MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: சூழ்ச்சிகளை தவிடு பொடியாக்கும் 3 ராசிகள்.! ஆயிரம் பேர் எதிர்த்து வந்தாலும் சினிமா ஹீரோக்கள் போல் தட்டி தூள் கிளப்புவார்களாம்.!

Astrology: சூழ்ச்சிகளை தவிடு பொடியாக்கும் 3 ராசிகள்.! ஆயிரம் பேர் எதிர்த்து வந்தாலும் சினிமா ஹீரோக்கள் போல் தட்டி தூள் கிளப்புவார்களாம்.!

ஜோதிட சாஸ்திரத்தின்படி, பிறர் செய்யும் சூழ்ச்சிகளை எளிதில் கண்டுபிடித்து வெற்றிப் பாதையில் முன்னேறும் திறன் கொண்ட 3 ராசிகள் உள்ளன.  அவர்கள் சவால்களை முறியடித்து எப்படி சாதனை படைக்கிறார்கள் என்பதை இந்த கட்டுரை விளக்குகிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Jun 27 2026, 09:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
உண்மையில் நீங்கதான் ஹீரோக்கள் தெரியுமா?
Image Credit : Asianet News

உண்மையில் நீங்கதான் ஹீரோக்கள் தெரியுமா?

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு ராசிக்கும் சிற்பான தனித்துவமான குணாதிசயங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. சில ராசிக்காரர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படுபவர்கள் என்றால், சிலர் எவ்வளவு பெரிய சவால்கள் வந்தாலும் புத்திசாலித்தனமாக சமாளிக்கும் ஆற்றல் கொண்டவர்கள் என கூறப்படுகிறது. குறிப்பாக, பிறர் செய்யும் சூழ்ச்சிகளை எளிதில் கண்டுபிடித்து  அதிலிருந்து தங்களை காப்பாற்றிக்கொண்டு வெற்றிப் பாதையில் முன்னேறும் திறன் கொண்டவர்கள் சிலர் எப்போதும் சாதனை பட்டியலில் இடம் பிடிக்கின்றனர். இவர்களை எதிர்த்து எத்தனை பேர் வந்தாலும், சினிமா கதாநாயகர்களை  போல துணிச்சலாகச் செயல்பட்டு வெற்றியைப் பெறுவார்கள் என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன. அப்படிப்பட்ட 3 ராசிகளைப் பற்றி விரிவாவும் விளக்கமாகவும் இப்போது பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
விருச்சிகம் - புத்திசாலிதனத்துடன் கூடிய கடின உழைப்பு
Image Credit : Google

விருச்சிகம் - புத்திசாலிதனத்துடன் கூடிய கடின உழைப்பு

விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் கூர்மையான கர்பூர புத்திகொண்டவர்கள் என்றால் அது மிகையல்ல. ஒருவரின் முகத்தைப் பார்த்தே அவர்களின் நோக்கத்தை ஓரளவு புரிந்துகொள்ளும் திறன் இவர்களிடம் இருப்பதாக ஜோதிட நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். யாராவது ஏமாற்ற முயற்சித்தால் அதை உடனே கண்டுபிடித்து, சரியான நேரத்தில் சரியான முடிவை எடுப்பார்களாம்.

எந்த மோசமான சவால்களும் இவர்களை பயமுறுத்தவே பயமுறுத்தாது. மாறாக  ஒவ்வொரு பிரச்சினையையும் தங்களின் திறமையை நிரூபிக்க கிடைத்த வாய்ப்பாகவே எடுத்துக்கொள்வார்கள் இவர்கள். அதனால் எதிரிகள் எவ்வளவு திட்டமிட்டாலும், இறுதியில் வெற்றி விருச்சிக ராசிக்காரர்களின் பக்கமே இருக்கும் என்று ஜோதிடத்தில் நம்பப்படுகிறது.

