MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Aani Amavasai 2026: இன்று ஆனி அமாவாசை பலன்கள்.. இந்த 4 ராசிகளுக்கும் ஆபத்து.. பண நஷ்டம் முதல் குடும்ப பிரச்னை வரை.. தப்பிப்பது எப்படி?

Aani Amavasai 2026: இன்று ஆனி அமாவாசை பலன்கள்.. இந்த 4 ராசிகளுக்கும் ஆபத்து.. பண நஷ்டம் முதல் குடும்ப பிரச்னை வரை.. தப்பிப்பது எப்படி?

Unlucky Zodiac Signs: ஆனி அமாவாசை திதியானது ஜூலை 13ம் தேதி மாலை தொடங்கி, ஜூலை 14ம் தேதி செவ்வாய்க்கிழமை அதாவது இன்று பிற்பகல் நிறைவடைகிறது. சூரிய உதயத்தின் அடிப்படையில், ஆனி அமாவாசை வழிபாடுகள் இன்று அனுசரிக்கப்படுகின்றன.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 14 2026, 11:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
அமாவாசை
Image Credit : Asianet News

அமாவாசை

ஆனி அமாவாசை என்பது தமிழ் மாதங்களில் மூன்றாவதாக வரும் ஆனி மாதத்தில் நிகழும் அமாவாசை திதியாகும். இந்து சமய வழிபாட்டிலும், தமிழ் கலாச்சாரத்திலும் அமாவாசை தினங்கள் அனைத்தும் முன்னோர்களை (பித்ருக்களை) வழிபடுவதற்கு உகந்த நாட்களாகக் கருதப்பட்டாலும், ஆனி அமாவாசை சில தனித்துவமான சிறப்புகளைக் கொண்டுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
ஆனி அமாவாசை
Image Credit : Asianet News

ஆனி அமாவாசை

இந்நிலையில் இந்த ஆண்டின் ஆனி அமாவாசை திதியானது ஜூலை 13ம் தேதி மாலை தொடங்கி, ஜூலை 14ம் தேதி செவ்வாய்க்கிழமை அதாவது இன்று பிற்பகல் நிறைவடைகிறது. சூரிய உதயத்தின் அடிப்படையில், ஆனி அமாவாசை வழிபாடுகள் இன்று அனுசரிக்கப்படுகின்றன. எனவே, இந்நாளில் அனைவரும் சற்று நிதானத்துடனும் விழிப்புணர்வுடனும் செயல்படுவது அவசியம். மேலும், தற்போதைய கிரக நிலைகளின்படி இந்த ஆனி அமாவாசை நாளில் 12 ராசிகளிலுமே அதன் தாக்கம் தெரியும் என்றாலும், பின்வரும் 4 ராசிக்காரர்கள் மட்டும் இன்று மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஜோதிட சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.

Jupiter Sun conjunction 2026: ஜூலை 16 முதல் குரு ஆதித்ய ராஜயோகம்! ஆகஸ்ட் 17 வரை இந்த 6 ராசிகளுக்கு அசுர வளர்ச்சியும், கோடீஸ்வர யோகமும் கன்பார்ம்!

36
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

ரிஷப ராசியினர் ஆனி அமாவாசை நாளான இன்று நிதி சார்ந்த விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு அவசரப்பட்டு முதலீடுகள் செய்வதை தவிர்க்க வேண்டும்; இல்லையெனில் நஷ்டத்தைச் சந்திக்க நேரிடும். புதிய சொத்துக்கள் வாங்குவதாகவோ அல்லது எந்தவொரு முதலீடு செய்வதாகவோ இருந்தாலும், அதற்குரிய ஆவணங்களை ஒருமுறைக்கு இருமுறை நன்கு சரிபார்ப்பது நல்லது. இன்று உங்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

46
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த அமாவாசை தினத்தில் குடும்பத்திற்குள் சில சங்கடங்கள் வர வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களுடன் தேவையற்ற சிறிய விஷயங்களுக்காகக் கருத்து வேறுபாடுகளோ அல்லது தவறான புரிதல்களோ ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இன்று கடுமையான சோர்வைச் சந்திக்க நேரிடும். எனவே, உடலுக்குப் போதுமான ஓய்வு கொடுங்கள். இப்படியான சூழ்நிலைகளில் கோபப்படாமல் பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடிக்க வேண்டும்.

56
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சிம்ம ராசியினர் இன்று தங்களின் பாக்கெட்டைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். இன்று உங்களது தேவையற்ற செலவுகளால் பணப் பிரச்சினைகள் அதிகரிக்கக் கூடும். சில சமயங்களில் செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்க வேண்டிய சூழலும் ஏற்படலாம். அலுவலகத்தில் பணிச்சுமை மற்றும் புதிய பொறுப்புகள் அதிகரிப்பதால் மன அழுத்தம் உண்டாகலாம். எந்தவொரு முக்கிய வேலையையும் அவசர அவசரமாகச் செய்யாமல், நிதானமாகக் கையாள்வது நல்லது.

66
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

கன்னி ராசியினர் இன்றைய நாளில் தங்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது மிகவும் அவசியமாகும். சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட கோபப்படுவதையோ அல்லது தேவையின்றி கவலைப்படுவதையோ முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். இந்த மன அழுத்தம் உங்களது உடல் நலத்தைப் பாதிக்கலாம் என்பதால் மன அமைதியை பேண முற்படுங்கள். எந்தவொரு பண மோசடியிலும் சிக்காமல் இருக்க, இன்று விழிப்புடன் இருப்பது அவசியம். இன்று புதிய முதலீட்டு வாய்ப்புகள் ஏதேனும் கிடைத்தால், லாப ஆசைக்கு மயங்காமல் நன்கு விசாரித்த பிறகே இறுதி முடிவு எடுக்க வேண்டும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ராசி பலன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: தீபாவளிக்கு முன்பே போனஸ்! இரட்டை நீசபங்க ராஜயோகம் – யாருக்கு ஜாக்பாட்?
Recommended image2
Venus Retrograde: சுக்கிரன் வக்ரம்..12 ராசிகளுக்கும் என்ன நடக்கும்? காதல், திருமணம், பணம், தொழிலில் என்ன மாற்றம்?
Recommended image3
Navratri Horoscope: நவராத்திரி தரும் நிதி யோகம்.. அக்டோபரில் பணமழையில் நனையப்போகும் அதிர்ஷ்ட ராசிகள்
Related Stories
Recommended image1
Astrology : குரு பகவான் கொடுக்கும் ஸ்பெஷல் கிஃப்ட்... இனி இந்த 5 ராசிகளுக்கு பணக்கஷ்டமே இருக்காதாம்..!
Recommended image2
Astrology Predictions: எமன் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளின் தலைவிதியே மாறும்.! பணம் மூட்டை மூட்டையாய் சேரப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved