வீடு துடைக்குறப்ப 'இந்த' தப்ப பண்றீங்களா? அப்ப வீட்டுக்கு துரதிஷ்டம் தான் வரும்!
Mopping Vastu Tips : நீங்கள் வீடு துடைக்கும் போது செய்யும் சில தவறுகள் பணம் மற்றும் அதிர்ஷ்டத்தை இலக்க நேரிடும் என்று வாசு சாஸ்திரம் சொல்லுகின்றது.

வீடு துடைக்குறப்ப 'இந்த' தப்ப பண்றீங்களா? அப்ப வீட்டுக்கு துரதிஷ்டம் தான் வரும்!
பொதுவாக நாம் அனைவரும் தினமும் வீட்டை சுத்தம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளோம் இது நம் அன்றாட வழக்கத்தின் ஒரு முக்கிய பகுதியாகும். வீட்டை சுத்தம் செய்வதன் மூலம் வீட்டிலிருந்து அழுக்குகள் அகற்றப்படுகிறது மற்றும் நோய்கள் தாங்காது. ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் படி, வீடு லட்சுமிதேவி தங்கும் இடம் என்பதால் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டும். இப்போதுதான் லட்சுமி தேவியின் ஆசிகள் அந்த வீட்டில் உள்ளவர்கள் மீது பொழியப்படும். இத்தகைய சூழ்நிலைகள், வீட்டை சுத்தம் செய்யும் போது செய்யப்படும் சில தவறுகள் உடல் நலத்தை மட்டுமல்ல, பணத்தையும் இழக்க நேரிடும் மற்றும் துரதிஷ்டம் பெருகும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. எனவே வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டை சுத்தம் செய்யும்போது என்னென்ன தவறுகளை செய்யக் கூடாது என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
இந்த நேரத்தில் துடைக்காதே!
வாஸ்து சாஸ்திரத்தின் படி, உங்கள் வீட்டில் உள்ளவர்கள் யாராவது வீட்டை விட்டு வெளியே சென்றிருக்கும்போது நீங்கள் தரையை துடைக்க வேண்டாம். அந்த நபர் போன பிறகு சிறிது நேரம் கழித்து வீட்டை துடைக்கலாம். இல்லையெனில், அந்த நபர் உடல் நலத் தொடர்பான பிரச்சனைகளை எதிர்கொள்வார். அது மட்டுமில்லாமல், வேலை மற்றும் தொழில் விழும் இழப்பு சந்திக்க நேரிடும்.
சுத்தம் செய்த தண்ணீரை இங்கே ஊற்றாதே!
வீட்டை சுத்தம் செய்த பிறகு அந்த தண்ணீரை வீட்டின் வாசலில் ஒருபோதும் ஊற்ற வேண்டாம் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகிறது. ஏனெனில் வீட்டின் வாசல் லட்சுமி தேவியின் மூல வாயிலாக கருதப்படுவதால், இப்படி நீங்கள் செய்தால் அது அசுபமாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் வீட்டை துடைக்க பயன்படுத்திய தண்ணீரை வாசலில் ஊற்றும் போது, அதனால் லட்சுமி தேவி உங்கள் மீது கோபப்படுவாள் என்றும் வாஸ்து சொல்லுகின்றது.
உடைந்த வாளியை பயன்படுத்தாதே!
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டை துடைக்க உடைந்த வாளியை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். அதுபோல வாளி சிவப்பு நிறத்தில் இருக்கவே கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த கிழமையில் துடைக்காதே!
வாஸ்து சாஸ்திரத்தின் படி வியாழன் கிழமைகளில் வீட்டின் தரையை துடைக்க வேண்டாம். இந்நாளில் தரையை துடைத்தால் வியாழன் கிரகத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். மேலும் வீட்டில் வறுமை பெருகும்.
இதையும் படிங்க: வாஸ்து: கிச்சனில் இந்த '4' பொருட்களை காலியாக வைக்காதீங்க; செல்வம் தாங்காது!
கல் உப்பு:
வீட்டின் தரையை துடைக்கும் தண்ணீரில் சிறிதளவு கல் உப்பை சேர்க்க வேண்டும் என்று வாஸ்து சாஸ்திரம் சொல்லுகின்றது. ஏனெனில் இது வீட்டில் எதிர்மறை சக்தியை நீக்குவதோடு மட்டுமல்லாமல், வீட்டின் தரையை பளபளப்பாக மாற்றும். ஆனால் வியாழன், செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தண்ணீரில் கல் உப்பு சேர்க்க வேண்டாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில், வீட்டில் எதிர்மறை விளைவுகள் ஏற்படும்.
இதையும் படிங்க: அள்ள அள்ள பணம் கொட்ட; இந்த '1' பொருளை வீட்டில் வாங்கி வைங்க!
திசை:
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டை துடைக்கும் போது திசையை மனதில் வைத்துக் கொள்வது ரொம்பவே முக்கியம். அதாவது, வடக்கு திசையில் இருந்து தான் துடைக்க ஆரம்பித்து பிறகு முழு வீட்டையும் துடைக்க வேண்டும் என்று வாஸ்து கூறுகிறது.
இந்த நேரத்தில் துடைக்காதே!
வாஸ்து சாஸ்திரத்தின் படி, தவறுதலாக கூட மதிய வேளையில் தரையை துடைக்க வேண்டாம். தரையை துடைப்பதற்கு காலை நேரம் தான் சிறந்தது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.