- Home
- Astrology
- Astrology: அதிக சோம்பேறித்தனம் கொண்ட 4 ராசிக்காரர்கள்.! இவங்களுக்கு வேலை செய்வதே சுத்தமா பிடிக்காதாம்.!
Astrology: அதிக சோம்பேறித்தனம் கொண்ட 4 ராசிக்காரர்கள்.! இவங்களுக்கு வேலை செய்வதே சுத்தமா பிடிக்காதாம்.!
4 zodiac signs are the laziest: ஜோதிடத்தின் படி சில ராசிக்காரர்கள் அதிக சோம்பேறித்தனத்துடன் இருப்பார்களாம். இவர்களுக்கு வேலை செய்வது என்பது கசப்பானதாக இருக்கும். அந்த ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சோம்பேறித்தனமான 4 ராசிகள்
ஜோதிட சாஸ்திரங்களின்படி ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான குணங்கள், ஆளுமைத் திறன் மற்றும் பண்புகள் உண்டு. சில ராசிக்காரர்கள் அதிக சுறுசுறுப்புடனும், வேகமாக இயங்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். அதே சமயம் சில ராசிக்காரர்கள் அதிக சோம்பேறித்தனத்துடன் விளங்குவார்கள். இவர்களுக்கு வேலை செய்வது என்பது சுத்தமாக பிடிக்காது. ஜோதிட கணிப்புகளின் அடிப்படையில் சோம்பேறித்தனத்துடன் தொடர்பு படுத்தப்படும் நான்கு ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் பெரும்பாலும் கற்பனை உலகிலும், கனவு உலகிலும் வாழ்பவர்கள். இவர்கள் மென்மையான மனம் படைத்தவர்கள். இவர்கள் கடினமான வேலை அல்லது பொறுப்புகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் பொழுது அதை தவிர்த்து விட்டு தங்களுக்கு பிடித்த செயல்பாடுகள், ஓய்வு அல்லது தூக்கத்தின் மூலம் தப்பித்து செல்வார்கள். உண்மையான உலகத்தின் சவால்கள் மற்றும் கடமைகளில் இருந்து விலகி தங்கள் மனதிற்குள் உள்ள அமைதியான உலகத்தில் மூழ்குவதையே இவர்கள் அதிகம் விரும்புகிறார்கள். இதனால் வேலைகளை தள்ளிப் போடும் பழக்கம் இவர்களிடம் அதிகமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஆடம்பரத்தின் காரகரான சுக்கிர பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் வசதியான மற்றும் ஆடம்பரமான வாழ்க்கையை விரும்புவார்கள். இவர்கள் தங்களுக்கு பிடித்தமான அல்லது வசதியான சூழ்நிலையை விட்டு வெளியேறவோ அல்லது தாங்கள் விரும்பாத வேலையை செய்யவோ விரும்புவதில்லை. இவர்களது பிடிவாத குணம் காரணமாக இவர்கள் விரும்பாத வேலையில் ஈடுபட வைக்க யாரும் இவர்களை கட்டாயப்படுத்த முடியாது. போதுமான வசதி மற்றும் பாதுகாப்பு இருந்தால் ஓய்வு எடுப்பதையும் சோம்பேறித்தனமாக நேரத்தை அனுபவிப்பதையும் முழு நேர வேலையாகவே கருதுவார்கள். படுக்கை, உணவு மற்றும் சொகுசான வாழ்க்கையை இவர்கள் அதிகம் நாடுவார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரமானவர்கள், பயணத்தை விரும்புபவர்கள், புதிய சாகசங்களை அனுபவிக்க ஆர்வம் கொண்டவர்கள். இவர்கள் தினசரி சலிப்பான அல்லது ஒரே மாதிரியான வேலைகளை செய்ய விரும்புவதில்லை. ஒரே இடத்தில் அமர்ந்து ஒரே வேலையை திரும்பத் திரும்பச் செய்வது இவர்களுக்கு அலுப்பை ஏற்படுத்தும். வழக்கமான அல்லது தினசரி கடமைகளை செய்வதை தவிர்த்து, சுதந்திரமாக செயல்பட விரும்புவதால் வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு இவர்கள் சோம்பேறிகள் போல தெரியலாம். பெரிய இலக்குகளில் கவனம் செலுத்தி சிறிய அன்றாட வேலைகளை தள்ளிப் போடுவது இவர்களின் இயல்பாக உள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் ஆழ்ந்த சிந்தனை கொண்டவர்களாக விளங்குகின்றனர். அவர்கள் ஒரு செயலில் முழு ஆர்வத்துடன் ஈடுபடும் பொழுது அதை தீவிரமாகவும் அர்ப்பணிப்புடன் செய்வார்கள். இதன் காரணமாக அனைத்து வேலைகளிலும் இவர்கள் ஈடுபாடு காட்டுவதில்லை. இவர்கள் செய்யும் வேலை இவர்களுக்கு முக்கியமானதாகவோ அல்லது ஆழமான அர்த்தம் கொண்டதாகவோ இல்லை என்றால் அதிலிருந்து விலகி விடுவார்கள். உண்மையில் இது சோம்பேறித்தனமாக தெரிந்தாலும் அவர்கள் தங்கள் ஆற்றலை வீணாக்காமல் முக்கியமான அல்லது சவாலான தருணங்களுக்காக சேமித்து வைக்கிறார்கள். வெளி உலக நடவடிக்கைகளில் ஈடுபடுவதை விட தனியாக இருந்து சிந்திப்பதற்கும். உலகை புரிந்து கொள்வதற்கும் அதிக நேரம் செலவிடுகிறார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)