- Home
- Astrology
- Astrology: கிரக தோஷத்தால் கணவரை மட்டும் கடுப்பேத்தும் 3 ராசியினர்.! பொது இடங்களில் மட்டும் பாசத்தை பொழிவாங்கலாம்.!
Astrology: கிரக தோஷத்தால் கணவரை மட்டும் கடுப்பேத்தும் 3 ராசியினர்.! பொது இடங்களில் மட்டும் பாசத்தை பொழிவாங்கலாம்.!
சில ராசிக்கார பெண்கள் வீட்டில் கணவரிடம் பொறுமையின்றி நடந்துகொண்டு, வெளியில் அதிக பாசம் காட்டுவது ஏன்? கிரக தோஷங்களே இதற்குக் காரணமா? மிதுனம், சிம்மம், விருச்சிக ராசிக்காரர்களின் இரட்டைத் தன்மை பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்.

இரட்டை வேடம்... காரணம்...
திருமண வாழ்க்கை எல்லோருக்கும் இனிமையாக இருக்க வேண்டும் என்றாலும், சில சமயங்களில் கிரக நிலையினால் உருவாகும் தோஷங்கள் அந்த உறவில் சின்ன சின்ன பிளவுகளையும், சண்டைகளையும் ஏற்படுத்தக்கூடும். குறிப்பாக சில ராசிக்காரர்கள், வீட்டு சூழலில் கணவரிடம் பொறுமையின்மையுடன் நடந்துகொள்வார்கள். ஆனால் அதே நேரத்தில், பொது இடங்களில் செல்லும் போது, அவர்களே கணவரை அதிகமாக நேசிப்பவர்களாகவும், பாசத்தைக் காட்டுபவர்களாகவும் மாறிவிடுவார்கள். இப்படி இரட்டை தன்மையுடன் செயல்பட வைக்கும் காரணம் கிரக தோஷங்களே.
மிதுன ராசி - கேள்வியின் நாயகியே
மிதுன ராசிக்காரர்கள் இயல்பாகவே இரண்டு மனதுடன் இருப்பவர்கள். புதன் கிரகத்தின் வலிமை காரணமாக, அவர்கள் பேசும் விதம் சில நேரங்களில் கடுமையாக மாறி விடும். வீட்டு சூழலில் கணவரிடம் தேவையற்ற கேள்விகள் கேட்பது, சிறிய விஷயத்தைக் கூட பெரிதாக்கிப் பேசுவது இவர்களுக்குச் சாதாரணம். கணவரின் பொறுமையை சோதிக்க வைக்கும் போக்கு இவர்களிடம் இருக்கும். ஆனால், வெளியில் மக்கள் சூழ்ந்த இடங்களில், இவர்களின் நடத்தை முற்றிலும் மாறி விடும். அப்போது கணவரை பாராட்டிப் பேசுவார்கள், அன்பு காட்டுவார்கள், ஒருவரும் இவர்களைப் பற்றி தவறாக நினைக்கக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துவார்கள்.
சிம்ம ராசி - வெளியில சாந்த சொரூபி, வீட்டுல பத்ர காளி
சிம்ம ராசிக்காரர்கள் சூரியனின் ஆதிக்கத்தில் இருப்பதால், தங்களது அதிகார உணர்வு மிகுந்தவர்கள். கணவருடன் பேசும் போது, “நான் சொல்வதே சரி” என்ற மனோபாவம் அதிகம் காணப்படும். அதனால், வீட்டுக்குள் அடிக்கடி சச்சரவுகள் ஏற்படும். சிறு விஷயத்திலும் கோபம் கொண்டு, கணவரை உள்மனதில் புண்படுத்துவார்கள். ஆனால், சமூக நிகழ்ச்சிகள், குடும்பச் சந்திப்புகள் போன்ற இடங்களில் இவர்களின் அணுகுமுறை வித்தியாசமாக மாறும். அங்கே கணவருடன் கைகோர்த்து நிற்பார்கள், பாசத்துடன் பேசுவார்கள், வெளியோருக்கு தங்கள் உறவு மிகுந்த அன்பும் புரிதலுமாக இருக்கிறது என்பதை நிரூபிக்க நினைப்பார்கள்.
விருச்சிக ராசி - இதெல்லாம் டூமச் தெரியுமா
விருச்சிக ராசிக்காரர்கள் செவ்வாய் மற்றும் கேது கிரகங்களின் தாக்கத்தால் சற்று சந்தேக மனப்பான்மையுடன் இருப்பவர்கள். வீட்டு சூழலில் கணவரிடம் நம்பிக்கை குறைந்து, அவர்களின் ஒவ்வொரு செயலும் கண்காணிப்பதுபோல நடந்துகொள்வார்கள். இதனால் தேவையற்ற வாக்குவாதங்கள் உருவாகும். கோபம் அதிகரிக்கும் போது, கடுமையான வார்த்தைகளால் கணவரை புண்படுத்துவார்கள். ஆனால், வெளியில் போகும் போது இவர்களே அதிக அன்பான மனைவியாக மாறுவார்கள். கணவரின் மேல் முழு நம்பிக்கை வைத்தவர்களாகவும், அன்பும் பாசமும் பொழிவவர்களாகவும் இருப்பார்கள். பிறர் பார்வையில் தாங்கள் சிறந்த தம்பதியினர் என மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணமே இவர்களை அப்படிச் செய்கிறதாம்.
பொறுமை, நிதானம் எல்லாவற்றையும் மாற்றும்
மிதுனம், சிம்மம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்களுக்கு கிரக தோஷம் காரணமாக, வீட்டுக்குள் கணவருடன் அடிக்கடி சண்டை, குற்றச்சாட்டு, கோபம் ஆகியவை இயல்பானதாக இருக்கும். ஆனால், வெளியில் செல்லும் போது, அதே கணவரைத் தான் மிகவும் நேசிக்கும் மனைவியாக மாறி விடுவார்கள். இது அவர்களின் உள்ளார்ந்த மனதோட்டத்தால் அல்ல, கிரக நிலையால் உண்டாகும் மன மாற்றங்களின் விளைவு. இந்த ராசிக்காரர்கள் சிறிது பொறுமையையும், நிதானத்தையும் கடைப்பிடித்தால், தங்கள் திருமண வாழ்க்கையை இன்னும் இனிமையாக்கிக் கொள்ள முடியும்.