீது மச்சம்
நெற்றி மீது மச்சம் இருப்பவர்கள் பொதுவாக மனதார அடுத்தவர்களுக்கு கேட்டதையெல்லாம் கொடுப்பவர்கள். இவர்களின் வாழ்க்கை அவர்கள் விரும்பும் திசையிலே நகரும். குடும்ப அன்பும், துணைவரின் ஆதரவும்கூட இவர்களுக்கு இயல்பாக கிடைக்கும். நினைத்தது நடக்கும். சமூகத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
செவியில் மச்சம்
செவியில் மச்சம் இருந்தால், ஆயுள் முழுவதும் நல்ல அனுபவங்களும், முயற்சியால் கிடைக்கும் வெற்றிகளும் சேர்ந்து வரும். வலது செவியில் உள்ள மச்சம் கல்வி, கலைகள், தொழில் ஆகியவற்றில் முன்னேற்றம் குறிக்கிறது. இடது செவியில் மச்சம் உள்ளவர்களுக்கு வாழ்க்கையின் பிற்பகுதி சிறப்பாக அமையும்.
மூக்குப் பகுதியில் மச்சம்
மூக்குப் பகுதியில் மச்சம் உள்ளவர்கள் விரைவாக செயல்படுபவர்கள். ஆண்களுக்கு சீறிமுரடும் தன்மை இருந்தாலும், பெண்களுக்கு சேவை மனப்பான்மை தலைசிறந்ததாக இருக்கும்.
உதடு மற்றும் நாக்கில் உள்ள மச்சங்கள்
உதடு மற்றும் நாக்கில் உள்ள மச்சங்கள் பெரும்பாலும் பேச்சுத்திறன், அறிவு, கலைநயம், பண வரவு ஆகியவற்றை சுட்டிக் காட்டுகின்றன. ஓவியம், எழுத்து, ஆராய்ச்சி போன்ற துறைகளில் சாதனை படைப்பவர்கள் இத்தகைய மச்சம் உடையவர்களாகவே சொல்லப்படுவர்.
கழுத்து, மார்பு, முதுகு போன்ற இடங்களில் தோன்றும் மச்சங்கள்
கழுத்து, மார்பு, முதுகு போன்ற இடங்களில் தோன்றும் மச்சங்கள் திடமான மனநிலையும், கடின உழைப்பாலும் முன்னேறுவதை குறிக்கும். இவர்கள் கஷ்டங்களை நிதானமாகச் சமாளிப்பவர்கள். முயற்சியில் தொடர்ந்து இருப்பவர்கள்.
கைகள் மற்றும் உள்ளங்கையில் உதயமாகும் மச்சங்கள்
கைகள் மற்றும் உள்ளங்கையில் உதயமாகும் மச்சங்கள் மிக முக்கியமானவை. இது சாஸ்திர அறிவு, கணிப்பு திறன், பொருளாதார முன்னேற்றம் போன்றவற்றை நம்பிக்கையாகக் கூறுகின்றது. சிறுகச் சிறுக உயர்ந்து, வாழ்வில் உன்னத நிலையை அடைவார்கள். மச்சங்கள் ஒரு மனிதனின் தனிப்பட்ட அடையாளமும், வாழ்வின் சின்னவுமாகக் கருதப்பட்டு, ஒவ்வொரு இடத்திலும் தனித்தனி பலன்களைத் தாங்கிச் செல்கின்றன.