Related Articles

Related image1
Astrology: சூர்ய பார்வையால் கொட்டப்போகும் பணம்! 3 ராசிகளுக்கு நல்ல காலம் பொறக்குது!
Related image2
Astrology: சுக்கிர திசையை ஓரங்கட்டும் கேது பார்வை.! இனி பென்ஸ் கார்ல போகும் 3 ராசிகள்.!
35
மகரம் - அமைதியாய் இருந்து சாதிக்கும் ஜாம்பவான்கள்
Image Credit : Google

மகரம் - அமைதியாய் இருந்து சாதிக்கும் ஜாம்பவான்கள்

மகர ராசிக்காரர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், அவர்களின் அமைதியை பலவீனம் என்று யாரும் நினைக்கக் கூடாது. எந்த ஒரு முடிவையும் அவசரப்படாமல் ஆராய்ந்து செயல்படுவார்கள். ஒவ்வொரு செயலையும் நிதானமாக யோசித்து முடிவெடுப்பார்கள் என்பதால் இவர்களுக்கு தோல்வியே இருக்காது. தொடர்ந்து வெற்றி கிடைத்துக்கொண்டே இருக்கும்.

யாராவது இவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்தாலும், அதற்கு உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக பதிலடி கொடுப்பார்களாம் மகர ராசியினர். வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் முன்னேறுவார்கள். அதனால் பலரால் மதிக்கப்படும் தலைமைப் பண்பும் மகரராசியினரிடம் காணப்படும்.

45
சிம்மம் - எல்லோரையும் வழிநடத்தும் கம்பீரம்
Image Credit : Google

சிம்மம் - எல்லோரையும் வழிநடத்தும் கம்பீரம்

சிம்ம ராசிக்காரர்கள் பிறவியிலேயே தலைமைத்துவ குணம் கொண்டவர்கள் என்று ஜோதிடமும் ஜோதிட நூல்களும் கூறுகிறது. தைரியம், தன்னம்பிக்கை, கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சி இவர்களின் மிகப்பெரிய பலம் என்றால் அதுமிகையல்ல.

யாராவது இவர்களை குறைத்து மதிப்பிட முயன்றாலும், செயலால் பதில் சொல்வார்கள். பிரச்சினைகள் வந்தால் ஓடாமல் நேருக்கு நேர் சந்தித்து வெற்றி பெறும் மனப்பக்குவம் இவர்களுக்கு இருக்கும். அதனால் எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும், இறுதியில் தங்களின் இலக்கை அடைந்து அனைவரின் பாராட்டையும் பெறுவார்களாம்.

55
இனி இவர்கள் காட்டி மழைதான் போங்க.!
Image Credit : Asianet News

இனி இவர்கள் காட்டி மழைதான் போங்க.!

ஜோதிட நம்பிக்கைகளின்படி, விருச்சிகம், மகரம், சிம்மம் ஆகிய ராசிக்காரர்கள் புத்திசாலித்தனம், தன்னம்பிக்கை மற்றும் மன உறுதி ஆகியவற்றால் பிறர் செய்யும் சூழ்ச்சிகளை முறியடிக்கும் திறன் கொண்டவர்களாகக் கருதப்படுகின்றனர். இருப்பினும், ஒருவரின் வெற்றி அல்லது தோல்வியை ராசி மட்டுமே தீர்மானிக்காது. கடின உழைப்பு, சரியான முடிவுகள், அனுபவம் மற்றும் விடாமுயற்சி ஆகியவையே வாழ்க்கையில் உயர்வை உருவாக்கும் முக்கிய காரணிகள். ஜோதிடத்தை ஒரு நம்பிக்கையாகவும், ஊக்கமளிக்கும் வழிகாட்டுதலாகவும் எடுத்துக்கொள்வது சிறந்த அணுகுமுறையாகும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஜோதிடம்
ராசி பலன்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ஆன்மீகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rasipalan: யாருக்கு யோகம்? யாருக்கு அதிரடி திருப்பம்? உங்கள் ராசி என்ன சொல்கிறது தெரியுமா?
Recommended image2
Zodiac Signs: இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஸ்பெஷல்! தனிமைதான் இவங்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்! உங்க ராசி இருக்கா?
Recommended image3
Chanakya Niti: இந்த 3 விஷயங்களில் பணம் செலவு பண்ணுங்க... வாழ்க்கையே மாறும்னு சொல்கிறார் சாணக்கியர்!
Related Stories
Recommended image1
Astrology: சூர்ய பார்வையால் கொட்டப்போகும் பணம்! 3 ராசிகளுக்கு நல்ல காலம் பொறக்குது!
Recommended image2
Astrology: சுக்கிர திசையை ஓரங்கட்டும் கேது பார்வை.! இனி பென்ஸ் கார்ல போகும் 3 ராசிகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved